Mobile பயனர்களுக்கு புது விதி.. இனி 1 போனை 5 வருஷம் தான் யூஸ் செய்யணும்.. அதிரடி மாற்றம் எதற்காக?
ஸ்மார்ட்போன் (Smartphone) பயனர்கள் அனைவரும் இனி 5 வருடத்திற்கு ஒருமுறை அவர்களுடைய ஸ்மார்ட்போன்களை கட்டாயம் மாற்ற வேண்டுமென்ற கட்டாய விதியை இந்திய அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு என்ன காரணம்? இது ஏன் கட்டாயம் என்பதை இப்போது பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான ஒரு டாப் சீக்ரெட் தகவலின் படி, ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய விதியை இந்திய அரசாங்கம் அமல்படுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின் படி, இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்கள் கட்டாயம் அவர்களுடைய ஸ்மார்ட்போன் சாதனத்தை ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நீங்கள் ஐபோன் வாங்கி இருந்தாலும் சரி, அல்லது சியோமி, ரெட்மி, ரியல்மி, மோட்டோரோலா, ஒன்பிளஸ், டெக்னோ, இன்பினிக்ஸ், லாவா, விவோ, ஒப்போ என்று எந்தவொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக இருந்தாலும் சரி, அதை நீங்கள் சரியாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இந்த புதிய விதி பரிந்துரைக்கிறது.
5 வருடத்திற்கு மேல், நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயம் எக்ஸ்சேஞ் செய்தோ அல்லது ரீசைக்கிளிங்கிற்கு வழங்கியோ அதன் மதிப்பிற்கேற்ற தொகையை பெற்றுக்கொண்டு, புது ஸ்மார்ட்போன் சாதனத்தை இனி எல்லோரும் வாங்கிக்கொள்ள அறிவுரைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏன், இப்படி அரசாங்கம் நேரடியாக தலையிட்டு மக்களிடம் உள்ள போன்களை கட்டாயம் மாற்ற வலியுறுத்துகிறது,
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தான் இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசாங்கம் முடிவெடுக்கவுள்ளதாக கூரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு பின்னணியில், மக்களின் பாதுகாப்பு மறைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் சாதனமும் 5 வருடங்களுக்கு பிறகு அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றனவாம்.
புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களின் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு குறைந்த அளவில் இருப்பதாகவும், பழைய அல்லது நீண்ட நாள் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு வழக்கத்தை விட x5 மடங்கு அதிகமாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் இருந்து வெளிவரும் அதிக கதிர்வீச்சு, மனிதர்களின் மூலை, இதயம் மற்றும் உறக்கம் போன்றவற்றை பாதிப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் ஆரோக்கியம் பெரியளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படும் அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கையை இந்திய அரசாங்கம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களுக்காக பொதுமக்கள் இனி வரும் ஆண்டுகளில் கட்டாயமாக 5 வருடத்திற்கு ஒரு முறை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினால், குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு 2 காரணங்கள் உள்ளது. ஒன்று அவர்களுடைய ஸ்மார்ட்போன் சாதனம் எளிதில் பழுதடைந்துவிடுகிறது. மற்றொரு மறைமுக காரணம், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், அவர்களுடைய பழைய சாதனங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்டை நிறுத்திவிடுகிறது.
மற்றொரு காரணம், ஸ்மார்ட்போன்களின் தரமும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தரமே 5 ஆண்டுகள் நீடிப்பது போல தான் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்தியில், இந்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவரத் திட்டமிடும் புதிய விதியை பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








