Home
News

ஏப்.1 முதல் புது லிமிட்.. ATM UPI க்கு வருகிறது முக்கிய மாற்றம்.. மீறினால் கட்டணம்.. பிரபல வங்கி அதிரடி!

எச்டிஎப்சி வங்கியானது (HDFC Bank) தனது ஏடிஎம் யுபிஐ (ATM UPI) பரிவர்த்தனை கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட விதியானது வருகிற 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

ஏடிஎம் மையங்களில் யுபிஐ (UPI) சேவை மூலம் பணம் எடுக்கும் வசதியான யுபிஐ ஏடிஎம் வித்ட்ராவல்கள் (UPI ATM Withdrawals) ஆனது, கூடிய விரைவில் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குள் (Monthly free transaction cap) சேர்க்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

ஏப்.1 முதல் புது லிமிட்.. ATM UPI க்கு வருகிறது முக்கிய மாற்றம்!

இது சேவிங்ஸ் அக்கவுண்ட் (Savings Account) மற்றும் சேலரி அக்கவுண்ட் (Salary Account) வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது - யுபிஐ ஏடிஎம் வித்ட்ராவல்கள் ஆனது வாடிக்கையாளர்களின் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பின் ஒரு பகுதியாக சேர்க்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

இதன் பொருள், ஏடிஎம்-ல் கார்டு இல்லாமல் யுபிஐ பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையும், ஒவ்வொரு மாதமும் அனுமதிக்கப்பட்ட மொத்த இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் (Total number of free transactions per Month) கணக்கிடப்படும். இலவச ஒதுக்கீடு தீர்ந்த உடன், நிலையான கட்டணங்கள் (standard charges) வசூலிக்கப்படும்.

இது குறித்து எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு தகவலில், ஏடிஎம் வழியாக யுபிஐ அடிப்படையில் பணம் எடுப்பது (UPI based cash withdrawals) இனி ஒரு தனி வகையாக (separate category) கருதப்படாது என்று தனியார் துறை கடன் வழங்குநர்ஆன எச்டிஎப்சி தெளிவுபடுத்தி உள்ளது.

இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகான கட்டண விவரங்கள்: வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர வரம்பை மீறும்போது பொருந்தும், கட்டண விவரங்களையும் எச்டிஎப்சி வங்கி குறிப்பிட்டுள்ளது. இலவச வரம்பு தீர்ந்தவுடன், பணம் எடுப்பதற்கு ரூ. 23 + வரிகள் கட்டணம் பொருந்தும் எச்டிஎப்சி அறிவித்துள்ளது

தற்போது, ​​சேமிப்பு மற்றும் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்களில் ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். எச்டிஎப்சி வங்கி அல்லாத ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, முக்கிய நகரங்களில் மூன்று முறை இலவசமாகவும், நான்டாப் சிட்டிகளில் ஐந்து முறை இலவசமாகவும் பணம் எடுக்கலாம்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வரவிருக்கும் மாற்றத்துடன், யுபிஐ அடிப்படையிலான ஏடிஎம் பணம் எடுக்கும் முறையும், வழக்கம் போல ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையும் - தற்போதைய வரம்புகளுக்குள் கணக்கிடப்படும். பல்வேறு பரிவர்த்தனை சேனல்களில் அதன் கட்டண கட்டமைப்பில் சீரான தன்மையை கொண்டு வருவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே எச்டிஎப்சி வங்கி இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக விளக்கமும் அளித்துள்ளது.

இந்த மாற்றம் வெளிப்படையான மற்றும் நிலையான பரிவர்த்தனை கட்டணங்களை பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று எச்டிஎப்சி-யின் தகவல் தொடர்பு தெரிவித்துள்ளது. டெபிட் கார்டை (ஏடிஎம் கார்ட்டை) பயன்படுத்தியோ அல்லது யுபிஐ மூலமாகவோ மேற்கொள்ளப்பட்டாலும், எப்படி ஏடிஎம் வழியாக பணம் எடுப்பது கணக்கிடப்படுகிறது என்பதை இந்த நடவடிக்கை திறம்பட தரப்படுத்தும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ அடிப்படையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் முறை எவ்வாறு செயல்படுகிறது? யுபிஐ இயக்கப்பட்ட ஏடிஎம்கள் (UPI-Enabled ATMs) ஆனது வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டை (ஏடிஎம் கார்ட்டை) செருகாமலேயே பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன. பயனர்கள் தங்கள் யுபிஐ ஆப்பை பயன்படுத்தி இணக்கமான ஏடிஎம் ஸ்க்ரீன்களில் காட்டப்படும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக குறிப்பிட்ட பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும்.

VERDICT: பாதுகாப்பான, ஏடிஎம் / டெபிட் கார்டு இல்லாத பண அணுகலை ஊக்குவிக்கவும், மக்கள் பிஸிக்கல் கார்டுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்த அம்சம் படிப்படியாக வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் 2026 முதல், இந்த வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர ஏடிஎம் பயன்பாட்டை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும், ஏனெனில் யுபிஐ அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை இப்போது அவர்களின் ஒட்டுமொத்த இலவச பரிவர்த்தனை வரம்பின் ஒரு பகுதியாக மாறவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New ATM UPI Rule From HDFC Bank From April 1 UPI ATM Withdrawals To Be Included In Free Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X