வெறும் ரூ.14 கேப்புல Jio வைத்த ஆப்பு.. Vodafone-ன் புதிய முயற்சிக்கு அம்பானி கொடுத்த பல்பு!

|

"மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி" என்பது போல, வோடபோன் ஐடியா (Vodafone Ieda) நிறுவனமானது - ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோவிற்கு (Jio) இடையே சிக்கிக்கொண்டு படாத பாடுபட்டு வருகிறது!

வோடாபோன் ஐடியாவின் நிலை எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்றால் - வெளியேறிக்கொண்டே இருக்கும் சந்தாதாரர்களை காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலையில்.. 5ஜி அறிமுகம் குறித்து வாய் கூட திறக்க முடியாத நிலைமையில் உள்ளது.

வழக்கம் போல.. அம்பானி தான் ஆப்பு வைத்துள்ளார்!

வழக்கம் போல.. அம்பானி தான் ஆப்பு வைத்துள்ளார்!

இதற்கிடையில் வோடாபோன் ஐடியா (Vi) நிறுவனமானது - தன் தலையை காப்பாற்றிக்கொள்ள பல வகையான புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதனொரு பகுதியாக, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் வோடாபோன் ஐடியா செய்த ஒரு சமீபத்திய முயற்சி ஆனது - பல்பு வாங்கி உள்ளது. அந்த முயற்சிக்கும் (வழக்கம் போல) நம்ம அம்பானி தான் ஆப்பு வைத்துள்ளார்?

அதென்ன ஆப்பு? வோடாபோன் ஐடியா என்ன செய்ய முயற்சி செய்தது? அது ஏன் பல்பு வாங்கியது? இதோ விவரங்கள்:

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

விலையை கேட்கும் போது.. நல்லாத்தான் இருக்கு!

விலையை கேட்கும் போது.. நல்லாத்தான் இருக்கு!

மிகவும் மலிவான விலைக்கு 4ஜி டேட்டாவை வழங்கினால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று, Vodafone Idea நிறுவனத்திற்கு யார் யோசனை கூறினார்கள் என்று தெரியவில்லை - வோடபோன் நிறுவனம் ரூ.75 க்கு ஒரு புதிய ப்ரீபெய்டு 4ஜி டேட்டா வவுச்சரை (Prepaid 4G data voucher) அறிமுகம் செய்துள்ளது.

ரூ.75 என்கிற விலையை கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது; ஒரு நல்ல பட்ஜெட் ரீசார்ஜை போலத்தான் தெரிகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டியை கேட்கும் போது தான் - கடுப்பாகிறது!

ஏனென்றால்?

ஏனென்றால்?

வோடாபோன் ஐடியாவின் ரூ.75 திட்டமானது 6ஜிபி 4ஜி டேட்டா என்கிற நல்ல அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது; ஆனால் இந்த திட்டத்தின் மோசமான விஷயம் என்னவென்றால் - இது வெறும் 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; மற்றும் ஆக்டிவ் ரீசார்ஜ் இருந்தால் மட்டுமே வேலை செய்யும்!

நினைவூட்டும் வண்ணம் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் டேட்டா வவுச்சர்கள் ஆனது எந்த விதமான பிரத்யேக வேலிடிட்டியையும் வழங்காது. மாறாக அவைகள் ஆக்டிவ் ஆக இருக்கும் மெயின் பிளானின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

ஆனால் வோடாபோனின் புதிய ரூ.75 பிளான் ஆனது 1 வாரம் என்கிற கெடுவுடன் வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதன் விலை ஒப்பீட்டளவில் அதிகமாகவும் உள்ளது!

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

வெறும் ரூ.14 கேப்புல Jio வைத்த ஆப்பு!

வெறும் ரூ.14 கேப்புல Jio வைத்த ஆப்பு!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடமும் 6ஜிபி என்கிற அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் ஒரு டேட்டா வவுச்சர் உள்ளது. ஆனால் அதன் விலை ரூ.61 மட்டுமே ஆகும்.

அதாவது வோடாபோன் ஐடியாவின் ரூ.75 உடன் ஒப்பிடும் போது, ரூ.14 குறைவான விலைக்கு அதே அளவிலான டேட்டாவை (அதாவது 6ஜிபி டேட்டாவை) ஜியோ வழங்குகிறது; அதுவும் எந்தவிதமான வேலிடிட்டியும் இல்லாமல்!

ஆக, வோடாபோன் ஐடியாவின் இந்த புதிய டேட்டா வவுச்சர் ஆனது - வாடிக்கையாளர்கள் மத்தியில் - எந்த மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ள முடிகிறது!

ரூ.19 மற்றும் ரூ.82-க்கும் கூட டேட்டா ரீசார்ஜ்கள் உள்ளன!

ரூ.19 மற்றும் ரூ.82-க்கும் கூட டேட்டா ரீசார்ஜ்கள் உள்ளன!

வோடாபோன் ஐடியாவிடம் ரூ.75 டேட்டா வவுச்சர் மட்டுமல்ல, 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.82 டேட்டா வவுச்சரும் உள்ளது. ஆனால் அது வெறும் 4ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். அதாவது ரூ.75 வழியாக கிடைக்கும் டேட்டாவை விட குறைவான டேட்டாவையே வழங்குகிறது.

அதே போல வோடாபோன் ஐடியாவிடம் 1ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமொன்றும் உள்ளது. அதன் விலை ரூ.19 ஆகும். இந்த திட்டத்திற்கும் கூட வேலிடிட்டி உள்ளது - அது 1 நாள் அல்லது 24 மணி நேரம் ஆகும். அந்த காலக்கெடுவுக்குள் 1ஜிபி டேட்டாவை பயன்படுத்தாவிட்டால், அது காலாவதி ஆகிவிடும்.

இப்படியெல்லாம் திட்டங்களை வைத்துக்கொண்டு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உடன் மோதினால்.. எப்படி முன்னேற முடியும்? இதுபற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷன் வழியாக பகிரவும்!

Best Mobiles in India

English summary
New 4G Data Voucher From Vodafone Idea Rs 75 Recharge is Far Behind of Jio Rs 61 Plan. Here is How?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X