Home
News

புது ரூல்ஸ்.. ஜூன்.15 அமல்.. உங்க ஆதார்ல இதை பண்ணுங்க.. 10 வருட பழசுக்கு வருது.. இல்லனா, என்ன நடக்க போகுது?

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது, ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் ஜூன் 15ஆம் தேதி மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. ஆகவே, ஆதார் கார்டை என்ட்ரோல்மெண்ட் செய்து 10 வருடங்களுக்கு மேலாகி இருந்தால், உடனடியாக இதை செய்து முடித்துவிடுங்கள். இதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதற்கு பிறகு கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.

ஆதார் கார்டை வாங்கி 10 வருடங்களுக்கும் மேலாகி இருந்தும், அதில் அடையாளச் சான்று (Identity Proof) மற்றும் முகவரி சான்று (Address Proof) ஆகியவற்றை அப்டேட் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதிகள் பொருந்தும். இந்த விதிகள் பெயர் மாற்றத்துக்கோ, முகவரி மாற்றத்துக்கோ அல்லது மொபைல் நம்பர் மாற்றத்துக்கோ கிடையாது.

புது ரூல்ஸ்.. ஜூன்.15 அமல்.. உங்க ஆதார்ல இதை பண்ணுங்க.. 10 வருட பழசு!

ஆதார் கார்டில் ஏற்கனவே கொடுத்த பெயர், வயது போன்ற அடையாளத்துக்கும், எங்கு வசிக்கிறோம் என்ற முகவரிக்கும் சான்றாக இருக்கும் ஆவணங்களை அப்டேட் செய்ய மட்டுமே வருகிறது. நீங்கள் 10 வருடத்துக்கு முன்பு கொடுத்த அதே ஆவணங்களாக இருந்தாலும், அதை மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும். இது ஒவ்வொரு 10 வருடத்துக்கும் பொருந்துக்கூடிய விதிகளாகும்.

இந்த அப்டேட்களை செய்ய ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 14ஆம் தேதிக்குள் செய்யும் நபர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல், அப்டேட் செய்துகொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவகாசம் வழங்கி இருக்கிறது. ஆகவே, பெயரை மாற்றவோ, முகவரியை மாற்றவோ இலவசமாக சேவை கொடுக்கப்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அடையாளச் சான்றுக்கு எந்தெந்த ஆவணங்களை அப்லோட் செய்யலாம்? ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாமாஷா கார்டு (Bhamashah Card), இருப்பிடச் சான்றிதழ் (Domicile Certificate) மற்றும் வசிப்பிடச் சான்றிதழ் (Resident Certificate) ஆகியவற்றை அப்லோட் செய்யலாம். மேலும், ஜன் ஆதார் (Jan Aadhaar), பாஸ்போர்ட் (Passport), போட்டோவுடன் கூடிய பாஸ்புக் (Passbook) பயன்படுத்தலாம்.

இதே ஆவணங்களை முகவரி சான்றுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அடையை சான்றுக்கு மட்டுமே பயன்படுத்தும் ஆவணங்களும் இருக்கின்றன. ஆகவே, பள்ளி விடுப்பு சான்றிதழ் (School Leaving Certificate), போட்டோவுடன் கூடிய பள்ளி மாற்றுச் சான்றிதழ் (School Transfer Certificate), பான் கார்டு (PAN Card) மற்றும் ஓட்டுநர் உரிமம் (Driving License) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இந்த சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை பிடிஎப் ஃபைலாக (PDF File) மாற்றி மைஆதார் போர்ட்டல் (MyAadhaar Portal) மூலம் வீட்டில் இருந்தே அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் உங்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான், ஓடிபி வெரிபிகேஷன் செய்த பிறகு அப்லோட் செய்ய அனுமதி கொடுக்கப்படும்.

ஒருவேளை முகவரி மாறுதல், பெயர் மாறுதல் போன்றவற்றை நீங்கள் செய்திருந்தால் அதை ஆதார் சென்டருக்கு நேரடியாக சென்று மாற்றிவிட்ட பிறகே, இதை செய்ய வேண்டும். இல்லையென்றால், ஆவணங்கள் அப்லோட் செய்யப்படாது. ஆகவே, உங்களது ஆதார் கார்டில் இருக்கும் விவரங்களும், நீங்கள் அப்லோட் செய்யும் ஆவணங்களில் இருக்கும் விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இந்த அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றுக்கு மட்டுமே இலவசமாக சேவை கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை வைத்து பெயர் மாற்றலாம், முகவரி மாற்றலாம், மொபைல் நம்பர் மாற்றலாம் என்று வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது ஏற்கனவே கொடுத்த விவரங்களுக்கு சான்றிதழ்களை அப்லோட் செய்யும் சேவை மட்டுமேயாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Aadhaar Rules From June 15 2025 Mandatory To Update Proof of Identity Proof of Address Documents
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X