Google-ன் சரவெடி அறிவிப்பு! இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க! புது Phone, லேட்டஸ்ட் OS, வேற லெவல் AI அப்டேட்!
2024 ஆம் ஆண்டிற்கான, கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடான கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வானது வருகிற மே 14 ஆம் தேதியன்று தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு சரியாக எப்போது தொடங்கும்? என்னென்ன புதிய அறிமுகங்கள் நடக்கும்? இதோ விவரங்கள்;
ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் கண்டுபிடிப்புகள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) போன்றவைகளை முன்னிலைப்படுத்திய, முந்தைய கூகுள் ஐ/ஓ மாநாட்டை போலவே இந்தாண்டும் சில அட்டகாசமான அறிமுகங்கள் நிகழவுள்ளன.

கூகுள் ஐ/ஓ 2024 ஆனது மே 14 ஆம் தேதியன்று இந்திய நேரடி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இது கலிபோர்னியாவில் உள்ள அதன் மவுண்டன் வியூ தலைமையகத்தில் (கூகுளின் வழக்கமான இடமான) ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பில் "கூகுள் ஐஓ-க்கான கவுண்ட்டவுன் ஆரம்பம்! எங்களுடைய லேட்டஸ்ட் அப்டேட்ஸ் மற்றும் டெமோக்களுக்கு மே 14-இல் ட்யூன் செய்யவும்" என்று கூகுள் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள்து.
கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்? ஜெமினி மற்றும் ஜெம்மா போன்ற நிறுவனத்தின் லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் உட்பட ஏஐ தொடர்பான விஷயத்தில் கூகுள் நிறுவனம் சந்தித்த சமீபத்திய முன்னேற்றங்கள், புதிய அம்சங்களாக அல்லது அறிமுகங்களாக அறிவிக்கப்படலாம்.

புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்! கூகுளின் புதிய பட்ஜெட்-பிரெண்ட்லி ஸ்மார்ட்போனான பிக்சல் 8ஏ (Pixel 8a) மாடல் கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏற்கனவே உள்ள பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோவை உள்ளடக்கிய பிக்சல் 8 சீரீஸில் புதிய மாடல் இணைக்கப்படலாம்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அறிவிக்கப்படலாம்! கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வெளியானதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் தொடர்பான சாத்தியமான வெளியீடுகள் அல்லது அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் இந்த புதிய வெர்ஷன் மீது பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன.

சர்வீஸ் அப்டேட்ஸ்: ஏஐ தொடர்பான முன்னேற்றங்கள், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் மற்றும் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் போன்ற அறிவிப்புகளோடு.. ஜிமெயில் (Gmail), போட்டோஸ் (Photos), மேப்ஸ் (Maps) மற்றும் வொர்க்ஸ்பேஸ் (Workspace) ஆகியவற்றிற்கான புதிய அப்டேட்கள் மற்றும் மேம்பாடுகளும் அறிவிக்கப்படலாம்.
சமீபத்தில் ஜெமினி ஏஐ செய்த ஒரு வேலையால், கூகுள் நிறுவனமானது இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு பயனர் "மோடி ஒரு பாசிசவாதியா?" என்று ஜெமினி ஏஐ-யிடம் கேட்ட போது, பிரதமர் மோடியின் கொள்கைகள் "பாசிசமாக" இருப்பதாக என்று சில வல்லுநர்கள் கருதுவதாக ஜெமினி ஏஐ பதில் அளித்தது.
ஜெமினி ஏஐ-யின் இந்த பதில், மோடியின் கீழ் நடக்கும் இந்திய அரசாங்கத்தை காயபடுத்தியது. அதை தொடர்ந்து இந்தியாவில் ஏஐ இயங்குதளங்களின் கட்டுப்பாடுகள் பற்றிய விவாதங்கள் மேலோங்கியது. அதை சமாளிக்க, தனது ஏஐ தளமான ஜெமினி, பிரதமர் நரேந்திர மோடியை பற்றி தகாத கருத்துக்களை கூறியதற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்பதாக கூகுள் அறிவித்தது.
அதோடு நில்லமல் ஜெமினி ஏஐ தளத்தின் நம்பகத்தன்மையற்ற தன்மையையும் கூகுள் ஒப்புக்கொண்டது. பிரதமர் மோடி குறித்து ஜெமினி வெளியிட்ட ஆதாரமற்ற கருத்துகள் தொடர்பாக அரசு அனுப்பிய நோட்டீசுக்கு பிறகே கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசுகையில், பயனர்களுக்கு பதில்களையும், தீர்வுகளையும் வழங்கும் போது ஏஐ இயங்குதளங்கள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது. குறிப்பாக பயனர்களுக்கு தவறான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை வழங்கும் அபாயம் இருந்தால் நிச்சயம் அவைகள் சோதனை கட்டங்களில் செயல்படக்கூடாது என்றும் அமைச்சர் சந்திரசேகர் கண்டனமும் தெரிவித்து இருந்தார்!


Click it and Unblock the Notifications








