Home
News

புது ஆதார் ரூல்ஸ்.. நவ.2025 அமல்.. டபுள் வெரிபிகேஷன்.. பெயர், பிறந்த தேதி.. மொபைல், முகவரி.. என்னென்ன மாறுது?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஆனது 2025ஆம் ஆண்டின் நவம்பர் முதல் புது ஆதார் விதிகளை (New Aadhaar Rules) கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் மூலம் என்னென்ன மாறப் போகிறது. ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் ஆகியவற்றில் வெரிபிகேஷன் எப்படி இருக்கப்போகிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் கார்டு வழங்கப்பட்ட புதிதில் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி இணைக்கப்பட்டிருந்தால் போதும், பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றி கொள்ளும்படிபடியான சேவை கொடுக்கப்பட்டது. அதை மொபைல் அல்லது வெப்சைட் மூலமும் மாற்று கொள்ளும்படி இருந்தது. ஆனால், இப்போது ஆதார் சென்டருக்கு சென்றால் மட்டுமே அதை செய்ய முடியும்.

புது ஆதார் ரூல்ஸ்.. நவ.2025 அமல்.. டபுள் வெரிபிகேஷன்.. என்ன மாறுது?

அதே நேரத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை வெரிபிகேஷன் செய்த பிறகே மொபைல் நம்பர், பெயர், பிறந்த தேதி போன்றவற்றை மாற்றி கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. இது நவம்பர் மாதம் முதல் மாற இருக்கிறது. புதிய விதிகளின்படி மீண்டும் ஆன்லைன் மூலமே விவரங்களை மாற்றி கொள்ளும்படியான சேவை கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த சேவையை வழங்குவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது புதிய டிஜிட்டல் சிஸ்டம் கொண்டுவர இருக்கிறது. அதாவது, ஆதார் கார்டுக்கு தேவையான விவரங்களை உறுதி செய்ய ஏற்கனவே அரசாங்கம் மூலம் வழங்கப்பட்ட ஆவணங்களை வெரிபிகேஷன் செய்ய இருக்கிறது. ஆகவே, ஆன்லைன் மூலம் நீங்கள் ஆதார் விவரங்களை மாற்றும்போது வெரிபிகேஷன் இருக்கும்.

அதாவது, ஏற்கனவே இருந்த மொபைல் நம்பர் ஓடிபி மட்டுமல்லாமல், ஆதார் கார்டு வைத்திருப்போரின் பான் கார்டு (PAN Card), ரேஷன் கார்டு (Ration Card), பாஸ்போர்ட் (Passport), ஓட்டுநர் உரிமம் (Driving Licence), பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) போன்ற ஆவணங்கள் வெரிபிகேஷன் செய்யப்படும். இந்த விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆதார் அப்டேட் செய்யப்படும்.

இந்த வெரிபிகேஷன் ஆவணங்களில் மின்சார கட்டண ரசீது, பள்ளி மதிப்பெண் பட்டியல் போன்றவற்றையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டில் பெயர் மாற்றுவது, மொபைல் நம்பர் மாற்றுவது, பிறந்தே தேதி மாற்றுவது, மொபைல் நம்பர் மாற்றுவது போன்ற சேவைகள் மீண்டும் ஆன்லைன் மூலமே செய்து கொள்ளும்படி கிடைக்க இருக்கிறது.

ஆனால், பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு கட்டயாம் ஆதார் சென்டர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். அதேபோல பெயரில் இருக்கும் எழுத்துப் பிழை, அப்டேட் மற்றும் பிறந்த தேதி போன்றவறுக்கு குறிப்பிட்ட லிமிட் இருக்கும். அதற்கு மேல் அதை மாற்ற முடியாது. ஆனால், மொபைல் நம்பர், ஈமெயில் ஐடி, முகவரி போன்றவற்றை எளிதாக மாற்றி கொள்ள முடியும்.

அதே நேரத்தில் உங்களது ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெரிபிகேஷன் செய்து கொள்ளும். ஆகவே, உங்களது ஆதார் கார்டில் இருக்கும் விவரங்களும், மேற்கண்ட பான் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்ற விவரங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே இந்த சேவையை பெற்று கொள்ள முடியும். இல்லையென்றால், நேரடியாக ஆதார் சென்டருக்கு செல்ல வேண்டி வரலாம். இந்த புதிய விதிகள் நவம்பர் மாதம் கொண்டுவரப்பட இருக்கிறது. ஏற்கனவே, ஆதார் சேவைக்காக பிரத்யேக ஆப், ஆதார் விவரங்களை பகிர கியூஆர் கோட் சேவை போன்ற பல்வேறு அப்டேட்களில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Aadhaar Rules From November 2025 Name Address Date of Birth Online Update All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X