Home
News

புது ATM சார்ஜ்.. இனிமே 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதுதான் புது லிமிட்.. எந்த பேங்க்? எந்தெந்த அக்கவுண்ட்?

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் புதிய ஏடிஎம் கட்டண மாற்றங்கள் வயற்றில் புளியை கரைப்பது போல இருக்கிறது. சேவிங் அக்கவுண்ட் மற்றும் சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நேரடி மாற்றத்தை இந்த புதிய ஏடிஎம் கட்டண மாற்றம் கொண்டுவர இருக்கிறது. என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஆனது புதிய ஏடிஎம் கட்டண மாற்றங்களை செய்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இந்த கட்டணங்கள் மாற்றம் வந்துள்ளதால் , தனியார் பேங்குகளிலும் ஏடிஎம் கட்டண மாற்றங்கள் இருக்கும். இதனாலேயே ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

புது ATM சார்ஜ்.. இனி 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதுதான் புது லிமிட்!

புதிய ஏடிஎம் கட்டண மாற்றம்

1. எஸ்பிஐ பேங்கில் சேவிங் அக்கவுண்ட் கணக்கு மற்றும் சேலரி அக்கவுண்ட்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் பணத்தை எடுக்கும்போது, கொடுக்கப்பட்ட லிமிட்டை மீறினால் இனிமேல் கூடுதல் கட்டண்தை செலுத்த வேண்டி உள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டும் பணத்தை எடுத்தால் வழக்கம்போல கூடுதல் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.

2. எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் பணத்தை எடுக்கும்போது, கொடுக்கப்பட்ட லிமிட்டுக்கு மேல் பணத்தை எடுத்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வசூலிக்கப்படும். கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த ஏடிஎம் கட்டணம் முன்னதாக ரூ.21 ஆக இருந்தது. இப்போது ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மினி ஸ்டேட்மென்ட் மற்றும் பேலன்ஸ் சரிபார்ப்புக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

3. நிதி அல்லாத பரிவர்த்தனைகளில் (Non-financial Transactions) பேலன்ஸ் சரிபார்ப்புகள் (Balance Enquiries) மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் (Mini Statements) ஆகியவற்றுக்கும் ரூ.10 ஆக இருந்து கட்டணம் இப்போது ரூ.11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதிலும் கூடுதலாக ஜிஎஸ்எடி இருக்கும். சேவிங் அக்கவுண்ட் வைத்திருந்தால் எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை பணத்தை எடுக்கலாம்.

4. இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை எடுக்கும்போது மட்டுமே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மற்றப்படி 5 முறை மட்டுமே பணத்தை எடுத்து வந்தால், எந்தவித கூடுதல் கட்டணத்தையும் சேவிங் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் செலுத்த வேண்டாம். இதில் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் கட்டணங்களாக இருக்கிறது.

5. எஸ்பிஐ பேங்கில் சேலரி அக்கவுண்ட் (Salary Accounts) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் மாதத்திற்கு 10 இலவச பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இது கிராமப்புறங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். முன்னதாக சேலரி அக்கவுண்ட் கஸ்டமர்களுக்கு எந்த லிமிட்டும் விதிக்கப்படவில்லை. இப்போது லிமிட் வந்துவிட்டது.

6. ஆகவே, 10 முறைக்கு மேல் பணத்தை எடுத்தால், ஏடிஎம் கட்டணம் வசூலிக்கப்படும். பிஎஸ்பிடி (BSBD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit) அக்கவுண்ட்களுக்கு எந்தவித ஏடிஎம் கட்டணங்களும் பொருந்தாது. வழக்கம்போல கட்டணமில்லாமல், ஏடிஎம்களில் பணத்தை எடுத்து கொள்ளலாம்.

7. எஸ்பிஐ ஏடிஎம்களில் டெபிட் கார்டுகள் வழியாக பணத்தை எடுக்கும் கஸ்டமர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், எஸ்பிஐ ஏடிஎம்களில் கார்ட்லெஸ் பரிவர்த்தனை செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படாது. கிசான் கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த புதிய ஏடிஎம் கட்டண விதிகள் பொருந்தாது. மேலும், எஸ்பிஐ பேங்கில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் மாற்றங்கள் வந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New ATM Charges For Savings Account Salary Account Holders Check SBI ATM Charges Limits 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X