புது ரூல்ஸ்.. ஜூலை 1 அமல்.. பேங்க் அக்கவுண்ட் பணம், ஆதார் கார்டு.. வந்தது அதிரடி மாற்றம்.. என்னென்ன மாறியது?
ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இந்த விதிகள் அமலில் இருக்கும். பேங்க் அக்கவுண்ட்டின் பணப் பரிவர்த்தனை ஸ்டேட்மெண்ட்டை பெறுவதற்கு முக்கியமான ஈமெயில் முகவரியை கட்டணமில்லாமல், அப்டேட் செய்து கொள்ளலாம்.
பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள், பணப்பரிவர்த்தனையை செய்யும்போது, அதன் ஸ்டேட்மெண்ட்டை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள ஈமெயில் முகவரி முக்கியமாக இருக்கிறது. ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட ஈமெயில் முகவரியை கொடுக்கும்போது, எந்த குழப்பமும் இல்லாமல் பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட்டை பெற்று கொள்ள முடியும்.

ஆனால், சரியான ஈமெயில் முகவரியை கொடுக்காமல் இருப்பது, பழைய ஈமெயில் முகவரியை மாற்றாமல் இருப்பது சிக்கலை ஏற்படுத்தும். இதை தவிர்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது, புதிய ஆதார் ஆப் வழியாகவே ஈமெயில் முகவரியை அப்டேட் செய்ய அல்லது புதியாக லிங்க் செய்ய வசதியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு ரூ.75 கட்டணம் இருந்தாலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் அப்டேட் செய்வோருக்கு எந்த கட்டணத்தையும் வசூலிக்காமல் இந்த சேவையை கொடுக்கிறது. ஆகவே, கட்டணமில்லாமல், ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார் கார்டில் ஈமெயில் முகவரியை அப்டேட் செய்து கொள்ள முடியும்.
ஆதாரில் ஈமெயில் அப்டேட் செய்வது எப்படி? புதிய ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். ஓப்பன் செய்யும்போது, ஆதார் எண் மற்றும் பேஸ் ஆதன்டிகேஷன் இருக்கும். ஆகவே, ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே இதை செய்ய முடியும். இப்போது, ஹோம் பேஜ்ஜில் இருக்கும் சர்வீசஸ் (Services) ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இதில் மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update), முகவரி அப்டேட் (Address Update) மற்றும் ஈமெயில் சேர்த்தல்/அப்டேட் (Email Add/Update) ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும். இதில் ஈமெயில் சேர்த்தல்/அப்டேட் ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஏற்கனவே லிங்க் செய்யப்பட்ட ஈமெயில் முகவரி காண்பிக்கப்படும். ஆகவே, இவர்கள் அப்டேட் செய்யலாம்.
எந்த ஈமெயில் முகவரியும் லிங்க் செய்யப்படவில்லை என்றால், புதிய ஈமெயில் முகவரியை லிங்க் செய்து கொள்ளலாம். இப்போது, கீழே இருக்கும் அப்டேட் ஈமெயில் ஐடி (Update Email ID) ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். ஓப்பன் செய்யப்பட்டவுடன் புதிய ஈமெயில் முகவரி (New Email Address) கேட்கப்படும். இதை பிழை இல்லாமல் கொடுத்துவிடுங்கள்.
இப்போது, அந்த ஈமெயில் முகவரிக்கு ஓடிபி அனுப்பி வெரிபிகேஷன் செய்யப்படும். ஆகவே, ஓடிபி அனுப்பு (Send OTP) ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, அனுப்பப்பட்ட ஓடிபி நம்பரை இங்கே கொடுக்க வேண்டும். இதை கொடுத்தப் பிறகு பேஸ் ஆதன்டிகேஷன் (Face Authentication) செய்யப்பட வேண்டும். ஆகவே, ஸ்மார்ட்போனுடன் செல்பீ கேமராவை பயன்படுத்துங்கள்.
இதை செய்தால், ஆதாரில் ஈமெயில் அப்டேட் செய்யும் செயல்முறை முடிந்துவிடும். இதில் பேமெண்ட் ஆப்ஷன் இருந்தாலும், அதில் ரூ.0 என்பது காண்பிக்கப்படும். ஆகவே, கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது. இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பிறகு மேசேஜ் வழியாக தகவல் தெரிவிக்கப்படும். ஈமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பப்படும்.
15 நாட்களுக்குள் ஆதார் கார்டில் ஈமெயில் அப்டேட் செய்யப்பட்டுவிடும். இது அதிகப்பட்ச நாட்களாகும். ஓரு வாரத்தில் பலருக்கு அப்டேட் செய்யப்பட்டுவிடும். இந்த ஈமெயில் அப்டேட்டை கட்டணமில்லாமல், செய்வதற்கு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. ஆகவே, அதற்குள் செய்து முடித்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications