பொருளு அந்த மாறி வர்மா.. OnePlus AI மற்றும் Plus Key உடன் OnePlus 13s.. Google-ஏ வாய் பிளக்கும் AI அம்சங்கள்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் "இறுதியாக" அதன் ஸ்மார்ட்போன்களுக்கான அதன் சொந்த ஏஐ பிராண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) என்று அழைக்கப்படும் இது ஒன்பிளஸ் ஏஐ அம்சங்களுடன், இந்த ஏஐ அம்சங்களை எளிதாக அணுகும் ஒரு புதிய ஹார்வேர் எடிஷனையும் வெளியிட்டுள்ளது. அது பிளஸ் கீ (Plus Key) என்று அழைக்கப்படுகிறது
ஒன்பிளஸ் ஏஐ அம்சங்களை உள்ளடக்கிய இந்த பிளஸ் கீ ஆனது இந்தியாவில் ஒன்பிளஸின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஏஐ-யின் கீழ், ஒன்பிளஸ் பிளஸ் கீ வழியாக ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன ஏஐ அம்சங்கள் அணுக கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் ஏஐ பிராண்டின் கீழ் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த போவதாக ஒன்பிளஸ் கூறுகிறது. இவற்றில் - ஒன்பிளஸ் ஏஐ வாய்ஸ் ஸ்க்ரைப் அம்சமும் அடங்கும், இது மெசேஜ் அனுப்புதல் மற்றும் ஆன்லைன் மீட்டிங் ஆப்களுக்குள் கால்கள் மற்றும் மீட்டிங்களை ரெக்கார்ட் செய்ய, அதை சம்மரைஸ் செய்ய மற்றும் மொழிபெயர்க்க அனுமதிக்கும்.
மேலும் இது ஒன்பிளஸ் ஏஐ கால் அசிஸ்டன்ட்-ஐ பெறும். ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள ஒன்பிளஸ் டயலர் என்கிற அம்சம் ஆனது இனிமேல் கால்களின் போது ஆட்டோமெட்டிக் கால் சம்மரி மற்றும் நிகழ்நேர கால் மொழிபெயர்ப்புக்கான ஆதரவையும் வழங்கும்.
பின்னர் ஒரு மொழிபெயர்ப்பு அம்சமும் இருக்கும், இது அடிப்படையில் டெக்ஸ்ட், லைவ் வாய்ஸ், கேமரா அடிப்படையிலான மற்றும் ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அனைத்து மொழிபெயர்ப்பு திறன்களையும் ஒரே ஆப்பின் கீழ் கொண்டுவருகிறது. இதோடு ஏஐ சேர்ச், ஏஐ ரீஃப்ரேம் மற்றும் ஏஐ பெஸ்ட் ஃபேஸ் 2.0 ஆகிய அம்சங்களும் கிடைக்கும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் நிறுவனம் கூகுளுடன் கூட்டு சேர்ந்து ஜெமினியுடன் சிறந்த சினெர்ஜியை கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கூகுள் ஜெமினி ஆனது ஒன்பிளஸின் சொந்த ஆப்களில், ஒன்பிளஸ் நோட்ஸ் ஆப் ஒன்பிளஸ் கிளாக் ஆப் மற்றும் பிற கூகுள் பயன்பாடுகளில் செயல்படும். மேலும், கேமரா மற்றும் ஸ்க்ரீன் ஷேரிங் உடன் கூடிய ஜெமினி லைவ், கேமராவால் என்ன படம்பிடிக்கப்படுகிறது மற்றும் ஸ்க்ரீனில் என்ன இருக்கிறது என்பதை பயனர்கள் பார்க்க அனுமதிக்கும்.
இந்தியாவில் ஜூன் 5 அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.


Click it and Unblock the Notifications








