Home
News

Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!

ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு புதிய மால்வேர் தாக்குதல் எச்சரிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த ஆண்ட்ராய்டு மால்வேர், ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான தாக்குதலை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இருக்கும் 8 மொபைல் ஆப்ஸ்களில் இந்த மால்வேர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்!

ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்!

இந்த ஆப்ஸ் உங்களிடம் இருக்கிறதா என்பதை முதலில் செக் செய்து, உடனே அவற்றை டெலீட் செய்யுங்கள். ஆப்பிள் பயனர்களை விட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்குத் தான் மால்வேர் அச்சுறுத்தல்கள் அதிகமாக ஏற்படுகிறது. ஆப்பிளின் பாதுகாப்பு அம்சமும், ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அம்சமும் வெவ்வேறு விதத்தில் வேறுபட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். அதேபோல், குறிப்பாக, கூகிள் பிளே ஸ்டோரில் ஏராளமான இலவச ஆப்ஸ்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன.

ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் புதிய மால்வேர்

ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் புதிய மால்வேர்

இதில் சில ஆப்ஸ்கள் மோசக்காரர்களால் அல்லது ஹேக்கர்களால் மோசடிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதைக் கூகிள் நிறுவனம் என்ன தான் தீவிரமான கண்காணித்து வந்தாலும் கூட, எப்படியோ சில கேட்வேக்களை மோசக்காரர்கள் பயன்படுத்தி, அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் ஆப்ஸ்களில் மால்வேர்களை நிறுவிவிடுகிறாள். கூகிள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் சில இது போன்ற ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ஸ்களை தீவிரமான கண்காணித்து வருகின்றன.

ஆடோலைகஸ் (Autolycos) மால்வேர் தாக்குதல்

ஆடோலைகஸ் (Autolycos) மால்வேர் தாக்குதல்

அப்படிக் கண்காணிக்கப்பட ஒரு சமீபத்திய ஆய்வில் 8 ஆப்ஸ்களில் ஆடோலைகஸ் (Autolycos) என்ற மால்வேரை தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள எட்டு ஆப்களில் Autolycos எனப்படும் மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 8 பயன்பாடுகளும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயனர்களால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் ஆப்ஸ்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி இது தானா?

கூகிள் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி இது தானா?

இந்த ஆப்ஸ்களின் ஒட்டுமொத்த பதிவிறக்க எண்ணிக்கை அதிகமாக இருப்பதனாலும், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமாக இருப்பதனாலும், கூகிள் நிறுவனம் இப்போது அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. Maxime Ingrao என்ற பாதுகாப்பு ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையின் தகவல் படி, இந்த ஆபத்தான மால்வேர் 8 மொபைல் ஆப்ஸ்களில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆடோலைகஸ் மால்வேர் அவ்வளவு மோசமானதா?

ஆடோலைகஸ் மால்வேர் அவ்வளவு மோசமானதா?

இவை அனைத்தும் ஏற்கனவே 3 மில்லியன் முறை ஆண்ட்ராய்டு பயனர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு சிறிய எண்ணிக்கையாகச் சிலருக்குத் தோன்றலாம், ஆனால், இதை அச்சுறுத்தல் கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த எண்ணிக்கை அதிகமாக பார்க்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மோசமான மால்வேர்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. உண்மையிலே இந்த ஆடோலைகஸ் மால்வேர் அவ்வளவு மோசமானதா?

என்ன விதமான பாதிப்புகளை இது ஏற்படுத்தும்?

என்ன விதமான பாதிப்புகளை இது ஏற்படுத்தும்?

இது என்ன விதமான பாதிப்புகளை ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஏற்படுத்தும்? இது எப்படி ஒரு ஸ்மார்ட்போன் பயனரைப் பாதிக்கும்? என்பது போன்ற விபரங்களை முதலில் தெரிந்துகொள்ளலாம். ஆட்டோலிகோஸ் மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் ரிமோட் பிரௌசரின் இணையதள URLகளை இயக்குவது மற்றும் அதை HTTP கோரிக்கைகளில் சேர்ப்பது உள்ளிட்ட திருட்டுத்தனமான செயல்பாடுகளைச் செய்யும் என்று மாக்ஸிம் கண்டறிந்துள்ளார்.

ஸ்மார்ட்போனில் இருக்கும் SMS தகவலை கூட திருடுமா?

ஸ்மார்ட்போனில் இருக்கும் SMS தகவலை கூட திருடுமா?

இந்த வழியில் பயனர்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் ஏற்படக்கூடிய எந்தவொரு ஊடுருவலையும் கண்டறிவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. இந்த வழியைப் பின்பற்றி, இந்த மால்வேர்கள் தீங்கிழைக்கும் செயல்களைப் பயனரின் கவனம் இன்றி மேற்கொள்ள அனுமதிக்கிறது. உண்மையில், இந்த ஆடோலைகஸ் தீங்கிழைக்கும் மால்வேர் ஆனது சாதனத்தில் உள்ள SMS தகவல்களைப் படிக்க அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கே தெரியாமல் கட்டணத்தை கூட செலுத்தும் மோசமான மால்வேரா இது?

உங்களுக்கே தெரியாமல் கட்டணத்தை கூட செலுத்தும் மோசமான மால்வேரா இது?

இதன் படி, உங்கள் இன்பாக்சில் வரும் அனைத்து SMS தகவலையும் இந்த மால்வேர் அணுகுகிறது. நீங்கள் பெறும் SMS செய்திகளுக்கான அணுகலை வழங்குவதோடு, இந்த மால்வேர் பிரீமியம் சேவைகளுக்கான கட்டணத்தையும் தானாகச் செலுத்தும் வாய்ப்புகளும் கூட அதிகமாகக் காணப்படுகிறது என்கிறார் மாக்ஸிம். இதுபோன்ற செயல்பாடுகளை இந்த மால்வேர், பயனரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மிகவும் சைலெண்டாக செய்து முடிகிறது.

கூகிள் ரேடாரில் சிக்கிய ஆடோலைகஸ் மால்வேர்

கூகிள் ரேடாரில் சிக்கிய ஆடோலைகஸ் மால்வேர்

உங்களால் கூட இவற்றை எளிதில் கண்டறிய முடியாது என்றும் மாக்ஸிம் கூறியுள்ளார். எனவே, தான் இந்த மால்வேர் ஒரு மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களை கண்டுபிடித்து அவற்றை Google நிறுவனத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாக அறிக்கை தகவல் குறிப்பிடுகிறது. கூகிள் நிறுவனத்திடம் இந்த மால்வேர் பற்றிய புகார்களும் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்ஸ் ஸ்கிரீனிங்கில் சில முன்னேற்றங்கள் இருந்தும் இப்படியா?

ஆப்ஸ் ஸ்கிரீனிங்கில் சில முன்னேற்றங்கள் இருந்தும் இப்படியா?

கூகிளின் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, இந்த பாதிக்கப்பட்ட மால்வேர் ஆப்ஸ்களை கூகிள் அதன் Play Store இலிருந்து நீக்கியுள்ளது. இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்கக் கூகிள் அதன் ஆப்ஸ் ஸ்கிரீனிங்கில் சில முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இருப்பினும், இது போன்ற மால்வேர் தாக்குதல் தொடர்ந்து ஆண்ட்ராய்டு தளத்தில் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், கூகிள் இன்னும் தீவிரமாக சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது.

Autolycos மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களை கூகிள் என்ன செய்தது?

Autolycos மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களை கூகிள் என்ன செய்தது?

முன்னே சொன்னது போல, இந்த ஆப்ஸ் அனைத்தும் மொத்தமாக 3 மில்லியன் முறை இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இது 3 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், கூகிள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 6 ஆப்ஸ்களை நீக்கியுள்ளது. மற்ற இரண்டும் ஆப்ஸ்களையும் நீக்கம் செய்யவுள்ளது. Autolycos மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட இந்த 8 ஆப்ஸ் உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருக்கிறதா என்பதை உடனே செக் செய்யுங்கள்.

Autolycos மால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதை உடனே செய்யுங்கள்

Autolycos மால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதை உடனே செய்யுங்கள்

  • Vlog Star Video Editor
  • Creative 3D Launcher
  • Wow Beauty Camera
  • Gif Emoji Keyboard
  • Freeglow Camera 1.0.0
  • Coco Camera v1.1
  • Funny Camera' by KellyTech
  • Razer Keyboard & Theme' by rxcheldiolola
  • இந்த ஆப்ஸ்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், நீங்கள் Autolycos மால்வேரால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்று அர்த்தம். உடனே உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, உங்கள் ஸ்மார்ட்போனில் காணப்படும் பாதிக்கப்பட்ட ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
New Autolycos Android Malware Can Access SMS Messages On Your Phone Be Alert
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X