பட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.!

By Gizbot Bureau
|

புதிய வருமான வரி விதிகளின் கீழ், 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளபடி, ஃபான் அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் விரைவில் மாற்றப்படவுள்ளன.

பட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.!

அதாவது வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரியை (ITR) தாக்கல் செய்யும் போது ஆதார் அல்லது ஃபான் கார்டு தேவைப்படும். தற்போது நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது அவை இரண்டும் தேவைப்படுகின்றன.இதுகுறித்து நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்புகளை இங்கே காணலாம்.

வருமான வரிக்கு பான் ஆதார்கார்டு :

வருமான வரிக்கு பான் ஆதார்கார்டு :

1) வரி செலுத்துபவர்கள் எளிமையாகவும், வசதியாகவும் வருமானவரியை தாக்கல் செய்யும் வகையில், ஃபான் மற்றும் ஆதார் அட்டையை பயன்படுத்த நிதியமைச்சர் பரிந்துரைந்துள்ளார். அதாவது இதன்மூலம் ஃபான் கார்டு இல்லாதவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மேற்கோள் காட்டுவதன் மூலம் வருமான வரியை மேலும் அவர்கள் ஃபான் எண்ணை குறிப்பிட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

பான் அடிப்படை வசதிகள்:

பான் அடிப்படை வசதிகள்:

முன்மொழியப்பட்ட விதிகளின் படி, வருமான வரி துறை இந்தியாவின் தனிப்பட்ட அடையாளம் ஆணையம் (UIDAI) இருந்து மக்கள்தொகை தரவுகளை பெற்ற பிறகு, ஆதாரின் அடிப்படையில் ஃபான் எண் இல்லாத நபர்களுக்கு ஃபான் எண்ணை ஒதுக்கும்.

பான் உடன் ஆதாருடன் இணைப்பு:

பான் உடன் ஆதாருடன் இணைப்பு:

வரி செலுத்துவோர் ஏற்கனவே தங்களது ஃபான் உடன் ஆதாரை இணைத்திருந்தால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப ஃபான் எண்ணிற்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம்.

அங்கிகரிப்பு பயன்படுத்தல்:

அங்கிகரிப்பு பயன்படுத்தல்:

குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஃபான் / ஆதார் எண்ணை மேற்கோள் காட்டுவது மற்றும் அங்கீகரிப்பதை கட்டாயத்துவதுன் மூலம் உயர்மதிப்பு பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும் நிதிஅமைச்சகம் முடிவெடுத்துள்ளது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு, ஃபான் மற்றும் ஆதார் எண்ணை சரியான மேற்கோள் காட்டுவது மற்றும் அங்கீகரிப்பது போன்றவற்றை தொடர்புடைய ஆவணங்களை பெறும் நபர் உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதை உறுதிபடுத்தும் வகையில் அபராத விதிகளை திருத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்க பரிந்துரை:

தகுதி நீக்க பரிந்துரை:

தற்போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் ஆதாருடன் ஃபான் எண் இணைக்கப்படா விட்டால் அதை தகுதிநீக்கம் செய்ய வருமான வரி சட்டம் வழிவகுக்கிறது.கடந்த கால பரிவர்த்தனைகளை பாதுகாக்க நிதி அமைச்சகம் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய பட்ஜெட்டில், ஒரு நபர் ஆதார் எண்ணை வழங்கவில்லை எனில், அத்தகைய நபருக்கு ஒதுக்கப்பட்ட ஃபான் எண் செயலிழப்பு செய்யப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
New Aadhaar And Pan Card Rules Post Budget Announcement ;: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X