புது APAAR கார்டு.. இனி Aadhaar கார்டு.. PAN கார்டு மட்டுமில்ல.. வந்தது ஒரே கார்டு.. இல்லனா, என்ன நடக்கும்?
ஆதார் கார்டு (Aadhaar Card) இருந்தா போதும்னு இருந்தாலும், அதுக்கு அப்புறம் பல கார்டுகள் வருகின்றன. ஆனால், இப்போது வந்திருக்கும் அபார் கார்டு (APAAR Card) அந்த ஆதார் கார்டையே தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. இந்த கார்டு பெற்றோர்களுக்கும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் ஒப்புதல் மூலம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த அபார் கார்டு எதற்காக அவசியமாக இருக்கிறது? இந்த அபார் கார்டு மூலம் என்னென்ன மாற இருக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டை பிறந்த குழந்தை முதல் வாங்கி கொள்ளலாம். அது முக்கியமான அடையாள சான்றாக இருக்கிறது. ஆனால், இந்த அபார் (APAAR) என்று அழைக்கப்படும் ஆட்டோமேட்டெட் பெர்மனன்ட் அகாடாமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்டரி (Automated Permanent Academic Account Registry) கார்டு அடையாள சான்று மட்டுமில்லை, கல்விக்கான முக்கிய ஆவணமாக இருக்கிறது.

மேல் நிலை பள்ளிகளில் தொடங்கி கல்லூரிகள் அல்லது அதற்கு மேலான கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த அபார் கார்டு வழங்க திட்டமிட்டப்பட்டு இருக்கிறது. இப்போது, மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறது. ஆதார் கார்டு போலவே 12 நம்பர்களை கொண்ட கார்டாக இந்த அபார் வழங்கப்படுகிறது.
அதேபோல, ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி என்னும் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதார் கார்டு போலவே இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கார்டு ஒரே சேவையை வழங்க இருக்கிறது. மாணவர்களின் விவரங்கள் இந்த அபார் கார்டு மூலம் நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளப்படுகிறது. இதில் டாக்குமென்ட்களும் அடங்கும்.
ஆகவே, டிஜிட்டலாக மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எந்த வித சிக்கலும் இல்லாமல் அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இதுவொரு வாழ்நாள் அடையாள அட்டையாக இருப்பதால், மாணவர்கள் ஆரம்ப கல்வியை தொடங்குவது முதல் உயர் படிப்பு வரையில் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களின் விவரங்களும் இதில் பதிவு செய்யப்படும். ஆகவே, ஏபிசி (ABC) என்று அழைக்கப்படும் அகாடமிக் பேங்க் கிரெடிட் ( Academic Bank Credit) சேவையும் இந்த 12 நம்பர் கொண்ட அபார் கார்டு மூலம் அனுகப்படும். இது டிஜிலாக்கர் (Digilocker) சேவைகளுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
ஆகவே, பள்ளி சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெற்று கொள்ள முடியும். கல்வி கடனை பெறுவதற்கான ஆவணங்களை கொடுக்கும்போது ஏற்படும் சிக்கல்களை இந்த அபார் கார்டு தவிர்த்துவிடும். அதேபோல ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
பிசிகல் சான்றிதழ்களை எடுத்து செல்வதையும், இது குறைக்க இருக்கிறது. இது ஆதார் கார்டு மூலமாக வெரிபிகேஷன் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதால், இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. அதேபோல பள்ளி மாணவர்களுக்கு அபார் கார்டு வழங்க பெற்றோர்களின் ஒப்புதல்கள் மாநில அரசாங்கத்தால் கேட்கப்படுகிறது.
ஆகவே, ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகே அபார் கார்டு பெற்று கொள்ள முடியும். மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் மற்றும் போட்டோ அடிப்படை விவரங்களை கொண்டு இந்த அபார் கார்டு சேவை தொடங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் வெரிபிகேஷன் செய்யப்படும். சிறார்களாக மாணவர்கள் இருந்தால், பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும்.
இப்படிப்பட்ட சேவைகளை அபார் கார்டு வழங்குகிறது. இது வரும் நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 12 நம்பர்களை வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவது, ஆவணங்களை சமர்பிப்பது போன்றவற்றை செய்து கொள்ள முடிவதால், மாணவர்களும் இதற்கு மாறலாம்.


Click it and Unblock the Notifications








