எனக்கே விபூதி அடிக்க பார்த்தல? கடுப்பான Vodafone யூசர்கள்.. Jio, Airtel பயனர்களுக்கும் எச்சரிக்கை!

|

"எனக்கே விபூதி அடிக்க பார்த்தல?" என்று வோடாபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளர்கள் கடுப்பாகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடந்து கொண்டே இருக்கிறது.

அதென்ன சம்பவம்? கடுப்பாகும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? வோடாபோன் ஐடியா பயனர்களுக்கு நடந்த சம்பவம் எப்படி ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களுக்கான ஒரு எச்சரிக்கை (Alert) ஆக மாறும்? இதோ விவரங்கள்:

அனைவருக்கும் ஒரே மாதிரியான மெசேஜ்!

அனைவருக்கும் ஒரே மாதிரியான மெசேஜ்!

பல வோடாபோன் ஐடியா பயனர்களுக்கு, ஒரே மாதிரியான வாட்ஸ்அப் மெசேஜ் (WhatsApp Message) ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில் மொபைல் நம்பர் ஒன்றும், லிங்க் (Link) ஒன்றும் உள்ளது.

அந்த லிங்க்-ஐ கிளிக் செய்வதன் வழியாக அல்லது குறிப்பிட்ட மொபைல் நம்பரை அழைப்பதன் வழியாக வோடாபோன் ஐடியாவின் 5G சேவைக்கு உடனே அப்கிரேட் (Upgrade) ஆக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மெசேஜ் உங்களுக்கும் வந்து இருந்தால்..?

இந்த மெசேஜ் உங்களுக்கும் வந்து இருந்தால்..?

அதாவது "விஐ 5ஜி நெட்வொர்க் (Vi 5G Network) ஆனது தற்போது நேரலையில் உள்ளது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் அல்லது உடனே 5ஜி-க்கு அப்கிரேட் ஆக XXXXXX என்கிற எண்ணிற்கு கால் செய்யவும்" என்கிற வாட்ஸ்அப் மெசேஜ் ஆனது உங்களுக்கும் வந்து இருந்தால்.. உஷார் ஆகி கொள்ளவும்.

ஏனென்றால், இதுவொரு போலியான மெசேஜ் (Fake Message) ஆகும். அதுமட்டுமின்றி வோடாபோன் ஐடியா 5G-க்கு மேம்படுத்துவதாக உறுதியளித்து உங்களை கவர்ந்திழுப்பதன் மூலம், உங்கள் பணத்தையும், உங்களை பற்றிய முக்கியமான தரவையும் திருடும் ஆபத்தான மெசேஜும் கூட!

எங்களை பார்த்தால்.. அவ்ளோ முட்டாளாவா தெரியுது?

எங்களை பார்த்தால்.. அவ்ளோ முட்டாளாவா தெரியுது?

குறிப்பிட்ட வாட்ஸ்அப் மெசேஜை பெற்ற சில வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள், "எங்களை பார்த்தால்.. அவ்ளோ முட்டாளாவா தெரியுது?" என்கிற அளவிற்கு கடுப்பாகி உள்ளனர்.

ஏனென்றால். வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் 5G அறிமுகம் (5G rollout) குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை; அது தொடர்பான ஒரு சின்ன அறிவிப்பை கூட இன்னும் வெளியிடவில்லை.

தற்போது வரையிலாக பார்தி ஏர்டெல் (Bharthi Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே நாடு முழுவதும் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த எச்சரிக்கை Jio, Airtel பயனர்களுக்கும் பொருந்தும்!

இந்த எச்சரிக்கை Jio, Airtel பயனர்களுக்கும் பொருந்தும்!

வோடபோன் ஐடியா நிறுவனமானது இன்னும் அதன் 5ஜி சேவையை நாட்டில் அறிமுகம் செய்யவில்லை. ஆக 5ஜி அப்கிரேட்-ஐ வழங்குவதாக கூறும் அனைத்து மெசேஜ்களும் / கால்களும் போலியானவைகள் ஆகும்.

எனவே இதுபோன்ற மெசேஜ்களையும், அதில் உள்ள லிங்க்-களையும், மொபைல் நம்பர்களை புறக்கணிக்குமாறு பரிந்துரைக்கிறோம். மேலும் இந்த எச்சரிக்கை, வோடாபோன் ஐடியா பயனர்களுக்கானது மட்டுமல்ல. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு கூட பொருந்தும்.

உங்கள் நகரத்தில் ஏர்டெல் அல்லது ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகமாகி இருந்தாலும் சரி அல்லது இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலும் சரி, எப்போதுமே அதிகாரப்பூர்வமாக வரும் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை மட்டுமே பின்பற்றவும். போலியான மெசேஜ்களில் வரும் ஆபத்தான லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம்.

மீறி கிளிக் செய்தால்.. என்ன ஆகும்?

மீறி கிளிக் செய்தால்.. என்ன ஆகும்?

இதுபோன்ற போலியான மெசேஜ்களில் வரும் லிங்க்களை கிளிக் செய்வதன் வழியாக நீங்கள் பணம் அல்லது தகவல் தொடர்பான மோசடிக்கு ஆளாக நேரிடும்.

அதாவது குறிப்பிட்ட லிங்க்-ஐ நீங்கள் கிளிக் செய்வதன் வழியாக, உங்கள் டிவைஸிற்கான ரிமோட் கண்ட்ரோல் ஆனது ஹேக்கர்களுக்கு கிடைக்கலாம். அதை கொண்டு, ஹேக்கர்களால் உங்கள் பணம் அல்லது உங்களை பற்றிய விவரங்களை திருடிக்கொள்ள முடியும்.

ஆக "ஒரே ஒரு கிளிக் தான்.. 5ஜி சேவைகள் உங்கள் காலடியில்!" என்று உறுதியளிக்கும் எந்தவொரு மெசேஜிற்கும் அல்லது அழைப்புக்கும் 'ரெஸ்பான்ஸ்' செய்யாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்!

அதெல்லாம் சரி.. வோடாபோன் 5ஜி எப்போது அறிமுகமாகும்?

அதெல்லாம் சரி.. வோடாபோன் 5ஜி எப்போது அறிமுகமாகும்?

"இந்தியாவில் எப்போது விஐ 5ஜி சேவைகள் அறிமுகமாகும்?" என்கிற கேள்விக்கு வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பதில் இதுதான் - "பல நகரங்களுக்கு 5ஜி சேவைகளை கொண்டு வர, விஐ நிறுவனமானது அதன் கூட்டாளர்களுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது".

ஆக, வோடாபோன் ஐடியாவின் 5ஜி (Vodafone Idea 5G) சேவைகள் அறிமுகமாக இன்னும் சில காலம் ஆகலாம் என்பதையும். ஏர்டெல் 5ஜி (Airtel 5G) மற்றும் ஜியோ 5ஜி (Jio 5G) உடன் போட்டிபோடும் நிலையில் வோடாபோன் நிறுவனம் இல்லை என்பதையும் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது!

Best Mobiles in India

English summary
New 5G Alert For Vodafone Idea Jio and Airtel Users Do Not Respond To This Fake 5G Upgrade Message

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X