VEE-TRACE APP அறிமுகம்: நம்ம அருகில் யாருக்கு கொரோனா இருக்கு?

|

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தனியார் கல்லூரியின் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சி VEE-TRACE APP எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரிப்பு

அதேபோல் இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர்

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர்

மேலும் மாநிலங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலும் முதல்முறையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்த நிலையில் தமிழகத்தில் நாளையுடன் 21 நாட்கள் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

இதையடுத்து நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற இருக்கிறார். இதில் ஊரடங்கு உத்தரவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் இறுதி வரை அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார்.

VEE-TRACE APP எனும் புதிய செயலி

VEE-TRACE APP எனும் புதிய செயலி

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 10மீ., 100 மீ., மற்றும் 1 கி.மீ இடைவெளியில் இருந்தால் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தனியார் கல்லூரியின் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சி VEE-TRACE APP எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அந்த மாவட்ட மக்கள் பயன்பெருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New app introduced by salem corp its help to find nearest corona victims

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X