Home
News

Airtel-க்கு கும்பிடு.. மறுபடியும் ரூ.189-க்கு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1GB டேட்டா.. இனிமே சிம் கார்டு ஆக்டிவ்?

ஏர்டெல் (Airtel) சிம் கார்டை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு ரூ.199 விலையில் கிடைக்கும் திட்டமே மினிமம் ரீசார்ஜ் (Minimum Recharge) திட்டமாக இருந்தது. இதை ரீசார்ஜ் செய்தால், உங்களது சிம் கார்டு ஒரு மாதத்துக்கு ஆக்டிவாக இருக்கும். ஆனால், இதைவிட மலிலான விலைக்கு புது ஏர்டெல் திட்டம் (New Airtel Plan) களமிறங்கி இருக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் என்று முக்கிய சலுகைகள் கிடைக்கிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்கள் இதோ.

புது ஏர்டெல் ரூ 189 திட்ட விவரங்கள் (New Airtel Rs 189 Plan Details): இதுபோன்ற மலிவான திட்டம், ஏற்கனவே ஏர்டெல்லில் இருந்தது. ஆனால், ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வுக்கு பிறகு இந்த விலைக்கு கிடைக்கவில்லை. ஆகவே, ரூ.199 மதிப்பிலான திட்டம் மட்டுமே ஆரம்ப விலை திட்டமாக இருந்தது. ஆனால், ஜியோவில் ரூ 189 விலையில் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் இருக்கிறது.

Airtel-க்கு கும்பிடு.. மறுபடியும் ரூ.189-க்கு.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இதனால், ஏர்டெல் கஸ்டமர்களும் இதுபோன்ற திட்டம் இருந்தால், நன்றாக இருக்கும் என்று நினைத்தனர். இது ஏர்டெல் நிறுவனத்துக்கு கேட்டுவிட்டது போல, ஜியோ நிறுவனத்தை போலவே ரூ 189 விலைக்கு புதிய திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. ஆனால், சலுகைகளில் சில மாற்றங்கள் இருக்கின்றன. அதற்கு முதலில் இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஏர்டெல் திட்டத்துக்கு 21 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு மொத்தமாக 300 எம்எம்எஸ்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இது லம்ப்-சம் சலுகையாக இருப்பதால், இந்த சலுகைகளை வேலிடிட்டிக்கு முன்பே பயன்படுத்தி முடித்துவிட்டால், அதற்கு பிறகு கட்டணங்கள் இருக்கும். இதில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்காது.

ஆனால், வாய்ஸ் கால்கள் வழக்கம்போலவே கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைளாக கிடைக்கிறது. இதை தவிர வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது. ஹலோ டியூன்ஸ், ஸ்பேம் அலெர்ட் போன்ற வழக்கமாக கிடைக்கும் சலுகைகளும் இதில் எதிர்பார்க்க முடியாது.

இருப்பதிலேயே மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கு அடுத்து ரூ 199 திட்டத்துக்கு செல்லலாம். அதில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இப்போது, இதே விலைக்கு ஜியோவில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதன் சலுகைகளை இதுனுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஜியோ ரூ 189 திட்ட விவரங்கள் (Jio Rs 189 Plan Details): சொல்லப்போனால், இந்த ஜியோ திட்டத்தில் கூடுதல் சலுகைகளே கிடைக்கின்றன. ஏனென்றால், 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டா மற்றும் வேலிடிட்டியில் இந்த ஜியோ திட்டம் ஏர்டெல்லை முந்துகிறது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால், இதில் 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல கூடுதல் சலுகைகளாக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை உள்ளது. ஏர்டெல்லில் கூடுதல் சலுகைகள் கிடைக்கவில்லை. ஆகவே, மினிமம் ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ பட்டையை கிளப்பி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Airtel Rs 189 Plan With 21 Days Validity 1GB Data Unlimited Voice Calls Check Minimum Recharge
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X