Home
News

Unread Messages-களுக்கு குட்பை.. WhatsApp-ல் அறிமுகமான புதிய அம்சம்.. என்னது? எப்படி வேலை செய்யும்?

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அதன் மெசேஜிங் ஆப்பில், ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அடிப்படையிலான ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அது மெசேஜ் சம்மரீஸ் (Message Summaries) என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் பயன் என்ன? இது எப்படி வேலை செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

மெசேஜ் சம்மரீஸ் என்றால் என்ன? எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பெயர் குறிப்பிடுவது போலவே இது உங்களுக்கான மெசேஜ்களை சுருக்கமாக்கி காட்டும். மெட்டா (Meta) நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் பிரைவேட் ப்ராஸஸிங் (Private Processing) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

Unread Messages-களுக்கு குட்பை.. WhatsApp-ல் அறிமுகமான புதிய அம்சம்!

இது மெட்டா உட்பட சாட்-இல் உள்ள வேறு எவராலும் மெசேஜை படிக்காமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப்பில் பயனர்கள் சுருக்கமாக கூற வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்களை மட்டும் முன்னிலைப்படுத்த அட்வான்ஸ்டு சாட் ப்ரைவஸியையும் (Advanced Chat Privacy) பயன்படுத்தலாம்

இந்த புதிய அம்சம் குறித்த பிளாக் போஸ்ட்டில், வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ் சம்மரீஸ் அம்சத்தை விவரித்துள்ளது. வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி இந்த அம்சம் - பெர்சனல் மற்றும் க்ரூப் சாட்களில் கிடைக்கும். இது முற்றிலும் ஒரு விருப்பத்தேர்வாக இருக்கும் கூறப்படுகிறது. அதாவது தேவைப்பட்டால் பயன்படுத்தலாம் மற்றும் இது டீபால்ட் ஆக முடக்கப்பட்டு இருக்கும்

ஒரு சாட்டில் உள்ள அன்ரீட் மெசேஜஸ் ஐகானை (Unread messages icon) கிளிக் செய்யும் போது மெட்டா ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டும் மெசேஜ் சம்மரீஸ் ஆனது புல்லடட் லிஸ்ட் வியூவில் காட்டப்படும். கன்டன்ஸ்டு மெசேஜ் விண்டோ (condensed message window) ஆனது "உங்களுக்கு மட்டுமே தெரியும்" என்கிற டெக்ஸ்ட்-ஐ கொண்டுள்ளது.

மேலேயும் இந்த மெசேஜ்கள் முன்னரே குறிப்பிட்டபடி இந்த மெசேஜ்கள் பிரைவேட் ப்ராசஸிங் ஆல் பாதுகாக்கப்படுகிறது. அதாவது மெட்டா ஏஐ ஆனது சாட்போட் அல்லது வாட்ஸ்அப் ஆனது தானாகவே மெசேஜ்களையோ அல்லது ஏஐ சம்மரீஸ்களையோ படிக்க விடாமல் பதில்களை உருவாக்க அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெசேஜ் சம்மரீஸ் ஆனது ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு ஆங்கில மொழியில் வெளியிடப்படும். பின்னர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த் அம்சம் மேலும் பல மொழிகள் மற்றும் பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

Unread Messages-களுக்கு குட்பை.. WhatsApp-ல் அறிமுகமான புதிய அம்சம்!

வாட்ஸ்அப் மெசேஜ் சம்மரீஸ் எவ்வாறு செயல்படுகிறது? இந்த கேள்விக்கு வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, ப்ரைவேட் ப்ராசஸிங் என்பது நம்பகமான செயல்படுத்தல் சூழலின் (Trusted Execution Environment - TEE) மேல் கட்டமைக்கப்பட்ட ஒரு கம்பியூட்டிங் இன்ப்ராஸ்டரக்சர் (கணினி உள்கட்டமைப்பு) என்று விளக்குகிறது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கையானது, ஒரு ப்ரைவேட் கிளவுட் சூழலில் ஏஐ சாட்போட்டுடன் மக்கள் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இது ஒரு த்ரெட் மாடலை (Threat Model) பயன்படுத்துகிறது மற்றும் மூன்று அடிப்படை தேவைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது - கான்பிடென்ஷியல் ப்ராசஸிங், இது செயலாக்கத்தின் போது அல்லது கணினி உள்கட்டமைப்பிற்கு மாற்றப்படும் போது யூஸர் டேட்டாவை வேறு எந்த முதல் அல்லது மூன்றாம் தரப்பு அமைப்பும் அணுகுவதை தடுக்கும் வகையில் ப்ரைவேட் ப்ராசஸிங் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை கட்டளையிடுகிறது.

அடுத்தது - செயல்படுத்தக்கூடிய உத்தரவாதங்கள், அதாவது த்ரெட் ஆக்டர், கான்பிடென்ஷியல் ப்ராசஸிங் உத்தரவாதத்தை மாற்ற முயற்சித்தால், அமைப்பு மூடப்படும்; செயல்பாடு தடுக்கப்படும் அல்லது செய்யப்பட்ட மாற்றம் ஆனது சரிபார்க்கக்கூடிய வெளிப்படைத்தன்மை மூலம் பொதுவில் கண்டறியக்கூடியதாக மாறும் - இது மூன்றாவது அடிப்படை தேவையாகும்.

இந்த 3 அடிப்படை தேவைகளும் பயனர்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஆகிய இருவருமே - மெட்டாவால் செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கோரிக்கைகளை சரிபார்க்க ப்ரைவேட் ப்ராசஸிங்கை தணிக்கை செய்ய முடியும் என்பதையும் கட்டாயப்படுத்துகிறது!

Best Mobiles in India

English summary
New AI Powered Message Summaries Feature Introduced in WhatsApp Helps Users on Unread Messages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X