Home
News

Airtel: மறைமுகமாக கிடைக்கும் 5 இலவச ரீசார்ஜ் கூப்பன்கள்! பெறுவது எப்படி?

நீங்களொரு ஒரு ஏர்டெல் யூசர் என்றால்.. அடுத்த சில வாரங்களுக்கு 1 அல்ல மொத்தம் 5 வகையான இலவச ரீசார்ஜ் கூப்பன்களை பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

அது என்னென்ன ரீசார்ஜ் கூப்பன்கள்? அதை பெறுவது எப்படி? Airtel நிறுவனத்தின் இந்த புதிய ஆபரை பெறுவது எப்படி? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த Airtel சலுகை எல்லோருக்கும் கிடைக்கும்!

இந்த Airtel சலுகை எல்லோருக்கும் கிடைக்கும்!

ஆம்! ஏர்டெல் அறிவித்துள்ள இந்த இலவச ரீசார்ஜ் கூப்பன் ஆபர் ஆனது அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் அணுக கிடைக்கும் ஒரு பண்டிகை கால சலுகை ஆகும்.

இதற்காக இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல், உணவு, சிற்றுண்டி மற்றும் குளிர்பான நிறுவனமான பெப்சிகோ இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Airtel-இன் இலவச ரீசார்ஜ் கூப்பன்களை பெறுவது எப்படி?

Airtel-இன் இலவச ரீசார்ஜ் கூப்பன்களை பெறுவது எப்படி?

பெப்சி, மவுன்டெயின் ட்யூ, மிரிண்டா, 7அப், ஸ்லைஸ் மற்றும் ட்ராப்பிக்கானா பெட் பாட்டில்கள் உள்ளிட்ட PepsiCo India-வின் பானங்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு ரூ.10 ரூபாய் முதல் ரூ.20 வரை மதிப்புள்ள Airtel ரீசார்ஜ் கூப்பன்கள் (இலவசமாக) கிடைக்கும்.

வெவ்வேறு விலைகளின் கீழ் வாங்க கிடைக்கும் (மேற்குறிப்பிட்ட பானங்களின்) லேபில்களுக்கு பின் உங்களுக்கான இலவச ரீசார்ஜ் கூப்பன் அணுக கிடைக்கும்!

என்னென்ன பானங்களுக்கு என்னென்ன கூப்பன்கள் கிடைக்கும்?

என்னென்ன பானங்களுக்கு என்னென்ன கூப்பன்கள் கிடைக்கும்?

ரூ.20 மதிப்புள்ள 200, 250, 350 மற்றும் 400மிலி பெட் பாட்டில்களை வாங்கினால் ரூ.10 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் அணுக கிடைக்கும்.

ரூ.38 மதிப்புள்ள 500 மற்றும் 600மிலி பாட்டிலை வாங்கினால் ரூ.15 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் அணுக கிடைக்கும்

நீங்கள் ரூ.40 மதிப்புள்ள 750மிலி பெட் பாட்டிலை வாங்கினாலும் கூட ரூ.15 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் அணுக கிடைக்கும்.

எந்தெந்த பாட்டில்களுடன் ரூ.20 ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்?

எந்தெந்த பாட்டில்களுடன் ரூ.20 ரீசார்ஜ் கூப்பன் கிடைக்கும்?

ரூ.60 மதிப்புள்ள 1.2 மற்றும் 1.5 லிட்டர் பாட்டிலை வாங்கினால் ரூ.20 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் அணுக கிடைக்கும்

ரூ.95 மதிப்புள்ள 1.75, 2 மற்றும் 2.25 லிட்டர் பாட்டிலை வாங்கினால் ரூ.20 மதிப்புள்ள இலவச ரீசார்ஜ் கூப்பன் அணுக கிடைக்கும்

இந்த கூப்பன்களை பயன்படுத்துவது எப்படி?

இந்த கூப்பன்களை பயன்படுத்துவது எப்படி?

மேற்குறிப்பிட்ட பெப்சிகோ தயாரிப்புகளை வாங்கும் ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள், அந்தந்த பாட்டில்களின் லேபிளில் உள்ள 12 இலக்க டிஸ்கவுண்ட் கோட் கூப்பனை கவனமாக "சேகரிக்க" வேண்டும்.

பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்-ஐ திறந்து, அதன் வழியாக குறைந்தபட்சம் ரூ.99 பிளான்-ஐ ரீசார்ஜ் செய்ய வேண்டும் (அதிக விலையுள்ள ரீசார்ஜையும் நீங்கள் தேர்வு செய்யலாம்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

குறிப்பிட்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் நேரத்தில், உங்களுக்கு கிடைத்த இலவச ரீசார்ஜ் கூப்பனை பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.10 - ரூ.20 வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

ஏர்டெல் வழங்கும் இந்த இலவச ரீசார்ஜ் கூப்பன்கள் ஆனது, ஒவ்வொரு தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கும் இரண்டு முறை மட்டுமே வேலை செய்யும் என்பதும், ஏர்டெல் மற்றும் பெப்சிகோ இணைந்து வழங்கும் இந்த சலுகை பிப்ரவரி 2023 வரை அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு சலுகை கிடைப்பது, முதல் முறை அல்ல!

இப்படி ஒரு சலுகை கிடைப்பது, முதல் முறை அல்ல!

ஏர்டெல் நிறுவனம், சலுகை என்கிற பெயரின் கீழ் இப்படி ஒரு 'பார்ட்னர்ஷிப்பை' அறிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில், ஏர்டெல் நிறுவனம் பெப்சிகோ உடன் கூட்டு சேர்ந்து பல வகையான தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் டேட்டா வவுச்சர்களை வழங்கியுள்ளது.

இந்த கூட்டணி Airtel என்ன சொல்கிறது?

இந்த கூட்டணி Airtel என்ன சொல்கிறது?

இந்த கூட்டணி பற்றி ஏர்டெல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் ஆன ஷஷ்வத் ஷர்மா, "பெப்சிகோ உடனான இந்த கூட்டணி, ஏர்டெல் மற்றும் பெப்சிகோ இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும்" என்று கூறி உள்ளார்!

Best Mobiles in India

English summary
New Airtel Offer 2022 Prepaid Customers Get Free Recharge Coupons up to Rs 20 While Buying PepsiCo Products.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X