புது ரூல்ஸ்.. 30 நாட்கள் கெடு.. ஆதார்ல உங்க பெயர், விலாசம் எல்லாம் சரியா இருக்கா? இல்லனா ரூ.50 அபராதம்!
ஆதார் கார்டு (Aadhaar Card) தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்று, அடுத்த 30 நாட்களில் அமலுக்கு வருகிறது. அதாவது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதென்ன மாற்றம்? டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:
யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை.. அதாவது பெயர், விலாசம் போன்ற விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான (இலவசமாக மாற்றுவதற்கான) கடைசி தேதியாக டிசம்பர் 14-ஐ அறிவித்துள்ளது.

இந்த காலக்கெடுவிற்குள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்ற அல்லது திருத்த விரும்பும் இந்திய குடிமக்கள் அதை முற்றிலும் இலவசமாக செய்துகொள்ளலாம். குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகளை பெற்று, அதில் எந்தவிதமான மாற்றங்களையும் / அப்டேட்களையும் செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்
இது குறித்த யுஐடிஏஐ-வின் எக்ஸ் பதிவில் "ஆதார் அட்டைக்கான இலவச ஆன்லைன் ஆவண பதிவேற்ற வசதியை டிசம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இலவச சேவை மைஆதார் போர்ட்டலில் (myAadhaar Portal) மட்டுமே கிடைக்கும்" என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஆதார் மையங்களின் (Aadhaar Center) வழியாக, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றினால் அங்கே ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதுவே டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் போர்டல் வழியாக செய்தால், உங்களிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது; முற்றிலும் இலவசமாக ஆதார் அட்டையை அப்டேட் செய்யலாம்.
ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?
01. உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ வலைத்தளத்தில் லாக்இன் செய்யவும்.
02. ப்ரோஸீட் டூ அப்டேட் அட்ரெஸ் (Proceed to update address) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
03. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ (OTP) உள்ளிடவும்.
04. டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்; குடியிருப்பாளரின் தற்போதைய விவரங்கள் காட்டப்படும்.
05. அந்த விவரங்களை சரிபார்த்து, அடுத்த உள்ள ஹைப்பர்லிங்கை (Hyperlink) கிளிக் செய்யவும்.
06. இப்போது டிராப்டவுன் லிஸ்டில் இருந்து அடையாள சான்று (Proof of Identity) மற்றும் முகவரி ஆவணங்களை (Proof of Address) தேர்வு செய்யவும்.
07. உங்களுடைய முகவரி தொடர்பான ஆதாரத்தை பதிவேற்றவும்
08. இப்போது 'சப்மிட்' பட்டனை கிளிக் செய்து குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
09. கடைசியாக உங்களுடைய 14 இலக்க அப்டேட் ரெட்வெஸ்ட் நம்பர் (Update Request Number - URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்களுடைய ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்படும்.
ஆதார் அட்டைக்கான அட்ரெஸ் ப்ரூப்-ஐ அப்லோட் செய்வதெப்படி?
01. https://myaadhaar.uidai.gov.in/ க்கு செல்லவும்
02. இப்போது நேம்/ஜென்டர்/டேட் ஆப் பெர்த் & அட்ரெஸ் அப்டேட் (Name/Gender/Date of Birth & Address Update) என்பதை தேர்ந்தெடுத்து "அப்டேட் ஆதார் அப்டேட்' என்பதை கிளிக் செய்யவும்.
03. 'அட்ரெஸ்' என்பதை தேர்ந்தெடுத்து, 'ப்ரொஸீட் டூ ஆதார் அப்டேட்' என்பதை கிளிக் செய்து ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி, தேவையான தகவலை உள்ளிடவும்.
ஆதாரில் மொபைல் எண்ணை சேர்ப்ப து / அப்டேட் செய்வது எப்படி? ஆன்லைன் தளத்தின் மூலம் முகவரி மற்றும் ஆவணங்களை புதுப்பிக்க முடியும். மற்ற விவரங்களை புதுப்பிக்க, ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டும். மொபைல் எண்ணை புதுப்பிக்க ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. பயோமெட்ரிக் அங்கீகார செயல்முறைக்காக ஆதார் அட்டையை வைத்திருப்பவர் நேரில் செல்ல வேண்டும். மொபைல் எண்ணை புதுப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications