எல்லாம் என் நேரம் டா.. ஸ்டார்ட்அப் கம்பெனி கிட்ட அசிங்கப்பட்ட சுந்தர் பிச்சை.. திருப்பி அடிக்குமா Google?
நாம் எல்லோரும்.. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி-ஆ.. அல்லது ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-ஆ.. (Google Gemini VS OpenAI ChatGPT) என்று அடித்துக்கொண்டு இருக்க.. "அப்படி ஓரமா போய் விளையாடுங்கப்பா!" என்று கூறும்படியாக.. ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டையுமே "தோற்கடித்துள்ளது" ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி!
ஆந்த்ரோபிக் (Anthropic) என்கிற ஒரு ஏஐ ஸ்டார்ட்அப் (AI Startup) நிறுவனமானது கிளாட் 3 (Claude 3) என்று அழைக்கப்படும். கிளாட் 3 என்பது ஹைக்கூ (Haiku), சோனட் (Sonnet) மற்றும் ஓபஸ் (Opus) என்கிற மூன்று வெவ்வேறு மாறுபாடுகளை கொண்ட லார்ஜ் லேங்குவேஜ் மாடல்கள் (Large Language Models - LLMs) ஆகும்.

கூகுள் ஜெமினியில் உள்ள 3 வேரியண்ட்களை (ஜெமினி நானோ, கேமினி ப்ரோ மற்றும் ஜெமினி அல்ட்ரா) போலவே கிளாட் 3-ன் ஹைக்கூ, சொனட் மற்றும் ஓபஸ் ஆகிய மூன்றுமே வெவ்வேறு அளவிலான திறன்களை வழங்குகின்றன. ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கூற்றுப்படி, கிளாட் 3 ஆனது ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டை விடவும் சிறப்பாக செயல்படுகிறது.
பன்முகத்தன்மை (Multimodality), அதாவது பல்வேறு தரவு வகைகளை கையாளுதல், மேம்படுத்தப்பட்ட துல்லியம் (Improved accuracy), மேம்பட்ட சூழல் புரிதல் (Enhanced context understanding) மற்றும் வேகமான ரெஸ்பான்ஸ் டைம்ஸ் (Faster response times) என கிளாட் 3-ன் மூன்று மாறுபாடுகளும் பல பரிமாணங்களில் விதிவிலக்கான செயல்திறனை வழங்குவதாக ஆந்த்ரோபிக் நிறுவனம் கூறுகிறது.

கிளாட் 3-ன் மூன்று லேங்குவேஜ் நன்றாக செயல்படும் மறுகையில், ஓபஸ் தான் கிளாட் 3 ஃபேமிலியின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக திகழ்கிறது. சிக்கலான பணிகளின் போது இது நியர்-ஹுமன் லெவல்ஸ் ஆஃப் காம்ப்ரஹென்னை (Near-human levels of comprehension) நிரூபித்ததாக ஆந்த்ரோபிக் நிறுவனம் கூறுகிறது.
குறிப்பாக சாட்ஜிபிடி-4 உடன் ஒப்பிடும்போது, கணித சவால்களை கையாள்வதிலும் (Handling math challenges) கம்பியூட்டர் கோட்-ஐ உருவாக்குவதிலும் (Generating computer code), சிறந்த பகுத்தறிவு திறன்களை வெளிப்படுத்துவதிலும் (Exhibiting superior reasoning abilities) ஓபஸ் சிறந்து விளங்குவதாகவும் ஆந்த்ரோபிக் நிறுவனம் கூறுகிறது.

இருப்பினும், எந்த தொழில்நுட்பமும் 'பெர்ஃபெக்ட்' ஆக இருப்பதில்லை; அதற்கு கிளாட் 3 விதிவிலக்கும் அல்ல. மேம்படுத்தப்பட்ட துல்லியத்தை வழங்கும் அதே வேளையில் ஓபஸ் ஆனது கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சில பின்னடைவைகளையும் எதிர்கொள்கிறது, சில நேரங்களில் இது முந்தைய கிளாட் 2 மாடலுடன் ஒப்பிடக்கூடிய வேகத்தையே வெளிப்படுத்துகிறது.
ஓபஸ் சில "வரம்புகளை: கொண்டிருக்கும் போதிலும், ஹைக்கூ மற்றும் சொனட் ஆகிய இரண்டும் அதன் சொந்த பலங்களை கொண்டுள்ளன. சிக்கலான கணித கேள்விகலை எதிர்கொள்ளும் போது தடுமாறுகிறது என்றாலும் கூட, விரைவான பதில்களை வழங்குவதிலும், கட்டமைக்கப்படாத தரவுகளிலிருந்து தகவல்களை பிரித்தெடுப்பதிலும் ஹைக்கூ சிறந்து விளங்குகிறது.
மறுகையில் உள்ள சொனட், பயனர்கள் செய்யும் சாதாரண பணிகளுக்கு உதவும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. சொனட் மாறுபாட்டால் புகைப்படங்களில் இருட்னது டெக்ஸ்ட்-ஐ பாகுபடுத்த முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக உள்ள ஓபஸ் (முன்னரே குறிப்பிட்டபடி), பெரிய அளவிலான செயல்பாடுகளை கையாளும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சொனட் மற்றும் ஓபஸ் ஆகிய இரண்டுமே கட்டணமிஸ் செலுத்தி பயன்படுத்தக்கூடிய வெர்ஷன்களாக உள்ளன. அதே சமயம் க்ளாட்டின் இலவச வெர்ஷன் ஆனது ஆந்த்ரோபிக் இணையதளத்தில் அணுக கிடைக்கிறது. ஹைக்கூ எப்போது அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்கிற வெளியீட்டு தேதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகலாம்.
கூகுள் நிறுவனம், பார்ட் (Bard) என்கிற தனது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட்டை ஜெமினி (Gemini) என்று பெயர்மாற்றம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னரே குறிப்பிட்டபடி கூகுள் ஜெமினியானது மூன்று வெர்ஷன்களில் வருகிறது: அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano). இந்த மூன்று வெர்ஷன்களுமே செய்யும் வேலைகளை பொறுத்து ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகின்றன.


Click it and Unblock the Notifications








