Home
News

ஏப்.1 முதல் புதிய ATM விதிகள், புதிய லிமிட்.. இனி 1 நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்க முடியும்? எத்தனை முறை FREE?

புதிய நிதியாண்டின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள வங்கிகள், ஏடிஎம் பயன்பாட்டில் சில புதிய மாற்றங்களை அறிமுகம் செய்யவுள்ளன. அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ஏடிஎம் விதிகள் (New ATM Rules) அமலுக்கு வருகின்றன.

முன்னணி வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பணம் எடுப்பதற்கான வரம்புகள் (Withdrawal limits), பரிவர்த்தனை கட்டணங்கள் (Transaction charges) மற்றும் வாடிக்கையாளர்கள் பணத்தை அணுகும் விதம் (Cash access by customers) ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்.1 முதல் புதிய ATM விதிகள், புதிய லிமிட்.. இனி 1 நாளைக்கு?

எச்டிஎஃப்சி பேங்க்: தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் ஆனது, ஏடிஎம்களில் யுபிஐ மூலம் எடுக்கப்படும் பணம் இனி மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு, ஏடிஎம் வழியாக எவ்வளவு முறை இலவசமாக பணம் எடுக்க முடியும் என்கிற வரம்பின் கீழ் யுபிஐ வழியிலான ஏடிஎம் பணபரிவர்த்தனையும் சேர்க்க்கப்படும்.

முன்னதாக யுபிஐ அடிப்படையிலான ஏடிஎம் பணப்பரிவர்த்தனை ஆனது ஒரு தனி பிரிவாக கருதப்பட்டது. இனி இவ்வகை பரிவர்த்தனையும் கூட அனுமதிக்கப்பட்ட மொத்த இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் கணக்கிடப்படும். தங்கள் மாதாந்திர வரம்பை மீறும் வாடிக்கையாளர்களுக்கு, பொருந்தக்கூடிய வரிகள் நீங்கலாக, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.

தற்போது, ​​பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்கவும், பெருநகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள் மற்றும் பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் உள்ள மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் எடுக்கவும் தகுதி பெற்றுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் பேங்க்: இன்னொரு பொதுத்துறை வங்கி ஆன பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுக்கும் வரம்புகளை திருத்தியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டு வகையை பொறுத்து ஒரு நாளைக்கு ரூ. 50,000 முதல் ரூ. 75,000 வரை எடுக்க முடியும்.

முன்னதாக ரூ.1,00,000 வரை எடுக்க அனுமதித்த சில கார்ர்டுகளில், இனி வரம்புகள் குறைக்கப்படும். பயன்பாட்டை தரப்படுத்துவதையும் (Standardizing usage), இடர் மேலாண்மையை மேம்படுத்துவதையும் (improving risk management) நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் கூறுகிறது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய பான் கார்டு விதிகள் (New PAN Card Rules): ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. முதலாவதாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் புதிய பான் விண்ணப்ப விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த மாற்றங்கள் - ஆவணங்கள், படிவங்கள் மற்றும் ஒட்டுமொத்த விண்ணப்ப செயல்முறையை பாதிக்க உள்ளது. மார்ச் 31 ஆம் தேதி வரை, நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையை (Aadhaar Card) மட்டும் பயன்படுத்தி பான் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் மார்ச் 31 ஆம் தேதிக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் மட்டுமே போதுமான அடையாள ஆவணமாக இருக்காது.

விண்ணப்பதாரர்கள் ஆதார் விவரங்களுடன், சில கூடுதல் ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), ஓட்டுநர் உரிமம் மற்றும் மெட்ரிகுலேஷன் சான்றிதழ் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக இருக்கும். தேவைப்பட்டால் பிரமாண பத்திரங்கள் மற்றும் பிற அரசு ஆவணங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் பாஸ்டாக் விலை உயர்வு (FASTag Price hike): என்எச்ஏஐ (NHAI) ஆனது வரவிருக்கும் 2026-27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டாக் ஓராண்டு பாஸ் கட்டணத்தை (FASTag Annual Pass Price) திருத்தி உள்ளது. இதன் வணிக நோக்கமற்ற வாகன பயனர்கள் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு பாஸுக்கு ரூ.3000 க்கு பதிலாக ரூ.3075 செலுத்த வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New ATM Rules From April 1 Free Cash Withdrawal Limits and Daily Limit are Changing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X