4.4 கிலோ, 24-இன்ச் டிஸ்பிளே, 24GB ரேம், 1TB மெமரி.. Apple-ன் புதிய iMac இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய 24-இன்ச் ஐமேக் மாடலின் ரெஃப்ரெஷ்டு வெர்ஷனை (Refreshed version of 24-inch iMac) இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடல், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 3என்எம் எம்4 சிப் (3nm M4 chip) மற்றும் 4.5கே ரெடினா டிஸ்பிளே (4.5K Retina display) கொண்டுள்ளது.
கூடவே ஆப்பிள் நிறுவனம் இந்த மாடலை - டச் ஐடி உடனான மேஜிக் கீபோர்ட், மேஜிக் மவுஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய மேஜிக் டிராக்பேட் ஆகிய அக்ஸசெரீஸ்களுடன் அப்கிரேடும் செய்துள்ளது ஆப்பிள் சிலிக்கான் சிப்செட் மூலம் இயங்கும் அதன் அனைத்து லேட்டஸ்ட் கம்பியூட்டர்களை போலவே இந்த புதிய 24-இன்ச் ஐமேக் மாடலும், புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை (Apple Intelligence features) ஆதரிக்கிறது.

ஆப்பிளின் புதிய 24-இன்ச் ஐமேக் 2024 மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 4.5கே, 4480 x 2250 பிக்சல்கள், 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் , நானோ-டெக்ஸ்ச்சர் மேட் கிளாஸ் ஃபினிஷ் கொண்ட 24-இன்ச் ரெடினா டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் இது சென்டர் ஸ்டேஜ் மற்றும் 1080p வீடியோ பதிவிற்கான ஆதரவுடன் புதுப்பிக்கப்பட்ட செல்பீ கேமராவுவையும் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, ஆப்பிள் இந்த லேட்டஸ்ட் ஆல் இன் ஒன் கம்ப்யூட்டரில், அதன் சமீபத்திய எம்4 சிப்பை பேக் செய்துள்ளது. இது TSMC-ன் 3எம்எம் செயல்முறை தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
எம்4 சிப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின் உள்ளது, இது அமெரிக்காவில் உள்ள தகுதியான டிவைஸ்களுக்கு வெளிவரத் தொடங்கியுள்ள ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களுக்கான ஆதரவை செயல்படுத்துகிறது. மேலும் இது 8-கோர் சிபியு / 8-கோர் ஜிபியு மற்றும் 10-கோர் சிபியு /108-கோர் ஜிபியு விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, புதிய ஐமேக் மாடலில் வைஃபை 6இ , ப்ளூடூத் 5.3, நான்கு தண்டர்போல்ட் 4 / யூஎஸ்பி 4 போர்ட்கள் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் உள்ளன. இது ஒரு ஜிகாபிட் ஈதர்நெட் போர்ட்டுடனும் கட்டமைக்கப்படலாம், மேலும் டச் ஐடி உடனான மேஜிக் கீபோர்ட், மேஜிக் மவுஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய மேஜிக் டிராக்பேட் ஆகியவைகளுடன் இணக்கமாகவும் இருக்கும்
மேலும் ஐமேக் 24-இன்ச் 2024 மாடலில் ஸ்பேஷியல் ஆடியோ (டால்பி அட்மாஸ் கன்டென்ட்) ஆதரவுடன் ஆறு-ஸ்பீக்கர் செட்டப், ஹே சிரி டிடெக்ஷன் மற்றும் த்ரீ-மைக் அரே வித் டைரக்ஷனால் டிஃபார்மிங் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. கடைசியாக இது அளவீட்டில் 547 x 461 x 147மிமீ மற்றும் 4.44கிலோ எடையுள்ளதாக இருக்கிறது.
என்ன விலை? 8-கோர் சிபியு, 8-கோர் ஜிபியு, 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஆப்பிளின் புதிய 24 இன்ச் ஐமேக் மாடலின் விலை ரூ .1,34,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 10-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட் ஆனது ரூ.1,54,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக உள்ள 10-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட் ஆனது ரூ.1,74,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள 10-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 24ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஆப்பிளின் புதிய 24 இன்ச் ஐமேக் மாடலின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது ரூ.1,94,900 க்கும் வாங்க கிடைக்கும்.
மேற்கண்ட அனைத்து வேரியண்ட்களுமே நீலம் (Blue), பச்சை (Green), ஆரஞ்சு (Orange), இளஞ்சிவப்பு (Pink), ஊதா (Purple), சில்வர் (Silver), மஞ்சள் (Yellow) ஆகிய கலர்களில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இது நவம்பர் 8 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், பிற சந்தைகளிலும் விற்பனைக்கு வரும்!


Click it and Unblock the Notifications








