Home
News

வச்சிட்டாங்க வேட்டு.. Aadhaar வெரிஃபிகேஷனுக்கு புது ரூல்ஸ்.. இனி ஹோட்டலில் தங்குவதற்கு, Proof காட்டுவதற்கு?

ஹோட்டல்கள் உட்பட வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டுளின் ஜெராக்ஸ்களை எடுத்து, அவற்றை நேரடியாக சேமித்து வைப்பதை தடுக்கும் நோக்கத்தின் கீழ் ஒரு புதிய விதி விரைவில் வெளியிடப்படும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற நடைமுறைகள் தற்போதைய ஆதார் சட்டத்திற்கு எதிரானவைகளாக பார்க்கப்படுவதால் ஆதார் வெரிஃபிகேஷனில் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. யுஐடிஏஐ ((UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார், பிடிஐ-யிடம் அளித்த பேட்டியில், ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை நாடும் நிறுவனங்களின் பதிவை கட்டாயமாக்கும் புதிய விதியை அங்கீகரித்துள்ளதாக கூறினார்.

வச்சிட்டாங்க வேட்டு.. Aadhaar வெரிஃபிகேஷனுக்கு புது ரூல்ஸ்!

இது க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது தற்போது செயல்பாட்டில் உள்ள புதிய ஆதார் ஆப் உடன் இணைப்பதன் மூலம் அடையாள சரிபார்ப்பை செயல்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அணுக அவர்களுக்கு உதவும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்; அதாவது இந்த செயல்முறை வாடிக்கையாளர்களிடம் ஆதார் அட்டை ஜெராக்ஸ்களை வாங்க வேண்டிய அவசியத்தை நீக்கும் என்று அர்த்தம்.

இந்த புதிய விதிக்கு அதிகாரசபை ஒப்புதல் அளித்துள்ளது, விரைவில் அறிவிக்கப்படும். காகித அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பை இல்லாமல் ஆக்குவதே இந்த புதிய விதியின் நோக்கம் என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார். இந்த புதிய சரிபார்ப்பு செயல்முறை ஆனது மத்திய ஆதார் தரவுத்தளத்துடன் இணைக்கும் இடைநிலை சேவையகங்களின் செயலிழப்பு நேரத்தால் ஏற்படும் சேவை இடையூறுகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுஐடிஏஐ அதிகாரியின் கூற்றுப்படி, ஆஃப்லைன் சரிபார்ப்பை நாடும் நிறுவனங்களுக்கு ஏபிஐ (API) என்கிற பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்திற்கான (Application programming interface) அணுகல் வழங்கப்படும். இது தடையற்ற ஆதார் சரிபார்ப்புக்காக தங்கள் அமைப்புகளை புதுப்பிக்க அனுமதிக்கிறது. மேலும் யுஐடிஏஐ தற்போது ஆப்-டூ-ஆப் சரிபார்ப்பை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய ஆப்பை பீட்டா-டெஸ்டிங் செய்து வருகிறது.

இந்த செயல்முறை - ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மத்திய ஆதார் தரவுத்தள சேவையகத்துடன் இணைக்க வேண்டிய தேவையை நீக்குகிறது. புதிய ஆதார் வெரிஃபிகேஷன் ஆப் பல்துறை திறன் கொண்டது மற்றும் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு வயது சரிபார்ப்பு தேவைப்படும் - விமான நிலையங்கள் மற்றும் கடைகள் உட்பட பல்வேறு தொடர்பு புள்ளிகளில் இதை பயன்படுத்தலாம்.

இந்த புதிய ஆப் ஆனது 18 மாதங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவிருக்கும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துடன் இணைந்து ஆதார் அங்கீகார சேவைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார். கூடுதலாக, இந்த ஆப் பயனர்கள் முகவரி சான்று ஆவணங்களை நேரடியாகப் புதுப்பிக்கவும், மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களை அதே ஆப்பில் சேர்க்கவும் அதிகாரம் அளிக்கும் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுவொருபக்கம் இருக்க சமீபத்தில் அறிமுகமான ஆதார் ஆப்பிற்கான புதிய வெர்ஷன் (New Aadhaar App) ஆனது இப்போது பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, ஆதார் மையத்திற்கு (Aadhaar enrolment centre) செல்லாமலேயே, தங்கள் மொபைல் போன் வழியாகவே நேரடியாக புதுப்பிக்க அனுமதிக்கிறது.

முன்னதாக உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற ஆதார் மையங்களுக்கு சென்று, வரிசையில் நின்று செய்ய வேண்டிய ஒரு செயல்முறையாக இருந்தது. ஆனால் இப்போது ஆதார் புதிய ஆப் வழியாக, வீட்டில் இருந்தபடிய உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக - ஒரு சில கிளிக்களில் இதை செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Aadhaar Verification Rules For Hotels Event Organisers No More Aadhaar card Xerox From Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X