Home
News

புது ரூல்ஸ்.. ஜூன் 14 முதல் அமல்.. Aadhaar-ல உங்க போன் நம்பர், விலாசம் சரியா இருக்கா? இல்லனா ரூ.50 செலவாகும்!

உங்களுடைய ஆதார் அட்டையில் (Aadhaar Card) உள்ள விலாசம் (Address) அல்லது அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் (Linked Mobile Number) உட்பட உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை 2024 ஜூன் 14 ஆம் தேதிக்கு முன்பாகவே சரிபார்த்து விடவும். ஒருவேளை அதில் ஏதேனும் தவறுகள் (Mistakes) இருந்தால்.. அல்லது ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் (Updates) செய்ய வேண்டி இருந்தால்.. அதை ஜூன் 14 ஆம் தேதிக்கு முன்பாகவே செய்துவிடவும்.

ஏனென்றால் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் (Free Update via Online) செய்வதற்கான அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு 2024 ஜூன் 14 ஆம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 15 ஆம் தேதி முதல் உங்களுடைய ஆதார் அட்டையில் ஏதேனும் அப்டேட் அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டிடும் என்று அர்த்தம்.

புது ரூல்ஸ்.. ஜூன் 14 முதல் அமல்.. ரூ.50 செலவாகும்!

கடந்த பல மாதங்களாகவே இலவச ஆதார் அப்டேட்டை நிறுத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு கொண்டே வருகிறது. முதலில் இது 2023 டிசம்பர் 15 ஆம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ( Unique Identification Authority of India) இந்த இலவச வசதியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்து, இதற்கான காலக்கெடுவை 2024 மார்ச் 14 ஆக மாற்றியது. இப்போது ஜூன் 14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலும் இந்த காலக்கெடு நீடிக்கப்படுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால்.. இப்படித்தான் ஆதார்-பான் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு நீண்ட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு தற்போது அபராதம் செலுத்தினால் மட்டுமே பான்-ஆதாரை இணைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதே நிலைமை இலவச ஆதார் அப்டேட்டிற்கும் வந்தால்.. ஆஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆதார் அட்டையில் செய்யப்படும் மாற்றங்களுக்காக, ஆதார் சேவை மையங்களில் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், யுஐடிஏஐ வலைத்தளம் வழியாக.. ஆன்லைன் வழியிலான செயல்முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. எனவே மொபைல் நம்பர் அல்லது முகவரி போன்ற உங்களுடை ஆதார் விவரங்களை எந்த கட்டணமும் செலுத்தாமல் மாற்ற விரும்பினால் ஜூன் 14 ஆம் தேதிக்கு முன்பாக அதை செய்துவிடவும்.

இலவச ஆதார் அப்டேட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், இதுபோன்ற செயல்முறைகளை நெறிப்படுத்த முடியும் என்று இந்திய அரசாங்கம் நம்புகிறது. ஒருவேளை ஆன்லைன் வழியாக ஆதார் அப்டேட் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியாது என்றால்.. அதை எப்படி செய்வது என்பதற்கான படிப்படியான மற்றும் எளிமையான வழிமுறைகள் இதோ:

முதலில் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ வலைத்தளத்தில் லாக்இன் செய்யவும். ப்ரோஸீட் டூ அப்டேட் அட்ரெஸ் (Proceed to update address) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ (OTP) உள்ளிடவும். டாக்குமெண்ட் அப்டேட் (Document Update) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்; குடியிருப்பாளரின் தற்போதைய விவரங்கள் காட்டப்படும். பின்னர் அந்த விவரங்களை சரிபார்த்து, அடுத்த உள்ள ஹைப்பர்லிங்கை (Hyperlink) கிளிக் செய்யவும்.

இப்போது டிராப்டவுன் லிஸ்டில் இருந்து அடையாள சான்று (Proof of Identity) மற்றும் முகவரி ஆவணங்களை (Proof of Address) தேர்வு செய்யவும். உங்களுடைய முகவரி தொடர்பான ஆதாரத்தை பதிவேற்றவும். இப்போது 'சப்மிட்' பட்டனை கிளிக் செய்து குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். கடைசியாக உங்களுடைய 14 இலக்க அப்டேட் ரெட்வெஸ்ட் நம்பர் (Update Request Number - URN) உருவாக்கப்பட்ட பிறகு, உங்களுடைய ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்படும்.

ஆதார் அட்டைக்கான அட்ரெஸ் ப்ரூப்-ஐ அப்லோட் செய்ய, https://myaadhaar.uidai.gov.in/ வலைத்தளத்திற்குள் செல்லவும். இப்போது நேம் / ஜென்டர் . டேட் ஆப் பெர்த் & அட்ரெஸ் அப்டேட் (Name/Gender/Date of Birth & Address Update) என்பதைத் தேர்ந்தெடுத்து "அப்டேட் ஆதார் அப்டேட்' என்பதை கிளிக் செய்யவும். இப்போது 'அட்ரெஸ்' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'ப்ரொஸீட் டூ ஆதார் அப்டேட்' என்பதைக் கிளிக் செய்யவும். ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி, தேவையான மக்கள்தொகை தகவலை உள்ளிடவும்.

Best Mobiles in India

English summary
New Aadhaar Card Rule From June 14 No More Free Mobile Number Update Address Change in UIDAI Website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X