Home
News

புது ATM ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதுதான் புது லிமிட்.. 3 முக்கிய மாற்றங்கள்!

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பேங்க் கஸ்டமர்களுக்கு 4 முக்கிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எச்டிஎப்சி, எஸ்பிஐ, பிஎஸ்பிடி அக்கவுண்ட் மற்றும் பான் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு நேரடியாக மாற்றங்கள் வர உள்ளன. ஏடிஎம், யுபிஐ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மாற்றங்கள் இருக்கும். இந்த புதிய பேங்க் விதிகள் குறித்த விவரங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எச்டிஎப்சி பேங்க் ஏடிஎம் விதிகள் (HDFC Bank ATM Rules): டெபிட் கார்டு பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுப்பதும், யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம் வழியாக பணம் எடுப்பதும் தனித்தனியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன. இதனால், மாதாந்திர லிமிட்டில் டெபிட் கார்டு வழியாக எடுக்கப்படுவது மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆனால், இது மாற்றப்பட உள்ளது.

புது ATM ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. என்ன?

ஆகவே, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ பயன்படுத்தி ஏடிஎம் வழியாக பணம் எடுப்பதாலும் அது டெபிட் கார்டு பயன்படுத்தி எடுக்கும் லிமிட்டில் சேர்க்கப்படும். இதனால், தனித்தனியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுவது நிறுத்தப்படும். ஒரே லிமிட்டின் கீழ் கொண்டுவரப்படும். ஆகவே, குறிப்பிட்ட லிமிட்டுக்கு மேல் பணத்தை எடுத்தால், கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் லிமிட்டை கஸ்டமர்களை கடந்துவிட்டால், கூடுதலாக பணம் எடுப்பதற்கு 1 பரிவர்த்தனைக்கு ரூ.23 செலுத்த வேண்டி இருக்கும். கூடுதல் கட்டணங்களும் இருக்கும். இந்த கட்டணமே யுபிஐ வழியாக ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கஸ்டமர்களுக்கும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பொருந்த இருக்கிறது. ஆகவே, ஒரே ஏடிஎம் சார்ஜ் மட்டுமே அமலாகும்.

எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்களுக்கு மாதத்திற்கு 5 முறை இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. இது எச்டிஎப்சி ஏடிஎம்களாக இருக்க வேண்டும். மற்ற பேங்க் ஏடிஎம்களில், பணத்தை எடுத்தால் பெருநகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ளலாம்.

எஸ்பிஐ பேங்க் ரிவார்டு பாயின்ட்கள் விதிகள் (SBI Reward Points Rules): எஸ்பிஐ கஸ்டமர்கள் இனிமேல் மாதத்துக்கு அதிகபட்சம் 60,000 ரிவார்டு பாயிண்ட்களை மட்டுமே ரீடெம்ஷன் செய்து கொள்ள முடியும். கூடுதலாக ரிவார்டு பாயிண்ட்களை வைத்திருந்தாலும், இந்த லிமிட்டுக்கு மேல் ரீடெம்ஷன் செய்ய முடியாது. அதை அடுத்த மாதத்தில் லிமிட்டில் செய்து கொள்ளலாம்.

இந்த விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. ஏர் இந்தியா எஸ்பிஐ சிக்னேச்சர் கார்டு (Air India SBI Signature Card) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) ஆகியவற்றுக்கு இது பொருந்தாது. அதேபோல போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) கார்டுக்கும் இந்த விதிகள் பொருந்தாது.

பிஎஸ்பிடிஏ ரூல்ஸ் (BSBDA Rules): பிஎஸ்பிடிஏ சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் (Basic Savings Bank Deposit Account) வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் அமலுக்கு வந்தால் அன்லிமிடெட் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

கேஷ் டெபாசிட், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் டெபாசிட், ஆன்லைன் பரிவர்த்தனைகள் டெபாசிட் மற்றும் செக் டெபாசிட் ஆகியவையும் இதில் அடங்கும்.ஏடிஎம் கார்டுக்கு வருடாந்திர கட்டணங்கள் விதிக்கப்படாது. 1 வருடத்துக்கு குறைந்தது 25 செக்குகள் கொடுக்கப்படும். மொபைல், இன்டர்நெட் பேங்கிங் சேவைகள் இலவமாக கிடைக்கும். பான் கார்டு விதிகளிலும் மாற்றங்கள் வருகின்றன.

ரூ.50,000 மேல் பரிவர்த்தனைகள் செய்தால் பான் கார்டு விவரங்கள் கேட்கப்படுகிறது. ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையில் பான் கார்டு இல்லாமலேயே பரிவர்த்தனைகளை செய்யலாம். இது டெபாசிட் உள்ளிட்டவைக்கு பொருந்தும். இந்த விதிகளையும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அமலுக்கு கொண்டுவர உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New ATM Transactions Rules For HDFC Customers Came To Effect From April 1 Check Transaction Limits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X