Home
News

ஆதார் கார்டு சேவை.. 4 புதிய மாற்றங்கள்.. உடனே இந்த இலவச எண்ணிற்கு கால் பண்ணுங்க.. UIDAI அறிவிப்பு!

யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (Unique Identification Authority of India), ஆதார் கார்டு சேவைகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதென்ன அறிவிப்பு? எந்த எண்ணிற்கு எதற்காக அழைக்க வேண்டும்? இதோ விவரங்கள்:

யுஐடிஏஐ-யின் டோல்-ஃப்ரீ நம்பரின் (Toll-free Number) கீழ் 4 புதிய ஆதார் கார்டு சேவைகள் (Aadhaar Card Services) சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், இனிமேல் அந்த 4 சேவைகளையும் யுஐடிஏஐ-யின் கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக மிகவும் எளிமையாக பெறலாம் என்றும் யுஐடிஏஐ அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு சேவை.. 4 புதிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!

அதென்ன சேவைகள்? அறியாதோர்களுக்கு 1947 என்பது தான் யுஐடிஏஐ-யின் டோல்-ஃப்ரீ நம்பர் ஆகும். இது 24 மணிநேரமும் ஆதார் அட்டை தொடர்பான சேவைகளை வழங்கும் ஒரு இலவச சேவையாகும். தற்போது இதன்கீழ் உங்கள் ஆதார் பிவிசி கார்டின் ஸ்டேட்டஸை ஸ்டேட்டஸை (Aadhaar PVC Card status) அறிந்து கொள்ள முடியும்.

மேலும் உங்கள் ஆதார் புகார் தொடர்பான நிலையையும் (Aadhaar Complaint status) அறிந்து கொள்ள முடியும். கூடவே ஆதார் பதிவு மையத்தை (Aadhaar Enrolment Centre) கண்டறியவும் முடியும்; கடைசியாக எஸ்எம்எஸ் மூலம் ஆதார் மற்றும் ஆதார் தொடர்புடைய சேவைகள் பற்றிய தகவல்களையும் பெற முடியும்.

இதுகுறித்த ட்வீட்டில், "ஐவிஆர்எஸ் (IVRS) மூலம் கட்டமைக்கப்பட்ட புதிய சேவைகளை அனுபவிக்கவும். இந்திய குடிமக்கள் தங்களின் ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு நிலை, பிவிசி கார்டு நிலை அல்லது எஸ்எம்எஸ் மூலம் தகவலை பெற, யுஐடிஏஐ-யின் கட்டணமில்லா எண்ணான 1947-க்கு அழைக்கலாம்." என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.

ஆதார் மித்ரா சாட்பாட்டையும் பயன்படுத்தலாம்: நினைவூட்டும் வண்ணம் யுஐடிஏஐ-யிடம் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) அடிப்படையிலான 'ஆதார் மித்ரா' (Aadhaar Mitra) என்கிற சாட்பாட்டும் (Chatbot) உள்ளது. இது ஆதார் அட்டை தொடர்பான கேள்விகளுக்கு பதில்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை சேவைகள் தொடர்பான பதில்களை தவிர்த்து ஆதார் மித்ரா சாட்பாட்டை பயன்படுத்தி உங்களால் ஆதார் அட்டை தொடர்பான புகார்களையும் பதிவு (File Complaint) செய்ய முடியும் மற்றும் குறிப்பிட்ட புகாரின் தற்போதைய நிலை என்ன (Complaint Status) என்பதையும் கூட சரிபார்க்க முடியும்.

மேலும் ஆதார் மித்ரா சாட்பாட்டை மிகவும் எளிமையாக அணுக உதவும் ஸ்கேன் (Scan) செய்யக்கூடிய க்யூஆர் கோட் (QR Code) ஒன்றையும் கூட யுஐடிஏஐ பகிர்ந்துள்ளது. ஒருவேளை உங்களால் அந்த க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய முடியாவிட்டால், நீங்கள் யுஐடிஏஐ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வழியாக ஆதார் மித்ரா சாட்பாட்டை அணுகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Aadhaar Card Services Now Availbale Via Toll Free Number 1947 UIDAI Shared the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X