Home
News

புது Aadhaar ஆப்.. சத்தமில்லாமல், ரூ.75 கட்டணம் செலுத்தி முடிக்க வேண்டிய விஷயம்.. முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆதார் சென்டர்களுக்கு சென்று ஃபார்ம் எழுத்து கொடுத்து முடிக்க வேண்டிய விஷயத்தை இனிமேல் புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) வழியாக உடனடியாக முடித்து கொள்ளலாம். பேஸ் ஆதன்டிகேஷன் செய்ய ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ரூ.75 செலுத்த பேங்க் அக்கவுண்ட் இருந்தால் போதும், செய்து முடிக்கலாம்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் ஆப்பில் புதிய மொபைல் நம்பரை வீட்டில் இருந்தே அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் சென்டரில் மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த சேவை இப்போது, ஸ்மார்ட்போனுக்கு மாற்றப்பட்டுவிட்டது. அதேபோல ரூ.75 கட்டணமும் மாற்றப்படவில்லை. மொபைல் நம்பரை எப்படி அப்டேட் செய்வது என்பதற்கான விவரங்கள் இதோ.

புது Aadhaar ஆப்.. சத்தமில்லாமல், ரூ.75 கட்டணம் செலுத்தி முடிக்கவும்!

ஆதார் ஆப்பை ஓப்பன் செய்யவும். முகப்பு பகத்தின் கீழே இருக்கும் சர்வீசஸ் (Services) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது, மூன்று விருப்பங்கள் தோன்றும். மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update), முகவரி அப்டேட் (Address Update) மற்றும் ரீவியூ ஃபேமிலி ரெக்கொஸ்ட் (Review Family's Request) விருப்பங்கள் இடம்பெற்றிருக்கும்.

முதலில் இருக்கும் மொபைல் நம்பர் அப்டேட் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஏற்கனவே ஆதாருடன் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் காண்பிக்கப்படும். அடுத்து 30 நாட்களில் செயல்முறை செய்யப்படுவது, ரூ.75 செயல்முறை கட்டணமாக வசூலிக்கப்படுவது, புதிய நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படுவது உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்படும்.

இதில் பேஸ் ஆதன்டிகேஷன் (Face Authentication) இடம்பெற்றிருக்கும். இதை பார்த்து உறுதி செய்துவிட்டு, கீழே இருக்கும், மொபைல் நம்பர் அப்டேட்டை தொடரவும் (Continue to Update Mobile Number) விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது, புதிதாக லிங்க் செய்ய வேண்டிய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். இதை கொடுத்த பிறகு ஓடிபி அனுப்பு (Send OTP) விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதை கொடுக்க பிறகு கொடுக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி நம்பரை கொடுத்த பிறகு பேஸ் ஆதன்டிகேஷன் இருக்கும். ஆகவே, ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது, தானாக ஓப்பன் செய்யப்படும். இப்போது, கண்கள் நன்றாக தெரியும்படி பேஸ் ஆதன்டிகேஷன் செய்ய வேண்டும். இது சில வினாடிகளில் முடிந்துவிடும்.

இதை செய்த பிறகு பேமெண்ட் பக்கம் தோன்றும். இதில் யுபிஐ பேமெண்ட்கள், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பேமெண்ட்கள் மற்றும் நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் விருப்பங்கள் தோன்றும். இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து, ரூ.75 கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். இப்படி செலுத்திய பிறகு மொபைல் நம்பர் அப்டேட்டுக்கான செயல்முறை முடிந்துவிடும்.

அதிகபட்சம் 30 நாட்களுக்குள் புதிய மொபைல் நம்பர் அப்டேட் செய்யப்பட்டுவிடும். இதை உறுதிப்படுத்த புதிதாக கொடுக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். இந்த எஸ்எம்எஸ் வந்த உடனேயே புதிய மொபைல் நம்பர் வழியாக ஆதார் சேவைகளை பெற்று கொள்ளலாம். பழைய மொபைல் நம்பருக்கு எந்த ஓடிபியும் செல்லாது.

ஆகவே, பேங்க் அக்கவுண்ட், போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் மற்றும் பிற ஆதார் தேவைப்படும் சேவைகளில் பழைய நம்பருக்கு பதிலாக புதிய நம்பரை அப்டேட் செய்ய வேண்டி இருக்கும். முன்னதாக ஆதார் சென்டர்களுக்கு மட்டுமே சென்று, மொபைல் நம்பரை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால், இப்போது ஸ்மார்ட்போனிலேயே மாற்றி கொள்ள முடிகிறது.

ஆதார் சென்டரிலும் ரூ.75 செலுத்தி மொபைல் நம்பரை மாற்ற வேண்டும். அதேபோல வீட்டில் இருந்து ஸ்மார்ட்போனில் மாற்றினாலும், அதே ரூ.75 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது. மொபைல் நம்பருக்கு மட்டுமே, ஆவணங்கள் கேட்கப்படாது. முகவரியை மாற்றினால், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும்.

Best Mobiles in India

English summary
New Aadhaar App Mobile Number Update With Face Authentication For Rs 75 Processing Fee How To Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X