சுந்தர்னா.. சொம்பைனு நினைச்சீங்களா.. சிங்கம் டா.. ChatGPT-யின் கதை க்ளோஸ்.. 6 புதிய AI அம்சங்கள் அறிவிப்பு!
லாபத்திற்காகவோ, போட்டிக்காகவோ.. அவசர அவசரமாக எதையுமே செய்யக்கூடாது.. குறிப்பாக ஏஐ (AI) விஷயத்தில், எதை செய்தாலும் நன்றாக யோசித்து, நிதானமாகத்தான் செய்ய வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டில் இருந்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை ( Sundar Pichai) சற்றும் நழுவவில்லை!
அதற்கு சாட்சி - நடந்து முடிந்த கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வின் (Google I/O 2203 Event) போது சுந்தர் பிச்சை அறிவித்த புதிய ஏஐ அம்சங்களே (New AI Features) ஆகும். குறிப்பிட்ட நிகழ்வில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு புதிய ஏஐ அம்சங்களும், திருன்களும் "பார்த்து-பார்த்து செதுக்கப்பட்டது" போல் தெரிகிறது; குறிப்பாக கீழ்வரும் 6 அம்சங்களும்!

1. ஹெல்ப் மீ ரைட் டூல் (Help Me Write): ஜிமெயிலில் "ஹெல்ப் மீ ரைட்" என்கிற ஏஐ டூல் சேர்க்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு வந்த ஒரு இமெயிலில் இருந்து பொருத்தமான தகவல்களை கண்டறிந்து, அதற்கான சரியான ரிப்ளையை (Reply) உருவாக்க உங்களுக்கு உதவும்.
ஒருவேளை ஹெல்ப் மீ ரைட் ஏஐ டூலின் வழியாக கிடைக்கும் ரிப்ளை உங்களுக்கு திருப்தகரமாக இல்லையென்றால்.. அதே டூலின் கீழ் கிடைக்கும் எலாப்ரேட் (Elaborate) அல்லது ரீகிரியேட் (Recreate) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் குறிப்பிட்ட ரிப்ளையை மாற்றி அமைக்கவும் முடியும்.
2. இம்மர்சிவ் வியூ (Immersive View): கூகுள் மேப்ஸில் (Google Maps) இம்மர்சிவ் வியூ என்கிற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்களொரு ஒரு இடத்திற்கு செல்ல விரும்பினால், கூகுள் மேப்ஸ் உங்களுக்கு பல்வேறு விருப்பங்களை (அதாவது வழிகளை) வழங்கும் அல்லவா.. அந்த பாதைகளின் போட்டோரியலிஸ்டிக் வியூவை (Photorealistic view) பார்க்க விரும்பினால், இம்மர்சிவ் வியூ அம்சம் உங்களுக்கு உதவும்.
இம்மர்சிவ் வியூ அம்சத்துடன் சேர்த்து கூகுள் மேப்ஸில் நிகழ்நேர வானிலை அறிவிப்புகள் (Real time weather updates), ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (Air quality index), அதாவது நீங்கள் செல்லும் பகுதியில் இருக்கும் காற்றின் தரம் போன்ற அம்சங்களும் கூகுள் மேப்ஸில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
3. மேஜிக் எடிட்டர் (Magic Editor): சுந்தர் பிச்சையின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் பிற்பகுதியில், கூகுள் போட்டோஸில் (Google Photos) ஒரு மேஜிக் எடிட்டர் சேர்க்கப்படும். பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த மேஜிக் எடிட்டர் ஆனது இமேஜ்களை மேம்படுத்த செமாண்டிக் இன்ஜினியரிங் (Semantic Engineering) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ (Generative AI) பயன்படுத்தும்.
4. கூகுள் பார்ட்-இல் அப்டேட் (Update in Google Bard): சாட்ஜிபிடி-க்கு போட்டியாக களமிறக்கப்பட்ட கூகுளின் ஏஐ சாட்பாட் (Google AI Chatbot) ஆன பார்ட்-ஆல் இப்போது 20 க்கும் மேற்பட்ட ப்ரோகிராமிங் லேங்குவேஜ்களில் (Programming languages) கோடிங் (Coding) மற்றும் டிபக்கிங் (Debugging) செய்ய முடியும்.
மேலும் கூகுள் நிறுவனமானது பார்டிற்கான காத்திருப்பு பட்டியலையும் (Waitlist for Bard) அகற்றி உள்ளது. இதன் மூலம் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கான பார்ட் அணுகல் (ஆங்கில மொழியில்) திறந்து விடப்பட்டுள்ளது. இது சாட்ஜிபிடிக்கு (ChatGPT) எதிரான ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
5. கூகுள் சேர்ச்சில் ஏஐ அப்டேட் (AI Update in Google Search): கூகுள் சேர்ச்சிலும் புதிய ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இனிமேல் கூகுள் சேர்ச் ஆனது மேம்படுத்தப்பட்ட சேஃப்டி சிஸ்டம்ஸ் (Safety systems) மற்றும் பலதரப்பட்ட கன்டென்ட்டின் கீழ், கூடுதல் விவரங்களுனான ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் முடிவுகளை (More integrated search results) காண்பிக்கும்.
6. பிஏஎல்எம் 2 (PalM 2): கடைசியாக சுந்தர் பிச்சை, 100 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும் மற்றும் ஒத்துழைப்பை அனுமதிக்கும் கூகுளின் லேங்குவேஜ் மாடலின் (Google Language Model) லேட்டஸ்ட் வெர்ஷன் ஆன பிஏஎல்எம் 2-வை (PalM 2) அறிமுகப்படுத்தினார்.
பிஏஎல்எம் 2 என்பது ஜிமெயில், கூகுள் ஷீட்ஸ் (Google Sheets) போன்ற கூகுள் சேவைகளில் (Google Services) ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன்களை சேர்க்க உதவும் கூகுளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (Next generation large language model) ஆகும்.


Click it and Unblock the Notifications








