ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி கொண்டே இருக்கிறது, அதன்படி இப்போது பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 224 நாட்களுக்கு
தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

1.5ஜிபி டேட்டா
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டாவினை 224நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

புதிய பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
குறிப்பாக இந்த புதிய சலுகை புதிய பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் இதற்கு முன்னதாக ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக்
வழங்குவதாக அறிவித்தது. தற்சமயம் கூடுதல் சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா
மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், புதிய பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்
பின்பு ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் பயனர்கள் தேர்வு செய்த சலுகைகளை ரீசார்ஜ் செய்யும் போது மட்டும் வழங்கப்படுகிறதா அல்லது அனைத்து சலுகைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

கேஷ்பேக் சலுகை
இதற்குமுன்பு ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு 84 நாட்களுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்தது, பின்ப ஜீலை மாதத்தில் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. மேலும் கேஷ்பேக் சலுகை ரூ.399 அல்லது ரூ.499 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications