ரூ.99 எடுத்து ரெடியா வச்சிக்கோங்க.. Tata Play டிடிஎச் சேவையில் புதிய மாற்றம்!
வெறும் ரூ.99 செலவில்.. டாடா ப்ளே டிடிஎச் சேவையில் (Tata Play DTH Service) முக்கிய மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டு உள்ளது. அது என்ன மாற்றம்? ரூ.99 செலவு செய்வதன் டாடா ப்ளே கஸ்டமர்களுக்கு என்ன கிடைக்கும்? இதோ விவரங்கள்:
இந்தியாவின் முக்கியமான டைரக்ட்-டு-ஹோம் (Direct-to-Home) சேவை ஆப்ரேட்டர்களில் ஒன்றான டாடா ப்ளே நிறுவனமானது ரூ.99 க்கு புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது டாடா ப்ளே 4கே (Tata Play 4K) என்று அழைக்கப்படுகிறது. இது சில நாட்களுக்கு முன்பு டாடா ப்ளே நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய வேல்யூ ஆடட் சேவை (New Value added service) ஆகும்.

பெயர் குறிப்பிடுவது போலவே டாடா ப்ளே 4கே என்பது சூப்பர் ஹை ரெசல்யூஷனில் (Super-high resolution) கன்டென்ட்-ஐ பார்க்க உதவும் ஒரு சேவையாகும். தற்போது இந்த புதிய டாடா ப்ளே 4கே சேவையானது, மாதத்திற்கு வெறும் ரூ.99 என்கிற அறிமுக விலையில் கிடைக்கிறது.
ஐபிஎல் (IPL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நேரத்தில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இது பல எண்ணிக்கையிலான டாடா பிளே வாடிக்கையாளர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா ப்ளேவின் வருவாயையும் அதிகரிக்கும்.

இதேபோல டாடா ப்ளே நிறுவனத்தின் கீழ் ரூ.199 மதிப்பிலான இன்னொரு வேல்யூ ஆடட் சேவையும் கிடைக்கிறது. அது டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் (Tata Play Record Premium) என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பதிவு (Record) செய்ய உதவும் ஒரு சேவையாகும்.
டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே நேரத்தில் பல சேனல்களில் இருந்து கன்டென்ட்-ஐ ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் வேறொரு சேனலில் எதையாவது பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பின்னர் பார்க்க வேண்டிய மற்றொரு டிவி நிகழ்ச்சியை ரெக்கார்ட் செய்யலாம்.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரத்தட்டுப்பாடு காரணமாக ஏதோவொரு நிகழ்ச்சியை தவறவிடுவது அல்லது ஒரே நேரத்தில் 2 முக்கியமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது, அதில் ஒன்றை தவறவிடுவது போன்ற சிக்கல்களே ஏற்பாடாது.
டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவைக்கு மாதாந்திர கட்டணம் ரூ.199 ஆகும். இந்த சேவைக்கான சந்தாவை டாடா ப்ளேவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Tata Play Website) அல்லது டாடா ப்ளே மொபைல் ஆப் (Tata Play Mobile App) வழியாக டிஜிட்டல் முறையில் வாங்கலாம்.
ரூ.199 செலுத்திய பிறகு உங்களுக்கு 100 மணிநேர ரெக்கார்டிங் (100Hrs Recording) கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த சேவையின் கேளே நீங்கள் ஒரே நேரத்தில் 20 ப்ரோகிராம்களை பதிவு செய்யலாம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. உங்கள் அக்கவுண்ட் டிஆக்டிவேட் (Account Deactivate) ஆனாலும் கூட ரெக்கார்ட் செய்த ப்ரோகிராம்களை 30 நாட்கள் வரை பார்க்க முடியும்.
டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையானது டாடா பிங்கே பிளஸ் செட்-டாப்-பாக்ஸ் (Tata Play Binge+ STB) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டாடா பிளே நிறுவனத்திடம் டாடா பிளே பேஸிக் ரெக்கார்ட் (Tata Play Basic Record) என்கிற இலவச ரெக்கார்டிங் சந்தாவும் உள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் உங்களால் 25 மணிநேரம் வரையிலான கன்டென்ட்-ஐ மட்டுமே பதிவு செய்ய முடியும்!


Click it and Unblock the Notifications








