வந்தது 30-நாள் விதி.. Gas சிலிண்டர் ரீஃபில் செய்ய, ரிட்டர்ன் செய்ய புது ரூல்ஸ்.. என்ன மாறுகிறது?
இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பு மற்றும் பிஎன்ஜி (PNG) இணைப்பு ஆகிய இரண்டையும் வைத்திருக்கும் குடும்பங்களுக்காக இந்திய அரசு ஒரு முக்கிய புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மே 25 அன்று அறிவிக்கப்பட்ட 'திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (விநியோகம் மற்றும் பகிர்வு ஒழுங்குமுறை) திருத்த ஆணை 2026-ன் கீழ், பிஎன்ஜி இணைப்பை பெறும் குடும்பங்கள் தங்கள் எல்பிஜி இணைப்பை 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
அந்த புதிய 30-நாள் விதி என்ன? பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள், இந்திய குடும்பங்கள் தங்கள் இண்டேன் (Indane), ஹெச்பி (HP) மற்றும் பாரத் கேஸ் (BharatGas) இணைப்புகளை நிறுத்த வேண்டும் என்று இந்த புதிய விதிமுறை கட்டாயம் ஆக்குகிறது.

உதாரணமாக, ஜூன் 6 அன்று உங்கள் வீட்டில் பிஎன்ஜி இணைப்பு நிறுவப்பட்டால், ஜூலை 6 ஆம் தேதிக்குள் உங்கள் எல்பிஜி இணைப்பை நீங்கள் ரத்து செய்ய வேண்டும். சமையலறையில் பிஎன்ஜி இணைப்பு நிறுவப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களால் எல்பிஜி-யை வாங்கவோ அல்லது ரீஃபில் (refill) செய்யவோ முடியாது என்பதையும் இது குறிக்கிறது. "ஒரு குடும்பம், ஒரு எரிவாயு இணைப்பு" என்ற மாதிரியின் ஒரு பகுதியாக இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இதன் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை தவிர்ப்பது, மானியங்களை சரியாக நிர்வகிப்பது, குழாய் வழி எரிவாயு வசதி இல்லாத கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புறப் பகுதிகளுக்குச் சிலிண்டர் விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் சமையல் எரிவாயுவுக்கு வேறு மாற்று வழிகள் இல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, உண்மையாகவே எல்பிஜி தேவைப்படும் பயனர்களுக்கு அதை சென்றடைய செய்வது ஆகியவை நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளன.
உங்கள் எல்பிஜி இணைப்பை ஆன்லைன் வழியாக ரிட்டர்ன் செய்வது எப்படி? தங்கள் எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்: முதலில் உங்கள் எல்பிஜி வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப்பில் லாக்-இன் செய்யவும்
பின்னர் விநியோகஸ்தரை நேரில் சந்திக்காமல், ரத்து செய்யும் செயல்முறையை தொடங்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், குறிப்பு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். ஒப்படைப்புக்கு விண்ணப்பித்த பிறகு, உங்கள் விநியோகஸ்தர், உங்கள் வீட்டிலிருந்து எல்பிஜி சிலிண்டரை சேகரிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்களை அனுப்புவார். நீங்கள் mypngd.in மூலமாகவும் உங்கள் எல்பிஜி இணைப்பை ஆன்லைனில் ஒப்படைக்கலாம்.
ரிலீஃப் ப்ரொவிஷன் ற்றும் டிரான்ஸ்பர் வவுச்சர்: தங்கள் எல்பிஜி இணைப்பை திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள், பிஎன்ஜி இல்லாத பகுதிக்கு குடிபெயர்ந்தால், எதிர்காலத்தில் தங்கள் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதற்காக ஒரு மாற்று வவுச்சரை பெறலாம்.
எல்பிஜி விநியோகத்திற்கு ஓடிபி இப்போது கட்டாயம்: ஓடிபி அடிப்படையிலான எல்பிஜி விநியோகத்தை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வராவிட்டால், உங்களுக்கு எல்பிஜி விநியோகம் கிடைக்காது.
எல்பிஜி இகேஒய்சி காலக்கெடு விரைவில் வருகிறது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், உஜ்வாலா யோஜனா பயனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் தங்கள் இகேஒய்சி-ஐ முடிக்குமாறு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இகேஒய்சி செய்யப்படாவிட்டால், உங்கள் இன்டேன் கேஸ், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் மானியத்தை நீங்கள் இழக்க நேரிடும். வாடிக்கையாளர்கள் இந்தியன்ஆயில் ஒன் ஆப், தங்கள் இன்டேன் விநியோகஸ்தர் அல்லது தங்கள் எல்பிஜி விநியோக பணியாளர்கள் மூலம் இகேஒய்சி-ஐ முடிக்கலாம்.


Click it and Unblock the Notifications