புது Aadhaar கார்டு ரூல்ஸ்.. ரூ.75 பணம் கட்டணும்.. 30 நாளில் முடிஞ்சு போச்சு.. மொபைல் நம்பர்.. முக அங்கீகாரம்!
ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளை யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இனிமேல், ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த புதிய விதிகளால் என்னென்ன மாறப் போகிறது.
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update), முகவரி அப்டேட் (Address Update), பெயர் அப்டேட் (Name Update) மற்றும் ஈமெயில் அப்டேட் (Email Update) ஆகியவை மீண்டும் வீட்டில் இருந்தே செய்யும்படி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காகவே ஆதார் ஆப் (Aadhaar App) கொண்டுவரப்பட்டது. இதில் மொபைல் நம்பர் அப்டேட் மட்டும் அமலுக்கு வந்துள்ளது.

அதாவது, மொபைல் நம்பர் அப்டேட் மட்டும் இப்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள அப்டேட்கள் அடுத்தடுத்து கொடுக்கப்பட இருக்கின்றன. இப்போது, ஆதார் ஆப் மற்றும் ஆதார் கார்டு இருந்தால் போதும், ஆதார் சென்டருக்கு செல்லாமலேயே மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். இதற்காக ரூ.75 கட்டணத்தை ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் செலுத்த வேண்டி இருக்கிறது.
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? ஆதார் கார்டு ஆப்பை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். ஓப்பன் செய்தவுடன் 12 இலக்க ஆதார் நம்பர் கேட்கப்படும். இதை கொடுத்த பிறகு உங்களது மொபைல் நம்பர் வெரிபிகேஷன் செய்யப்படும். ஆகவே, புதிய நம்பரை மாற்ற வேண்டுமானாலும், ஏதாவது ஒரு நம்பர் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த மொபைல் நம்பர் வெரிபிகேஷன் முடிந்த பிறகு, பேஸ் ஆதன்டிகேஷன் செய்யப்படும். ஆகவே, செல்பீ கேமராவை ஓப்பன் செய்யப்பட்டு, உங்களது கண்கள் மற்றும் முகம் ஸ்கேன் செய்யப்படும். இதன் பிறகு ஆதார் கார்டில் இருக்கும் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்பட்டுவிடும். 6 இலக்க பின்நம்பர் செட் செய்ய வேண்டும்.
இதை செய்துவிட்டால், ஹோம் பேஜ்ஜில் சமீபத்திய பரிவர்த்தனைகளுக்கு கீழ் சேவைகள் (Services) பக்கத்தில் மை ஆதார் அப்டேட் (My Aadhaar Update) விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, மொபைல் நம்பர் அப்டேட், முகவரி அப்டேட், பெயர் அப்டேட் மற்றும் ஈமெயில் அப்டேட் ஆகிய 4 விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
இதில் மொபைல் நம்பர் அப்டேட்டை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, 5 நிமிடங்களில் மொபைல் நம்பர் அப்டேட்டை செய்து கொள்ளலாம். 30 நாட்களுக்குள் புதிய மொபைல் நம்பர் அப்டேட் செய்யப்படும். ரூ.75 கட்டணமாக செலுத்த வேண்டும் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதை சரிபார்த்துவிட்டு, தொடரவும் விருப்பத்தை தேர்ந்தெடுங்கள்.
இப்போது, உங்களது ஆதாருடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் காண்பிக்கப்படும். இதற்கு கீழ் புதிய மொபைல் நம்பர் கொடுக்க பாக்ஸ் இருக்கும். இதில் அப்டேட் செய்ய வேண்டிய மொபைல் நம்பரை கொடுங்கள். இப்போது, அந்த மொபைல் நம்பர் வெரிபிகேஷன் செய்யப்படும். அதேபோல பேஸ் ஆதன்டிகேஷனை செல்பீ கேமரா வழியாக செய்ய வேண்டும்.
இதை செய்த பிறகு பேமெண்ட் பேஜ் ஓப்பன் செய்யப்படும். இதில் ரூ.75 கட்டணத்தை செலுத்த வேண்டும். பேமெண்ட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டவுடன் ஆதார் கார்டில் மொபைல் நம்பர் அப்டேட் செயல்முறை முடிந்துவிடும். 30 நாட்களுக்குள் புதிய மொபைல் நம்பர் அப்டேட் செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








