Home
News

ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. ஒரே நேரத்தில் 4 அதிரடி மாற்றங்கள்.. இந்த ஆவணங்கள் இருக்கா?

ஆதார் கார்டு வைத்து இருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதாது, அதை உறுதிசெய்ய அடையாள சான்று, முகவரி சான்று, உறவுமுறை சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகியவை இருக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, இனிமேல் ஆதார் காட்டில் மாற்றங்களை செய்ய முடியும்.

ஆதார் கார்டில் அப்டேட் செய்யப்படும் விவரங்களுக்கு உரிய ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. இந்த ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே அப்டேட் செய்யப்பட இருக்கிறது. எந்த அடையாளங்களுக்கு எந்த ஆவணம் ஏற்று கொள்ளப்படும் என்பதையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது வகுத்து கொடுத்துள்ளது. இந்த ஆவணங்களின் பட்டியலை பார்ப்போம்.

ஆதார் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. 4 மாற்றங்கள்!

1. அடையாள சான்று (Proof of Identity): பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு (புகைப்படத்துடன்), ஓட்டுநர் உரிமம் (Driving Licence), புகைப்பட அடையாள அட்டை (மத்திய, மாநில அரசு சர்வீஸ்), ஓய்வூதியதாரர் புகைப்பட அட்டை /சுதந்திர போராட்ட வீரர் புகைப்பட அட்டை, கிசான் புகைப்பட பாஸ்புக், சிஜிஎஸ்எச்எஸ், இசிஎச்எஸ், இஎஸ்ஐசி (CGHS/ECHS/ ESIC) கார்டுகள் ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

மேலும், எஸ்டி / எஸ்டி / ஓபிசி சான்றிதழ் (புகைப்படத்துடன் இருந்தால்), கல்வி வாரியம் / பல்கலைக்கழக சான்றிதழ் (புகைப்படத்துடன் இருந்தால்), திருமணச் சான்றிதழ் (பெயர் மாற்றம்/அடையாளம் தொடர்பானது), டிரான்ஸ்ஜென்டர், மூன்றாம் பாலித்தவர் அடையாள அட்டை (Transgender / Third Gender ID Card), எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டை ( MGNREGA Job Card) ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

2. முகவரி சான்று (Proof of Address): பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அரசு / பிஎஸ்யு (PSU) வழங்கிய சேவை அடையாள அட்டை, எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டை, யுஐடிஐஏ ஷெல்டர் ஹோம் சான்றிதழ் (UIDAI Shelter Home Certificate), எஸ்டி / எஸ்டி / ஓபிசி சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர், மூன்றாம் பாலித்தவர் அடையாள அட்டை ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

இதுபோக, வங்கி / அஞ்சல் துறை பாஸ்புக் (பெயர் & முகவரி), வங்கி / கிரெடிட் கார்டு / அஞ்சல் துறை ஸ்டேட்மெண்ட் (3 மாதங்களுக்கான), மின்சாரம் / தண்ணீர் / தொலைபேசி / கேஸ் பில் (3 மாதங்களுக்கான), வாடகை ஒப்பந்தம் (Lease Agreement), சொத்து வரி ரசீது / அரசு ஒதுக்கீட்டு கடிதம், காப்பீட்டு பாலிசி, எம்.பி / எம்.எல்.ஏ / கசேட்டட் அதிகாரி முகவரி சான்று ஆகியவை ஏற்று கொள்ளப்படும்.

3. உறவுமுறை சான்று (Proof of Relationship): பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ், திருமணச் சான்றிதழ், எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓய்வூதியதாரர் /சுதந்திர போராட்ட வீரர் புகைப்பட அட்டை, எஸ்டி / எஸ்டி / ஓபிசி சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர், மூன்றாம் பாலித்தவர் அடையாள அட்டை, குடும்ப உறுப்பினர் மூலம் வழங்கப்படும் Self-Declaration சான்றிதழ், சட்டபூர்வ காவலர் (Legal Guardianship) ஆவணம் ஏற்கப்படும்.

4. பிறந்த தேதி சான்று (Proof of Date of Birth): பிறப்பு சான்றிதழ் (RBD Act, 1969 கீழ்), பாஸ்போர்ட், பள்ளி, கல்லூரி / பல்கலைக்கழக சான்றிதழ், டிரான்ஸ்ஜென்டர், மூன்றாம் பாலித்தவர் அடையாள அட்டை, ஓய்வூதியதாரர் அடையாள அட்டை /சுதந்திர போராட்ட வீரர் புகைப்பட அட்டை, புகைப்பட அடையாள அட்டை (மத்திய, மாநில அரசு சர்வீஸ்) ஆகியவை ஏற்று கொள்ளப்படும்

More from GizBot

Best Mobiles in India

English summary
New Aadhaar Card Rules For All Ages Check Acceptable Documents List For Updating Aadhaar Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X