இந்தியாவில் அறிமுகமான 50-இன்ச் OnePlus TV; விலையை சொன்னா நம்புவீங்களா?

|

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை போலவே தான் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளின் விலையும் அதிகமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை இன்றே மாற்றிக்கொள்வீர்கள்!

ஏனெனில், இன்று (அதாவது ஜூலை 4) இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 50 ஒய்1எஸ் ப்ரோ (OnePlus TV 50 Y1S Pro) மாடலின் விலை அப்படி!

அப்படி என்ன விலை? எப்போது முதல் விற்பனை செய்யப்படும்? அறிமுக சலுகைகள் ஏதேனும் உண்டா? விலை கம்மி என்பதால் அம்சங்களில் சமரசம் செய்யப்பட்டுள்ளதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

லேட்-ஆ வந்தாலும்

லேட்-ஆ வந்தாலும் "வாய்பிளக்க" வைத்துள்ளது!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒய் சீரிஸின் (Y Series) கீழ் ஒரு புதிய 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொஞ்சம் தாமதமாக இன்று (அதாவது ஜூலை 4) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட எந்த வகையிலும் நம் எதிர்பார்ப்புகளை "டேமேஜ்" செய்யவில்லை!

50-இன்ச் 4கே டிஸ்பிளே; டால்பி ஆடியோனு சும்மா மெர்சலா இருக்கு!

50-இன்ச் 4கே டிஸ்பிளே; டால்பி ஆடியோனு சும்மா மெர்சலா இருக்கு!

புதிய OnePlus TV 50 Y1S Pro ஆனது பெசல்லெஸ் வடிவமைப்பு, 4K ரெசல்யூஷனை கொண்ட 50 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது.

இது ஒன்பிளஸ் பிராண்டின் அட்வான்ஸ்டு காமா எஞ்சின் அம்சத்திற்கான ஆதரவை கொண்ட 10-பிட் கலர் டிஸ்பிளே ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இது Dolby Audio ஆதரவுடன் 2 ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது, இதன் மொத்த அவுட்புட் 24W ஆகும்.

MEMC (மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பென்சேஷன்) தொழில்நுட்பத்தை பேக் செய்யும் இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட் ஆனது HDR10+, HDR10 மற்றும் HLG ஃபார்மெட்டிற்கான ஆதரவையும் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட் டிவி 230 க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களுக்கான அணுகலுடன், திரைப்படங்கள் மற்றும் சீரீஸ்களை எளிதாக கண்டறிய உதவும் OxygenPlay 2.0 உடன் வருகிறது.

Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

இப்படி ஒரு OnePlus TV.. இவ்ளோ கம்மி விலைக்கா?

இப்படி ஒரு OnePlus TV.. இவ்ளோ கம்மி விலைக்கா?

இந்தியாவில் OnePlus TV 50 Y1S Pro ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.32,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் நாட்டிலுள்ள முக்கிய ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களின் வழியாக வருகிற ஜூலை 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

Sale-இன் போது எந்தெந்த வங்கிகளுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

Sale-இன் போது எந்தெந்த வங்கிகளுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 என்கிற இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் அணுக கிடைக்கும்.

தவிர Amazon மற்றும் OnePlus.in வழியாக நிகழ்த்தப்படும் வங்கி பரிவர்த்தனைகள் முழுவதற்கும் 9 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.

மேலும், அமேசான் வாடிக்கையாளர்கள் இந்த டிவியை வாங்கும் போது 12 மாதங்களுக்கான இலவச அமேசான் ப்ரைம் சந்தாவையும் பெறுவார்கள்.

நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?

ஆஃப்லைனில் வாங்கினால் எந்த சலுகையும் கிடைக்காதா?

ஆஃப்லைனில் வாங்கினால் எந்த சலுகையும் கிடைக்காதா?

யாரு சொன்னது? ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஆக்சிஸ் பேங்க் பரிவர்த்தனைகளின் வழியாக நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பெறலாம்.

ரூ.33,000 என்கிற பட்ஜெட்டிற்கு இந்த டிவி வொர்த் -ஆ!

ரூ.33,000 என்கிற பட்ஜெட்டிற்கு இந்த டிவி வொர்த் -ஆ!

கண்டிப்பாக! மற்ற ஒன்பிளஸ் டிவிகளைப் போலவே, இதுவும் ஒரு ஆண்ட்ராய்டு டிவி ஆகும்; இது ஆண்ட்ராய்டு டிவி 10.0 மூலம் இயக்கப்படுகிறது. ஆக இந்த டிவியை "கட்டுப்படுத்த" நீங்கள் Google Assistant-ஐயும் செயல்படுத்தலாம்.

மேலும் வேகமான மற்றும் சுவாரசியமான கேமிங் அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் இதில் ஒரு ஸ்பெஷல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) ஒன்றும் உள்ளது.

Nothing Phone 1-இன் Nothing Phone 1-இன் "புதிய விலை" விவரம்; ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்!

வேற லெவல் கனெக்டிவிட்டி!

வேற லெவல் கனெக்டிவிட்டி!

இந்த ஒன்பிளஸ் டிவி உடன் நீங்கள் உங்களின் ஒன்பிளஸ் பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச்-ஐ 'கனெக்ட்' செய்ய முடியும். குறிப்பாக ஒன்பிளஸ் வாட்ச் யூசர்கள், இந்த ஒன்பிளஸ் டிவியை ஒரே கிளிக்கில் ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும்.

மேலும், டிவி பார்க்கும் போதே நீங்கள் தூங்கிவிட்டதை உங்கள் ஒன்பிளஸ் வாட்ச் உணரும்போது, ​​டிவியை அது தானாகவே ஆஃப் செய்து விடும்.

பட்ஸ் மற்றும் வாட்ச்சை மட்டுமல்ல OnePlus Connect 2.0-ஐப் பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்போனையும் கூட இந்த டிவி உடன் கனெக்ட் செய்யலாம். இப்படியாக ஒரே நேரத்தில் 5 டிவைஸ்களை இந்த டிவியுடன் இணைக்க முடியும்.

ரூ.32,999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்!? இதுவே போதும்!

Best Mobiles in India

English summary
New 50 inch Budget 4K Smart TV OnePlus 50 Y1S Pro launched in India Sale Starts From July 7 Check Amazon Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X