Airtel அறிவித்துள்ள புது ஆபர்.. 100, 100 ரூபாயாக.. 10 முறை ரூ.1000 தள்ளுபடி.. எந்த திட்டத்தில்?
இந்தியாவின் இரண்டாவது மிக்ப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, தனது ப்ரீபெய்ட் சேவையின் கீழ் இருந்த பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.249 நீக்கி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள நிலையில்.. திடீரென ரூ.1000 மதிப்புள்ள புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. என்ன ஆபர்? எந்த திட்டத்தில்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:
ஏர்டெல் நிறுவனம் அன்ஸ் சேவையின் கீழ் புதிய வைஃபை கனெக்ஷன் எடுப்பவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி (Rs.1000 Discount Offer for New Airtel WiFi Connection) அறிவித்துள்ளது. இந்த சலுகை அமேசான் இந்தியா (Amazon India) உடனான "கூட்டாண்மை" அல்லது "ஒத்துழைப்புடன்" வழங்கப்படுகிறது. அதாவது அமேசான் வழியாக புதிய வைஃபை இணைப்புகளை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது ஒரு முழுமையாக ரூ.1000 வவுச்சராக இருக்காது. மாறாக பயனர்கள் தலா ரூ.100 மதிப்புள்ள 10 வெவ்வேறு வவுச்சர்களை பெறுவார்கள், இதன் மொத்த மதிப்பு ரூ.1000 ஆகும். இந்த வவுச்சர்களை வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை செலுத்தும் போது பயன்படுத்தலாம். ஒரு பில்லில், அதிகபட்சமாக ஒரு வவுச்சரை பயன்படுத்தலாம், அதாவது ரூ.100 தள்ளுபடியை பெறலாம்
எந்தெந்த திட்டங்களில் இந்த வவுச்சர்கள் பொருந்தும்? ஏர்டெல்லின் ரூ.699 / 599, ரூ.899, ரூ.1199, ரூ.1599 மற்றும் ரூ.3999 ஆகிய திட்டங்களில் இந்த ஆபர் கிடைக்கும்; இதன் வழியாக ரூ.1000 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் வழியாக மீட்டெடுக்கலாம்; அவதி ரீடீம் செய்யலாம்
மேலும் இந்த வவுச்சர்கள் அல்லது கூப்பன்கள் மாற்றத்தக்கவை அல்ல. இந்த சலுகை முதல் 10 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது அமேசான் இந்தியா வழியாக ஏர்டெல் சேவையின் கீழ் புதிய வைஃபை கனெக்ஷன் எடுத்த முதல் 10 மாத காலத்திற்குள் இந்த கூப்பன்களை பயன்படுத்த வேண்டும்; அதன் பிறகு இந்த வவுச்சர்களை பயன்படுத்த முடியாது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவிற்கு பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய "வை-ஃபை" நிறுவனம் என்றால் அது - பாரதி ஏர்டெல் தான். இந்நிறுவனம் இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் ஏர்ஃபைபர் மற்றும் ஃபைபர் சேவைகளை வழங்குகிறது.
மேலும் ஏர்டெல்லின் வை-ஃபை சேவைகள் ஆனது ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகள், ஐபிடிடி (IPTV - இன்டர்நெட் புரோட்டோகால் டிவி) சேவைகள் மற்றும் பலவற்றை இணைப்பதால், ஏர்டெல் கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க சேவையாக உள்ளது. உங்களுக்கான புதிய இணைப்பை முன்பதிவு செய்து, மேற்குறிப்பிட்ட சலுகையை பெற அமேசான் வலைத்தளத்தை பயன்படுத்தவும், அல்லது ஏர்டெல்லின் வலைத்தளத்தையோ அல்லது அதன் மொபைல் ஆப் அல்லது கஸ்டமர் கேர்-ஐயும் பயன்படுத்தலாம்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட இதேபோன்ற ஒரு தள்ளுபடி சலுகையை அறிவித்து இருந்தது. பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆனது ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் பெறலாம்.
அதாவது இந்த திட்டம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இப்படியாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








