வீட்டில் இருந்தபடியே போன் நம்பர், அட்ரெஸ் மாற்ற புது ஆதார் ஆப்.. அடிச்சு புடிச்சு டவுன்லோட் செய்த 3 கோடி பேர்!
இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆதார் ஆப்பை (New Aadhaar App) 31 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்துள்ளது. யுஐடிஏஐ (UIDAI) ஆனது பழைய ஆதார் ஆப்பில் இருந்து புதிய ஆதார் ஆப்பிற்கு மாறுமாறு, தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்த தகவல் வந்துள்ளது
மக்களின் விரல் நுனியில் சேவைகளை கொண்டுவரும் புதிய ஆதார் ஆப் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, இந்த அதிகரித்து வரும் பயன்பாடு பிரதிபலிக்கிறது என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஏறக்குறைய 4 மில்லியன் மக்கள் இந்த ஆப்பை பயன்படுத்தி தங்கள் மொபைல் நம்பர்களை புதுப்பித்து (Mobile Number Update) உள்ளனர், மேலும் சுமார் 850,000 பேர் தங்கள் முகவரியை புதுப்பிக்க (Address Update) இந்த ஆப்பை பயன்படுத்தி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே கிளிக்கில் லாக் அல்லது அன்லாக் செய்தல், ஒருவரின் இருப்பை சரிபார்க்க அவருடைய முகத்தை சரிபார்த்தல், அங்கீகார வரலாறு, மற்றும் பேப்பர் விசிட்டிங் கார்டுகளுக்கு பதிலாக காண்டாக்ட்களை எளிதாக பகிர்வதற்கான க்யூஆர் கோட் அடிப்படையிலான எடிட்டபிள் காண்டாக்ட் கார்டு (QR-based editable contact card) போன்ற அம்சங்களையும் இந்த ஆப் கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority) ஆனது, தற்போதுள்ள எம்ஆதார் (mAadhaar) ஆப் ஆனது விரைவில் நிறுத்தப்படும் என்று அறிவித்து, கூடவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் ஆப்பிற்கு மாறுமாறும் பயனர்களை கேட்டுக்கொண்டது
இந்த ஆப் ஆப்பிள் ஐபோனுக்கான ஆப் ஸ்டோர் (Apple App Store) மற்றும் ஆண்ட்ராய்டுக்கான கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகிய இரண்டிலும் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இது குடிமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை பாதுகாப்பாகச் சேமிக்கவும், புதுப்பித்துக்கொள்ளவும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
யுஐடிஏஐ கூற்றுப்படி, புதிய ஆதார் ஆப்பில் உள்ள மிகப்பெரிய அம்சங்களில் ஒன்று, க்யூஆர் கோட் அடிப்படையிலான ஆதார் பகிர்வு மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கான ஆதரவாகும். இது, 'தேர்ந்தெடுத்த பகிர்வு' (Selective Share) எனப்படும் ஒரு அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை வெளிப்படுத்தாமல் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது.
இதன் மூலம், அவர்கள் தங்கள் புகைப்படம், பெயர், வயது, பாலினம், மொபைல் எண், முகவரி அல்லது ஆதார் ஸ்டேட்டஸ் உட்பட, தாங்கள் பகிர விரும்பும் தகவல்களை துல்லியமாக தேர்ந்தெடுக்க முடியும். அடையாள சரிபார்ப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட முனையங்களில் ஸ்கேன் செய்யக்கூடிய ஒரு க்யூஆர் கோட்-ஐயும் இந்த ஆப் உருவாக்குகிறது.
ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் முகவரிகளை நேரடியாக புதுப்பிக்கவும் இந்த ஆப் பயனர்களை அனுமதிக்கிறது என்று யுஐடிஏஐ கூறுகிறது. ப்ரொபைல் செக்ஷன் (Profile section) மூலம் அவர்கள் தங்கள் அக்கவுண்ட்களில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முன்னரே குறிப்பிட்டபடி, புதிய ஆதார் ஆப் வழியாக பயோமெட்ரிக் லாக் கட்டுப்பாடுகளும் அணுக கிடைக்கும்.
அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை தடுக்க, ஒரு குடிமகனின் கைரேகை, முகம் மற்றும் கருவிழி அங்கீகாரத் தரவை லாக் செய்ய இந்த் ஆப்பை பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், ஆப் மூலம் இந்த ;லாக்கை பின்னர் நீக்கவும் செய்யலாம். இருப்பினும், இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது ஸ்மார்ட்போனுக்கான அணுகலை இழப்பது, பயனர்களை ஆதார் தொடர்பான சேவைகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றிவிடக்கூடும் என்று யுஐடிஏஐ குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications