வீட்டு ஹால்ல ஒன்னு.. பெட்ரூம்ல ஒன்னு.. இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு Google ஸ்மார்ட் TV-ஆ? என்ன மாடல்?
இந்தியாவில் உள்ள பட்ஜெட் வாசிகளை ஈர்க்கும் விலையில்.. மிகவும் பிரபலமான மற்றும் பழமையான சீன எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹேயர் (Haier), இந்திய சந்தையில் கே800ஜிடி (K800GT) என்கிற புதிய கூகுள் ஸ்மார்ட் டிவியை (Google Smart TV) அறிமுகப்படுத்தியுள்ளது.
4கே யுஎச்டி ரெசல்யூஷன் (4K UHD Resolution), எச்டிஆர் 10 (HDR10) மற்றும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவியின் விலை மற்றும் விரிவான அம்சங்கள் இதோ:

ஹேயர் கே800ஜிடி கூகுள் ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, ஹேயர் கே800ஜிடி ஸ்மார்ட் டிவியானது பெஸல்லெஸ் ஆல்-ஸ்கிரீன் டிஸ்பிளேவை (Bezel-less all-screen Display) கொண்டுள்ளது, இது விலையை மீறிய மிகவும் நேர்த்தியான மற்றும் நவீன தோற்றத்தை அளிக்கிறது என்றே கூறலாம்,
65 இன்ச், 55 இன்ச், 50 இன்ச் மற்றும் 43 இன்ச் உள்ளிட்ட பல்வேறு ஸ்க்ரீன் அளவுகளில் வெளியாகியுள்ள அனைத்து ஹேயர் கே800ஜிடி கூகுள் ஸ்மார்ட் டிவிகளுமே 4கே (3840 x 2160 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன் கொண்ட யுஎச்டி (UHD) ஆகும். 43-இன்ச் மற்றும் 32-இன்ச் மாடல்களில் ஃபுல்எச்டி (Full HD) விருப்பங்களும் உள்ளன.
எச்டிஆர்10 சான்றிதழை (HDR10 Certification) பெற்றுள்ளதால், இந்த அனைத்து 4கே ஸ்மார்ட் டிவிகளும் ஹை டைனமிக் ரேஞ்ச் கன்டென்டை (High dynamic range content) வழங்க முடியும். முன்னரே குறிப்பிட்டபடி, இதன் எம்இஎம்சி தொழில்நுட்பமானது ஒரிஜினல் ஃபிரேம்களுக்கு (Original Frames) இடையில் எக்ஸ்ட்ரா ஃபிரேம்களை (Extra Frames) புத்திசாலித்தனமாக 'இன்செர்ட்' (Insert) செய்கிறது.
இதன் விளைவாக மென்மையான கன்டென்ட் (Smooth content) மற்றும் வைப்ரென்ட் டிரான்சிஷன்ஸ் (Vibrant transitions) ஏற்படும். குறிப்பாக கேமிங் (Gaming) மற்றும் ரேஸிங் (Racing) போன்ற "வேகமான" கன்டென்ட்டை பார்ப்பதற்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆடியோவை பொறுத்தவரை, இது டால்பி ஆடியோவுடன் 24W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
மல்டி-கோர் கோர்டெக்ஸ்-ஏ55 சிபியு (Multi-core Cortex-A55 CPU) மற்றும் மாலி-ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) மூலம் இயக்கப்படும் இந்த டிவி 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது கூகுள் டிவி ஓஎஸ் ( (Google TV OS) ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இது நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூட்யூப் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆப்களுக்கான அணுகலை வழங்குகிறது.
இந்த டிவியில் கூகுள் அசிஸ்டண்ட்டிற்கான (Google Assistant) ஆதரவும் உள்ளது. அதாவது ஹேயர் கே800ஜிடி கூகுள் ஸ்மார்ட் டிவியை உங்களால் வாய்ஸ் கண்ட்ரோல் (Voice Control) செய்ய முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது க்ரோம்காஸ்ட் (Chromecast), ப்ளூடூத் 5.1 மற்றும் வைஃபை உள்ளிட்ட பல விருப்பங்களுடன் வருகிறது.
ஐ/ஓ விருப்பங்களை (I/O Options) பொறுத்தவரை, இது யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் எச்டிஎம்ஐ 2.1 ஆகியவைகளை வழங்குகிறது. எச்டிஎம்ஐ 2.1 என்பது டிவியை கேமிங் கன்சோல்கள் (Gaming Consoles) மற்றும் கிராபிக்ஸ் கார்டுகளுடன் (Graphics Card) இணைக்கவும், வினாடிக்கு 144 பிரேம்களில் 4கே ரெசல்யூஷனில் கேம்களை விளையாடவும் அனுமதிக்கிறது.
ஹேயர் கே800ஜிடி கூகுள் ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் விற்பனை: ஹேயர் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் டிவி ஆனது ரூ.16,990 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது. இது ஹேயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இ-காமர்ஸ் ஸ்டோர் (Haier e-commerce store ) மற்றும் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








