இந்த 13 நகரங்களில் தான் 5ஜி முதலில் வருகிறது.. இதில் உங்கள் நகரம் இருக்கிறதா என்று பாருங்க மக்களே..

|

வருடங்கள் செல்ல செல்ல 5G நெட்வொர்க்குகள் மேலும் - மேலும் பொதுவானதாக மாறப்போகிறது. கோலாகலமாக துவங்கப் போகும் இந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது முதல் நேரடி வணிக 5G நெட்வொர்க்கைப் பார்க்கப் போகிற முக்கியமான ஆண்டாக மாறப்போகிறது. ஆனால், விஷயம் என்னவென்றால், நெட்வொர்க் ரோல்அவுட் செலவுகள் காரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களால் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் 5G ஐ அறிமுகப்படுத்த முடியாது என்பதனால் குறிப்பிட்ட சில முக்கிய இடங்களில் மட்டும் இதன் சேவையை அறிமுகம் செய்து வைக்கப்போகிறது.

புதிய 5G சேவைக்கான சோதனை செயல்பாடுகள் என்ன நிலையில் உள்ளது?

புதிய 5G சேவைக்கான சோதனை செயல்பாடுகள் என்ன நிலையில் உள்ளது?

புதிய 5ஜி நெட்வொர்க் சேவையானது இந்தியாவில் ஒரு டன் சாதாரண நுகர்வோர்கள் மட்டுமின்றி, நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் இருக்கும் நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில் புதிய 5G சேவையை அறிமுகப்படுத்தத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய 5G சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் நகரங்களில் பெரும்பாலானவை 2022 இல் நேரடி 5G நெட்வொர்க்குகளைப் பெறும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

இந்த 13 இந்திய நகரங்களில் தான் முதல் 5ஜி சேவையா?

இந்த 13 இந்திய நகரங்களில் தான் முதல் 5ஜி சேவையா?

இதன்படி, இந்திய நகரங்களில் உள்ள எந்தெந்த முக்கியமான நகரங்களில் புதிய 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தகவலும் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 5G சேவையுடன் இணைப்பு கிடைக்கப்போகும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 13 இந்திய நகரங்கள்
பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் தகவல் படி, இந்தியாவின் முக்கிய நகரங்களான கொல்கத்தா, பெங்களூர், குருகிராம், புனே, காந்திநகர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், லக்னோ, சென்னை, அகமதாபாத், சண்டிகர் மற்றும் ஜாம்நகர் ஆகிய 13 நகரங்களுக்கு முதலில் 5ஜி சேவை கிடைக்கப்போகிறது.

அமெரிக்க இராணுவத்தை திணறடிக்கும் சீனா.. ஒரே ஒரு சாட்டிலைட் தான் 'எல்லாமே' தெளிவா தெருஞ்சுடுச்சு..அமெரிக்க இராணுவத்தை திணறடிக்கும் சீனா.. ஒரே ஒரு சாட்டிலைட் தான் 'எல்லாமே' தெளிவா தெருஞ்சுடுச்சு..

முதல் நேரடி வணிக 5G நெட்வொர்க்கு சேவை 2022

முதல் நேரடி வணிக 5G நெட்வொர்க்கு சேவை 2022

இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவை இந்த நகரங்களில் தங்களின் 5G சோதனைகளை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்கள் தான் முதன் முதலில் நேரடி வணிக 5G நெட்வொர்க்குகளைப் பெறும் என்பதை தொலைத்தொடர்புத் துறை (DoT) திங்களன்று உறுதிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த பகுதிகளில் எப்போது 5ஜி சேவை துவங்கப்படும் என்ற கேள்வி தான் அடுத்து உங்கள் மனதில் எழுந்திருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.

எப்போது இந்த புதிய 5ஜி சேவை இந்த நகரங்களில் அறிமுகமாகும்?

எப்போது இந்த புதிய 5ஜி சேவை இந்த நகரங்களில் அறிமுகமாகும்?

இந்த கேள்விக்கான பதிலைத் தொலைத்தொடர்புத் துறை இன்னும் தெளிவாக வெளியிடவில்லை என்பதே இப்போதைக்கு இருக்கக்கூடிய உண்மையாகும். இந்தியாவின் இந்த முக்கிய நகரங்களில் எப்போது 5ஜி சேவை எந்த நிலையான காலக்கெடுவுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என்பது நமக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், CY22 இன் மூன்றாவது காலாண்டில் இந்தியா நேரடி 5G நெட்வொர்க்குகளைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம் என்பது மட்டும் நமக்கு உறுதியாகத் தெரியும்.

SBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்திSBI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய விதி.. இனி இது எல்லோருக்கும் கட்டாயம்.. SBI வெளியிட்ட முக்கிய செய்தி

5G தீர்வுகள் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்துமா?

5G தீர்வுகள் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்துமா?

DoT கூட 2018 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு 5G சோதனைப் படுக்கையுடன் இணைந்து செயல்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சோதனை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு செயலர் கே.ராஜாராமன் நம்பிக்கையுடன், ஜனவரி தொடக்கத்தில் முதல் 5G சோதனை படுக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வரவிருக்கும் பல்வேறு தொழில்களின் பிற பகுதிகள் மற்றும் அவற்றின் 5G தீர்வுகள் பெரிய மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6G சேவைக்கான ஆரம்ப ஆராய்ச்சி

6G சேவைக்கான ஆரம்ப ஆராய்ச்சி

5G சோதனை படுக்கையானது, 6G மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான ஆரம்ப ஆராய்ச்சியை மேற்கொள்வதில் இந்தியாவை மேலும் வலுவான நிலையில் வைக்கும். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒதுக்கிய அலைக்கற்றையைப் பயன்படுத்தி நாடுகளின் பல்வேறு பகுதிகளில் 5G சோதனைகளை நடத்தி வருகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? அப்போ 'இதை' செய்யுங்கள் மக்களே..

இந்தியாவில் எப்போது 6ஜி சேவையை எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் எப்போது 6ஜி சேவையை எதிர்பார்க்கலாம்?

வேகமான இணையச் சேவை என்பது தற்போது அவசியமாகிவிட்டது. 5ஜி விரைவில் வெளியாகும் என்ற செய்தி மட்டும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால் எப்போது என்ற பதில் தற்போதுவரை கிடைத்தபாடில்லை. இதற்கான காரணம் 5ஜி ஸ்பெக்ட்ரமிற்கான ஏலத் தாமதமே ஆகும். இதற்கிடையில் 6ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு சூசமாகத் தெரிவித்திருக்கிறது. அதாவது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டில் 6ஜி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!இந்தியாவில் ஏன் 5ஜி போன் வாங்குவது சிறந்தது இல்லை: காரணம் தெரிஞ்சு போன் வாங்குங்க மக்களே.!

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் 6ஜி சேவை பற்றி என்ன சொல்கிறது?

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் 6ஜி சேவை பற்றி என்ன சொல்கிறது?

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், ஆன்லைன் வெபினாரில் 6ஜி வெளியீடு குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 6ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. 6ஜி மேம்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு முன்னதாகவே அறிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்காகப் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?இந்தியாவில் புழங்கும் ஜீரோ ரூபாய் நோட்டுகள்.. இதன் மதிப்பே வேற.. எதற்காக இதை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

6ஜி நெட்வொர்க்குக்கு தேவையான மென்பொருள் உள்நாட்டில் உருவாக்கப்படுமா?

6ஜி நெட்வொர்க்குக்கு தேவையான மென்பொருள் உள்நாட்டில் உருவாக்கப்படுமா?

இதையடுத்து 2023 அல்லது 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 6ஜி அறிமுகம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஃபைனான்சியல் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த வெபினாரில் 6ஜி குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளிப்படுத்தினார். அதேபோல் 6ஜி நெட்வொர்க்குகளை இயக்க தேவையான டெலிகாம் மென்பொருள் நாட்டிலேயே உருவாக்கப்படும் எனவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New 5G Service In India Will Arrive For These 13 Cities First On 2022 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X