புது ATM, UPI ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட்டில் பணம்.. 2026 மார்ச்-க்கு முன் 2 அதிரடி மாற்றம்.. என்னென்ன மாறுது?
ஏடிஎம், யுபிஐ மற்றும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக 2 மிகப்பெரிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் பணம் எடுக்கும் முறையே மாற இருக்கிறது. 75 சதவீத பணத்தை மட்டுமே எடுக்கும்படி விதிகள் கொண்டுவரப்படுகிறது. ஆகவே, என்னென்ன மாறப்போகிறது என்பதை ஊழியர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை எளிதாக எடுக்க 2 மாற்றங்களை அமல் செய்ய இருக்கிறது. ஏடிஎம் (ATM) வழியாகவும், யுபிஐ (UPI) வழியாகவும் நேரடியாக பணத்தை எடுப்பதை இந்த விதிகள் உறுதி செய்கின்றன.

குறிப்பாக பணத்தை எடுக்கும் போது இதில் லிமிட் வர இருக்கிறது. அதேபோல ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்புடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் இதற்கு முக்கியமாக இருக்கிறது. இந்த விதிகளின்படி எப்போதில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்பது மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மூலம் உறுதியாகி இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே ஏடிஎம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை வழியாக பிஎப் பணத்தை எடுக்கலாம் (PF Withdrawal) என்பதை மன்சுக் மாண்டவியா உறுதி செய்து உள்ளார். இவரது கூற்றுப்படி, இபிஎப் உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதியை எடுக்க பல படிவங்களை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும், 75 சதவீதம் பிஎஸ் பணத்தை எடுக்க முடியும்.
1. பிஎப் பணத்தை எடுக்கும் நடைமுறையில் பல வகை பிரிவுகள் இருக்கின்றன. இதனால், உரிய நேரத்தில் பணத்தை பெற முடியவில்லை. ஊழியர்களின் பணம் எடுக்கும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. ஆகவே, பணத்தை எடுக்கும் நடைமுறையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது, இந்த ஏடிஎம் மற்றும் யுபிஐ நடைமுறையை அமல் செய்ய இருக்கிறது.
2. ஊழியர்கள் சொந்த பங்களிப்புக்கான தொகையை மட்டுமே வட்டியுடன் சேர்த்து எடுக்க முடிந்தது. இதிலும் குறிப்பிட்ட காரணத்தின் அடிப்படையில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக ஊழியரின் பங்களிப்பு மற்றும் வட்டிக்கு கூடுதலாக நிறுவனத்தின் பங்களிப்பையும் எடுக்கலாம்.
3. ஊழியரின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு சேரும்போது 75% பணத்தை எடுக்க முடியும். இபிஎப் உறுப்பினர்கள் ஒரு வருட சேவையை முடித்த பிறகு அதிக தொகையை எடுக்கலாம். மேலும், வேலையின்மை காரணமாக, இபிஎப் உறுப்பினர்கள், பிஎப் இருப்பில் உள்ள 75 சதவீத தொகையை உடனடியாக பெற்று கொள்ளலாம். இதில் ஊழியரின் பங்களிப்பு மட்டுமல்ல,
நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் ஈட்டப்பட்ட வட்டி ஆகியவையும் அடங்கும். மீதமுள்ள 25 சதவீதத்தை ஓராண்டுக்கு பிறகு இபிஎப் உறுப்பினர்கள் பெற்று கொள்ளலாம். 55 வயதுக்கு பிறகு ஓய்வு பெறுதல், நிரந்தர ஊனம், வேலை செய்ய இயலாமை, ஆட்குறைப்பு, விருப்ப ஓய்வு அல்லது இந்தியாவிற்கு வெளியே நிரந்தரமாகக் குடியேறுதல் உள்ளிட்ட நேரத்தில் முழு தொகையை பெறலாம்.
4. இந்த விதிகளுடன் ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாக பிஎப் பணத்தை எடுத்து கொள்ளலாம். அதிக தொகையாக இருந்தால், பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த தொகை பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட பேங்குக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக இந்த விதிகள் அமல் செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








