புது ரூல்ஸ்.. 18 வயசுக்கு மேல ஆச்சா.. இனி Aadhaar வாங்குறது சும்மா இல்ல.. 182 நாட்கள் கெடு.. என்னென்ன வருது?
இந்தியாவில் 18 வயதுக்கு மேலானவர்கள் ஆதார் கார்டு வாங்குவது, இனிமேல் அவ்வளவு சுலபமாக இருக்கப்போவது இல்லை. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புது ஆதார் கார்டு பதிவு விதிகளை (New Aadhaar Card Enrolment Rules) கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் கிட்டத்தட்ட பாஸ்போர்ட் வாங்கும்போது, பின்பற்றும்படியான நடைமுறைகளை வைத்துள்ளது. இந்த விதிகளால் என்னென்ன மாறும்? இந்த விதிகள் கொண்டுவரப்படுவதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவில் ஆதார் கார்டு வாங்க வேண்டுமானால், வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தை முதல் பயோமெட்ரிக் விவரங்களை கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஆனால், 10 வருடங்களுக்கு பிறகு கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், 18 வயதுக்கு மேல் ஆதார் கார்டு வாங்க வேண்டுமானால், அவ்வளவு எளிதாக வங்கிவிட முடியாது.

ஏனென்றால், இந்தியாவில் ஆதார் கார்டு பதிவானது, கிட்டத்தட்ட கட்டயாமானது போல இருக்கிறது. ஆகவே, 18 வயது வரையில் ஆதார் கார்டு வாங்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும். இருப்பினும், பலர் வாங்கமால் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் இந்திய குடிமகனாக இருந்தால் தப்பித்தார்கள். அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் ஆதார் கார்டு ஆவணங்களை வைத்து வாங்கிகொள்ளலாம்.
அல்லது மாநில அரசுகளால் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் பெற்று கொள்ளலாம். ஆனால், இது வரும் காலங்களில் எளிதாக இருக்காது. அதாவது, இந்தியா குடிமகனாக இல்லாமல், வெளிநாட்டு வாழ் இந்தியன் (Non-Resident Indian) அல்லது இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் (Overseas Citizen of India) ஆகியோர் பல்வேறு புதிய விதிகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது.
இந்த விதிகளை இந்திய குடிமக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. வரும் நாட்களில் 18 வயதுக்கு மேல் இருந்தால், அவர்களுக்கும் இப்படி வெரிபிகேஷன் கொண்டு வரப்படலாம். ஏனென்றால், இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து இங்கு குடியேறும் மக்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து ஆவணங்களை பெறும் சம்பவங்கள் நடந்துள்ளது.
இதை தடுக்க வெரிபிகேஷன் விதிகள் வந்தால், ஏற்கனவே இருக்கும் விதிகளை போலத்தான் இருக்கும். இப்போது, இந்தியர் அல்லாத 18 வயதுக்கு மேலானோருக்கு ஆதார் பெறும்போது இருக்கும் விதிகளை பற்றி தெரிந்து கொள்வோம். இவர்களுக்கு வெரிபிகேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் கார்டுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் கொடுப்பது மட்டும் கிடையாது.
இந்தியாவில் அவர்கள் முந்தைய 12 மாதங்களில் 182 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அதாவது, 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருந்தால் மட்டுமே ஆதார் பதிவு செய்ய முடியும். இதை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக வெரிபிகேஷன் செய்வார்கள். அதன்பிறகே பதிவு செய்யப்படும். இது கிட்டத்தட்ட பாஸ்போர்ட் வெரிபிகேஷன் போலவே இருக்கிறது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்த 182 நாட்கள் தங்குதல் விதிக்கு விலக்கு இருக்கிறது. இருப்பினும், அவர்கள் தங்களது பயோமெட்ரிக் விவரங்கள், இருப்பிட சான்றிதழ் மற்றும் அடையாள சான்றிதழ்களை வழங்க வேண்டி இருக்கும். இந்த விதிகளை சுட்டிக்காட்டி இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் ஒருவருக்கு ஆதார் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் சுனில், இந்த மாதம் பெங்களூருக்கு வந்தபோது, ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து இருக்கிறார். இந்தியாவில் சிம் கார்டு, யுபிஐ பயன்படுத்த ஆதார் கார்டு தேவை என்றும் தெரிவித்திருக்கிறார். 182 நாட்கள் இந்தியாவில் தங்கி இருக்காததால், புதிய விதிகளை காட்டி அவரது ஆதார் கார்டு விண்ணப்பம் நிகராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் கார்டு தவிர்க்க முடியாத அடையாள சான்றிதழாக மாறிவிட்டது. பேங்க் அக்கவுண்ட், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற எந்தவொரு முக்கிய ஆவணங்களும் ஆதார் கார்டு அடிப்படிடையிலேயே வழங்கப்படுகிறது. சொல்லப்போனால், இந்திய குடிமகனுக்கு முக்கிய அடையாளமாக ஆதார் கார்டு மாறிவிட்டது. இதனாலேயே அதில் புதிய விதிகள் வருகின்றன.


Click it and Unblock the Notifications








