Home
News

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. ரூ.125 எக்ஸ்ட்ரா செலவு.. ஆதார் கார்டு, 5 முதல் 17 வயது வரை.. என்னென்ன மாறுது?

யுஐடிஏஐ (UIDAI) என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (Mandatory Biometric Update) விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால், கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த விதிகள் ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் பொருந்தாது. 5 முதல் 15 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக கைரேகை (Fingerprint), கருவிழி (Iris), போட்டோ (Photo) உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். இவர்கள் என்ன செய்யலாம்.

புது ரூல்ஸ்.. அக்.1 அமல்.. ரூ.125 எக்ஸ்ட்ரா செலவு.. ஆதார் கார்டு!

5 வயது எட்டியவுடன் முதலாவது பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய வேண்டும். இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது கட்டாய பயோமெட்ரிக்ஸ் அப்டேட் 1 (MBU-1) என்று வகைப்படுத்து இருக்கிறது. அதேபோல 15 வயதை எட்டியவுடன் கட்டாய பயோமெட்ரிக்ஸ் அப்டேட் 2 (MBU-2) செய்து முடிக்கவும் வயது நிர்ணயம் செய்து இருக்கிறது.

5 வயதில் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யாவிட்டாலும், 6 வயது, 7 வயது, 8 வயது உள்ளிட்ட வயதுகளிலும் செய்து கொள்ளலாம். அதேபோல 15 வயதில் பயோமெட்ரிக் புதுப்பிப்பை செய்யாமல் விட்டாலும், 16 அல்லது 17 வயதுகளில் செய்துவிட வேண்டும். இவ்வாறு பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யும் குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

அதாவது, 18 வயதுக்கு மேல் இருக்கும் நபர்கள் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய வேண்டுமானால், கைரேகை (Fingerprint), கருவிழி (Iris), போட்டோ (Photo) உள்ளிட்ட அப்டேட்களுக்கு ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதே கட்டணம் 5 முதல் 17 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கும் வசூலிக்கப்பட்டு வந்தது.

புது ரூல்ஸ்.. அக்.1 அமல்.. ரூ.125 எக்ஸ்ட்ரா செலவு.. ஆதார் கார்டு!

ஆனால், இந்த கட்டணமானது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு விதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யும் 5 முதல் 17 வயது வரையில் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யும் குழந்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். ஆகவே, அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

இதனால், கட்டணத்தை தவிர்த்து எளிதாக கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை செய்து கொள்வது நல்லது. ஆதார் சேவை மையங்களில் (Aadhaar Seva Kendra) மட்டுமே பயோமெட்ரிக் அப்டே செய்ய முடியும். ஏனென்றால், குழந்தைகளின் கைரேகை, கருவிழி மற்றும் முகம் ஆகியவை ஸ்கேன் செய்யப்படும். ஆதார் கார்டில் உடனடியாக அப்டேட் செய்யப்படும்.

5 முதல் 17 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கை, வாரிய தேர்வுகள் மற்றும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றின் போது ஆதார் கார்டு கட்டாயமாக கேட்கப்படுகிறது. இதில் கைரேகை, கருவிழி மற்றும் முகம் ஆகியவை முக்கிய அடையாளங்களாக எடுத்து கொள்ளப்படுகிறது. இதனாலேயே பயோமெட்ரிக் புதுப்பிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பு செய்ய மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படாது. பெயர், பாலினம், மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை மாற்ற விரும்பினால், ரூ.75 கட்டணம் செலுத்தி மட்டுமே புதுப்பிக்க முடியும். இதில் எந்த சலுகைகளையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது கொடுக்காது. அனைத்து வயதினருக்கும் கட்டணம் இருக்கும்.

Best Mobiles in India

English summary
New Aadhaar Rules From October 1 2026 Aadhaar Mandatory Biometric Update For Children Till Sep 30
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X