நம்மள எவன் கேள்வி கேட்க போறான்.. அசால்ட் ஆக இருந்த அம்பானி.. அடி வெளுத்துவிட்ட TRAI.. திடீர் உத்தரவு!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் சரி.. சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல்லும் சரி.. இந்தியா முழுவதும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டோம் என்று பெருமைப்பாடி கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்தியாவில் உள்ள பலரும்.. முக்கிய நகரங்களில் இருந்தும் கூட 4ஜி நெட்வொர்க்கை மட்டுமே பெறுகின்றனர்.
இதேபோல நீங்கள் வசிக்கும் பகுதியிலும் கூட 5ஜி அறிமுகமாகி விட்டது. ஆனால் இன்னமும் உங்களுக்கு 4ஜி நெட்வொர்க் மட்டுமே கிடைக்கிறது என்றால்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மீது செம்ம கடுப்பில் இருப்பது நீங்கள் மட்டுமல்ல, டிராய் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் கூட கடுப்பாகி உள்ளது. இதுதொடர்பான திடீர் உத்தரவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த குழப்பத்திற்கு முடிவு கட்ட, டிராய் (TRAI) ஆனது ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கான புதிய 4ஜி மற்றும் 5ஜி வழிகாட்டுதல்களை (New 4G and 5G guidelines) வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் தத்தம் இணையதளங்களில் நெட்வொர்க் கவரேஜ் மேப்களை (Network coverage maps) காண்பிக்க வேண்டும்
வருகிற ஏப்ரல் - மே மாதத்திற்குள், 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பங்கள் (2G and 3G Technologies) ஆனது படிப்படியாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளின் "கிடைக்கும் தன்மையை" மையமாக கொண்டு, தற்போதுள்ள குவாலிட்டி ஆப் சர்வீஸ் வரையறைகளில் ( (Quality of Service benchmarks) திருத்தம் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

விஐ (Vi) என்று சுருக்கமான அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது இன்னுமும் தனது 5ஜி சேவைகளை நாட்டில் அறிமுகம் செய்யவில்லை என்பதால், டிராய் வெளியிட்டுள்ள இந்த திடீர் உத்தரவு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களை மட்டுமே "இப்போதைக்கு" பாதிக்கும்.
டெலிகாம் துறையில் நடந்த மற்றொரு முக்கிய மாற்றத்தை பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனம் அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை திடீரென உயர்த்தியுள்ளது. முன்னதாக ரூ.118 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் இனிமேல் ரூ.129 க்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இதே போல ரூ.289 திட்டமானது இனிமேல் ரூ.329 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்படி விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் பார்தி ஏர்டெல் நிறுவனமானது விலை உயர்வை (Tariff Hike) முன்னெடுக்க தயங்காது என்று சுனில் பார்தி மிட்டல் கூறி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது, 2 ஏர்டெல் திட்டங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏஆர்பியு (ARPU) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average revenue per user) அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் கூறுகிறது.
ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் விலை உயர்வை (Price Hike) கொண்டு வருமா என்கிற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனால், ஒரு டெலிகாம் நிறுவனம் விலை உயர்வை அறிவித்தால், இன்னொரு நிறுவனமும் அதை பின்தொடர்வது இந்திய டெலிகாம் துறையில் வழக்கம். ஆனால் இந்த வழக்கம் ஒட்டுமொத்த திட்டங்களுக்குமான விலை உயர்வில் மட்டுமே பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு சில திட்டங்களின் மீது மட்டுமே விலை உயர்வு அறிவிக்கப்படுபோது பின்பற்றப்பட்டதில்லை!
இப்போதைக்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவானது, எந்த விதமான ரீசார்ஜ் விலை உயர்வையும் அறிவிக்காது என்று நம்பலாம். ஏனென்றால் இந்நிறுவனம் பல மாதங்களாக பெரிய அளவிலான விலை உயர்வை அறிக்கவில்லை; கூடவே தொடர்ச்சியான முறையில், பல்வேறு திட்டங்களின் மீது ஸ்பெஷல் ஆபர்களை (Special Offers) வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications








