பழைய AADHAAR கார்டு கதை முடிந்தது.. புதுசா வருது FACE ஆதன்டிகேஷன்.. இனி குடிமக்களுக்கு டிஜிட்டல் வெரிபிகேஷன்!
பழைய ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் இனிமேல் கியூஆர் (QR) மற்றும் பேஸ் ஐடி ஆதன்டிகேஷன் (Face ID Authentication) மூலம் டிஜிட்டல் வெரிபிகேஷன் (Digital Verification) செய்யும்படி யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய முடிவால் இனிமேல் கையில் ஆதார் கார்டு வைத்திருக்கும் முறையானது அப்படியே அடியோடு மாறப் போகிறது.
பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்தல், புது சிம் கார்டு வாங்குதல், மத்திய, மாநில அரசு சேவைகளை பெறுதல் போன்ற பலவற்றுக்கு ஆதார் கார்டு தவிர்க்க முடியாத ஆவணமாக மாறிவிட்டது. ஆனால், இப்போது கையில் ஆதார் கார்டு நகலை எடுத்து சென்று அதை பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்துவது சிக்கலாகிவிட்டது. ஆதார் கார்டு நகல் மூலம் பல்வேறு டிஜிட்டல் மோசடிகள் நடக்க தொடங்கிவிட்டன.

இதனால், ஆதார் கார்டு நகல் தேவைப்படும் சேவைகளில் அதை டிஜிட்டல் வெரிபிகேஷன் செய்து பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது புதிய ஆதார் ஆப்-ஐ (New Aadhaar App) களமிறக்கி இருக்கிறது. இந்த ஆப் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும், உங்களது பேஸ் ஐடி ஆதன்டிகேஷன் செய்யப்பட்டு டிஜிட்டல் வெரிபிகேஷன் செய்யப்படும்.
அதே நேரத்தில் ஆதார் கார்டு நகல் மற்றும் ஆதார் கார்டை கையில் வைத்திருக்கவோ அல்லது அதன் மூலம் பெறப்படும் சேவைகளுக்கு அவற்றை கொடுக்கவோ வேண்டியது இல்லை. மொபைல் ஆப் மூலம் பேஸ் ஐடியை ஆதன்டிகேஷனை மட்டுமே செய்து டிஜிட்டல் வெரிபிகேஷன் மற்றும் டிஜிட்டல் காப்பிகளை ஷேர் செய்து கொள்ள முடியும். ஆகவே, மொபைல் இருந்தால் போதுமானது.
இந்த புதிய ஆதார் ஆப் ஆனது குடிமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. டெல்லியில் நடைபெற்ற ஆதார் சம்வாத் (Aadhaar Samvaad) மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக கொடுக்கப்பட்டது. இந்த மாநாட்டை தொங்கிவைத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அஸ்வினி வைஷ்ணவ், இந்த ஆதார் ஆப்பையும் அறிமுகம் செய்தார்.
அடுத்த சில மாதங்களில் குடிமக்களின் பயன்பாடுக்கு இந்த ஆதார் ஆப் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் என்ன மாறப்போகிறது என்று பார்த்தால், ஆதார் கார்டு வெரிபிகேஷன் தேவைப்படும் சேவைகளுக்கு இனிமேல் ஆப் மட்டுமே போதுமானதாக இருக்கும். அதாவது, ஹோட்டல், ஏர்போர்ட், சுற்றுலா, ஆன்மீக தளங்கள் போன்றவற்றில் ஆதார் கார்டு நகல் தேவைப்படாது.
அதேபோல சிம் கார்டு வாங்குதல், பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்தல் போன்றவற்றின் போது, டிஜிட்டல் வெரிபிகேஷனை செய்து கொள்ளலாம். இது ஏற்கனவே ஃபிங்கர்பிரிண்ட் மூலம் நடை முறையில் செய்யப்படுகிறது. ஆனால், இப்போது பேஸ் ஆதான்டிகேஷனும் சேர்ந்துள்ளது. ஆகவே, ஆதாரில் உங்களது பழைய போட்டோ இருந்தால், அப்டேட் செய்து கொள்வது நல்லது.
இந்தியாவில் ஆதார் கார்டு இல்லாமல் இருப்பது அவ்வளவு எளிதாக காரியமல்ல. பிறந்த குழந்தைகள் முதல் ஆதார் கார்டு பெற்ற கொள்ள முடிகிறது. 10 வருடங்களாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாமல் இருந்தால், அதை கட்டயாம் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. இந்த ஆதார் கார்டு மூலம் பல்வேறு சேவைகளும் கிடைக்க தொடங்கிவிட்டன.
ஆரம்பத்தில், அடையாள சான்றிதழாக இருந்த ஆதார் கார்டு இப்போது, பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் வரையிலான சேவைகளுக்கு பயன்படுகிறது. இப்படி, தவிர்க்க முடியாத ஆவணமாக ஆதார் மாறி இருப்பதால், அதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கொண்டுவருகிறது. இதில், புதிய ஆதார் ஆப் சேவை இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications