Home
News

ஆர்டர் போட ரெடியா? ரூ.15000 முதல் ரூ.65000 வரை! இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 3 புதிய 5G போன்கள்! இதோ லிஸ்ட்!

2023 ஆம் ஆண்டின் கடைசி மாதமாக இருந்தாலும் கூட, இந்த டிசம்பரில் கூட சில ஸ்மார்ட்போன் வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12), ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) போன்ற சில பெரிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகமும் அடக்கம்.

என்னென்ன மாடல்கள் சரியாக எந்தெந்த தேதிகளில் அறிமுகமாகும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? டிசம்பர் 2023 இல் அறிமுகமாகும் மாடல்களில் இதெல்லாம் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகின்றன? போன்ற விவரங்கள் இதோ:

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 3 புதிய 5G போன்கள்!

ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G): இது இன்று (டிசம்பர் 5 ஆம் தேதி அன்று) மதியம் சீன சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்தியா உட்பட உலகளாவிய வெளியீடானது 2024 ஜனவரி யில் நடைபெறும் என்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரிந்துரைக்கிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜனவரி 23 அல்லது 24இல் அறிமுகம் செய்யப்படலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 2கே ரெசல்யூஷன், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளே, ஹாசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை பேக் செய்யும்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 3 புதிய 5G போன்கள்!

இதன் கேமரா செட்டப்பில் சோனி எல்ஒய்டி-808 சென்சார் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். கடைசியாக இது 100W வயர்டு சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5400mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

பெரும்பாலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 11 5ஜி மாடலின் விலையுடன் ஒற்றுப்போகலாம். ஒன்பிளஸ் 11-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக எப்படி பார்த்தாலும் ஒன்பிளஸ் 12 5ஜி மாடலின் விலை நிர்ணயம் ரூ.60,000 - ரூ.65,000 க்குள் தான் இருக்கும்.

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 3 புதிய 5G போன்கள்!

ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): இது டிசம்பர் 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும். பட்ஜெட்-விலை 5ஜி மாடலாக வரும் இது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (6nm MediaTek Dimensity 6100+ Chipset) மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப், விர்ச்சுவல் ரேம் அம்சம் உடனான 16ஜிபி மொத்த ரேம், தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பு திறன், 18W ஃபாஸ்ட் சார்ஜுக்கான ஆதரவு போன்ற அம்சங்களும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிசம்பரில் அறிமுகமாகும் 3 புதிய 5G போன்கள்!

ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G): இது டிசம்பர் 12 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படும் ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகி விட்டது. எனவே இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து எந்த குழப்பமும் இல்லை.

இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் உடனான பெரிய 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50எம்பி வைட் ஆங்கிள் சென்சார், 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில், 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். லீக் ஆன ரீடெயில் பாக்ஸின் (Retail Box) புகைப்படத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.50,999 மற்றும் ரூ.59,999 க்குள் அறிமுகம் செய்யப்படும்; இதன் எம்ஆர்பி (MRP) ரூ.56,999 ஆக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New 5G Phones Launching in Dec 2023 OnePlus 12 Redmi 13C iQOO 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X