புது ATM ரூல்ஸ்.. ரூ.23 கட்டணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பணம் எடுக்கும் முன் கட்டாயம் செய்ய வேண்டியது!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது ஏடிஎம்கள் வழியாக பணம் எடுப்பதற்கான புதிய விதிகளை (New ATM Rules).. கடந்த மே 1 ஆம் தேதி அமல்படுத்தி இருந்தது அல்லவா? இதன்கீழ் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று இருந்தது அல்லவா?
அப்படியான கேஷ் வித்ட்ராவல் சார்ஜில் (Cash Withdrawal Charges) இருந்து ஒரு தப்பிக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. இதை ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் வழியாக பணம் எடுக்கும் முன் செய்யும் பட்சத்தில் நீங்கள்.. புது ஏடிஎம் விதிகளிடம் இருந்தும், அதன் வழியிலான ரூ.23 கட்டணத்தில் இருந்து தப்பிக்க முடியும்!

அதென்ன வழி? ஏடிஎம் வழியாக பணம் எடுப்பதற்கான, உங்களுடைய இலவச வரம்பை பற்றி தெளிவாக அறிந்துகொண்டு, அந்த வரம்பின் கீழ் பணம் எடுத்தால், உங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. வாடிக்கையாளர்களால் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் 5 முறை இலவசமாக பணப்பரிவர்த்தனைகள் (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) செய்ய முடியும்.
மேலும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் ஆனது, பிற வங்கி ஏடிஎம்களில் இருந்தும் இலவச பரிவர்த்தனைகளை (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) உறுதிப்படுத்தியுள்ளது. இதன்கீழ் பெருநகர ஏடிஎம் மையங்களில் 3 பரிவர்த்தனைகள் மற்றும் பெருநகரம் அல்லாத மையங்களில் 5 பரிவர்த்தனைகள் கிடைக்கும்.
இப்படியாக உங்களுடைய இலவச வரம்புகள் என்ன என்பதை அறிந்து வைத்து இருப்பதன் மூலமும்.. ஒவ்வொரு மாதமும் எத்தனை முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்தோம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்வதன் மூலமும் இந்த ரூ.23 கட்டணத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். அதுமட்டுமின்றி அடிக்கடி சிறிய அளவிலான தொகைகளை எடுப்பதற்கு பதிலாக, 2 அல்லது 3 முறை பெரிய அளவிலான தொகைகளை எடுப்பதும் கூட ரூ.23 கட்டணத்தில் இருந்து உங்களை காப்பாற்றும்.
எல்லாவற்றை விட முக்கியமாக, ஒருவேளை நீங்கள் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தவில்லை என்றால், முடிந்த வேகத்தில் அவைகளை பழக தொடங்குங்கள். நீங்கள் முழுவதுமான யுபிஐ ஆப்களின் பக்கம் சாய்ந்து விட்டால், ஏடிஎம் பக்கம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது; இந்த இடத்தில் சில குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டு என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
மிகவும் சமீபத்தில் அமலுக்கு வந்த மற்ற புதிய விதிகள்: ஒரு நபரின் இந்திய குடியுரிமையை (Indian Citizenship) நிரூபிக்க ஆதார் அட்டை (Aadhaar Card), பான் அட்டை (PAN Card) அல்லது ரேஷன் கார்டு (Ratio Card) இனி செல்லுபடியாகாது என்றும், குடியுரிமைக்கான சான்றாக வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) அல்லது பாஸ்போர்ட் (Passport) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வசிக்கும் ஏராளமான வெளிநாட்டினர், குறிப்பாக வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள், ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இந்திய குடியுரிமையை தவறாக கோருவது கண்டறியப்பட்டது. இது இந்திய குடிமக்களை துல்லியமாக அடையாளம் காண்பதை கடினமாக்கியுள்ளது. எனவே, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான புதிய சிபில் ஸ்கோர் விதிகளையும் (New Cibil Score Rules 2025) அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் கடன் ஒப்புதல் செயல்முறையில் (Loan Approval Process) 4 முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது:
1. உங்கள் கிரெடிட் ஸ்கோர் காரணமாக உங்கள் லோன் (ஹோம் லோன், கார் லோன் அல்லது பெர்சனல் லோன்) தாமதமானாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, கடன் வழங்குபவர்கள் அதற்கான காரணத்தை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்
2. இரண்டாவது மாற்றம்) நீங்கள் செய்த தவறுகளை சரிசெய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.
3. குறைவான ஸ்கோரை மட்டுமே அடிப்படையாக கொண்டு நடக்கும் ஆட்டோமெட்டிக் ரிஜெக்ஷன்கள் இனி இருக்காது; மாறான மனித மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
4. சிபில் ரிப்போர்ட்கள் இப்போது அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டும்


Click it and Unblock the Notifications








