18 வங்கி பயனர்களை குறிவைக்கும் புதிய Android virus! CVV, PIN உள்ளிட்ட முக்கிய தகவல் அபேஸ்!

|

இந்த புதிய Android virus, 18 இந்திய வங்கிகளை குறிவைத்து செயல்படுவதாகவும், இதன்மூலம் கிரெடிட் கார்ட் CVV, PIN உள்ளிட்ட முக்கிய தகவலை திருட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரினிக் ஆண்ட்ராய்டு வைரஸ்

ட்ரினிக் ஆண்ட்ராய்டு வைரஸ்

ட்ரினிக் ஆண்ட்ராய்டு வைரஸ் இன் புதிய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது keylogging செயல்பாட்டுடன் ஸ்க்ரீன் ரெக்கார்டிங்கைப் பயன்படுத்தி உங்கள் முக்கியமான வங்கி விவரங்களை திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோஜன் அகா வைரஸ் 18 இந்திய வங்கிகளை குறிவைத்து செயல்படுகிறது. Drinik ஆண்ட்ராய்டு வைரஸ் இல் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள தெரியாத APKகளை பதிவிறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மீண்டும் அவதாரம் எடுக்கும் Drinik ஆப்

மீண்டும் அவதாரம் எடுக்கும் Drinik ஆப்

Drinik என்றை பெயர் முன்னதாகவே கேள்விப்பட்டது போல் உள்ளதா?. ஆம் சரிதான். ட்ரினிக் ஒரு பழைய மால்வேர் ஆகும். இதுகுறித்த அறிவிப்புகள் 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. வருமான வரி திரும்பப் பெறுதல் என்ற பெயரில் பயனர்களின் முக்கியமான தகவல்களை இந்த மால்வேர் திருடுவதாக இந்திய அரசாங்கம் முன்னாதாகவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேம்பட்ட திறன்களைக் கொண்ட அதே தீம்பொருளின் மற்றொரு பதிப்பு Cyble ஆல் தற்போது மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

18 வங்கிகளின் பயனர்கள் குறி

18 வங்கிகளின் பயனர்கள் குறி

அதாவது ஏறத்தாழ ஐந்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்த வைரஸ் அவதாரம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இது குறிப்பாக இந்தியாவில் 18 வங்கிகளின் பயனர்களை குறிவைத்து செயல்படுகிறது.

ட்ரினிக் இலக்கு வைத்துள்ள வங்கிகள்

ட்ரினிக் இலக்கு வைத்துள்ள வங்கிகள்

18 வங்கிகளில் தற்போது எஸ்பிஐ பயனர்களை ட்ரினிக் இலக்கு வைத்துள்ளது என்பது மட்டும் உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது. APK கோப்புடன் SMS அனுப்பி அதில் ட்ரினிக் தீம்பொருளை உட்பொதித்து பயனர்களை பாதிப்படைய வைக்கின்றனர். உண்மையான தளம் போல் போலியாக ஒரு தளத்தை உருவாக்கி பயனர்களை ஏமாற்றுகின்றனர்.

முக்கியத் தகவல்கள் திருட்டு

முக்கியத் தகவல்கள் திருட்டு

இந்தியாவின் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வரி மேலாண்மைத் தளம் போல் ஒரு தளத்தை உருவாக்கி அதில் பயனர்களின் தகவலை பெற்று ஏமாற்று செயலில் ஈடுபடுகின்றனர்.

பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு போனில் இந்த பயன்பாட்டை நிறுவியதும், சில செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கும்படி கோரும். அதோடு மட்டுமின்றி தங்கள் சாதனத்தை பாதுகாப்பாக வைக்கும் Google Play Protectஐ முடக்கும்படியும் ஆப்ஸ் அனுமதி கோருகிறது. இவை அனைத்தும் முடிந்த உடன் பயனர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களது பல முக்கியத் தகவலும் திருடப்படுகிறது.

பலவகையில் திருடப்படும் பயனர் தகவல்கள்

பலவகையில் திருடப்படும் பயனர் தகவல்கள்

அதோடு மட்டுமின்றி வேறுசில முறையிலும் தங்களது தகவல்கள் திருடப்படுகிறது. அதாவது உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் லிங்க் உடன் அனுப்பப்படும். இதை கிளிக் செய்தால் WebView வழியாக உண்மையான இந்திய வருமான வரி இணையதளம் ஓபன் செய்யப்படுகிறது.

உண்மையான வருமான வரித்தளம் தான் என்றாலும் அங்கு தான் டுவிஸ்ட் இருக்கிறது. அதாவது நீங்கள் ஓபன் செய்த உடன் உங்களது ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்யப்படும். இதன்மூலம் நீங்கள் பதிவிடும் அனைத்து முக்கியத் தகவலும் திருடப்படும். சேட்டிங் பாக்ஸ் போன்ற பயன்பாடுகள் ஓபன் செய்யப்படுகிறது.

இதன்மூலம் நீங்கள் செலுத்தும் தொகை பரிமாற்றம் செய்யும் பணம் என அனைத்தும் திருடப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ செயலி என்பதை உறுதி செய்வது அவசியம்செயலி பதிவிறக்கம் செய்வது அவசியம்

அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ செயலி என்பதை உறுதி செய்வது அவசியம்செயலி பதிவிறக்கம் செய்வது அவசியம்

இதுபோன்ற பயன்பாடுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது எஸ்எம்எஸ் மூலம் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும். பெரும்பாலும் தேவை இருக்கும் பட்சத்தில் Google Play Store அல்லது Apple ஆப் ஸ்டோரில் உள்ள பயன்பாடுகளை மட்டும் பதிவிறக்கம் செய்வது நல்லது.

எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்

எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்

தெரியாத நம்பரில் இருந்தோ அல்லது ஃபார்வேர்ட் செய்யப்பட்ட எஸ்எம்எஸ்-களையோ ஓபன் செய்ய வேண்டாம். குறிப்பாக அதில் உள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். எந்த ஒரு பயன்பாட்டிலும் தேவையில்லாமல் எந்த அணுகலுக்கும் அனுமதி அளிக்க வேண்டாம்.

டிரின்க் இன் தற்போது புதிய மாறுபாடானது அணுகல் சேவையை நம்பி இருக்கிறது. எனவே உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் எந்தவித பயன்பாட்டுக்கும் அணுமதி வழங்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

Source: indiatoday.in

Best Mobiles in India

English summary
New Android virus targeting 18 bank users! Important information including CVV, PIN can Steal

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X