சத்தமில்லாமல் 21 நபர்களை நியமித்த பிரதமர் மோடி: என்ன செய்ய போறாங்க தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி மூலம் நேற்று 21 தனி நபர் கொண்ட அறிவியல், தெழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

By Sharath
|

பிரதமர் நரேந்திர மோடி மூலம் நேற்று 21 தனி நபர் கொண்ட அறிவியல், தெழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு அரசாங்கத்தின் முக்கிய அறிவியல் ஆலோசகர் திரு.கே. விஜய் ராகவன் தலையில் செயல்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

பிரதமரின் ஆலோசகர் குழு

பிரதமரின் ஆலோசகர் குழு

இந்த புதிய ஆலோசகர் குழுவிற்கு "பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு(Prime Minister's Science, Technology & Innovation Advisory Council-PMSTIAC)" என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக-பொருளாதார பிரச்சினை

சமூக-பொருளாதார பிரச்சினை

இந்த புதிய ஆலோசகர் குழு, இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்வதற்கும் ஆலோசனைகள் வழங்குமென்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

17 முக்கிய பணிகள்

17 முக்கிய பணிகள்

அதுமட்டுமில்லாமல் நகரம் சார்ந்த அனைத்து ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த அஆலோசகர் குழு ஆலோசனைகளை வழங்குமென்று தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை குழுவின் 17 முக்கிய பணிகளில் ஒன்றாக இதுவும் இருக்குமென்று மோடி தெரிவித்தார்.

முக்கிய உறுப்பினர்கள்

முக்கிய உறுப்பினர்கள்

தலைவர் உட்பட 8 முக்கிய உறுப்பினர்கள் மற்றும் 12 சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்தி

கூடுதல் செய்தி

முக்கிய உறுப்பினராகக் கணித வல்லுநர் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான மஞ்சுள் பார்க்கவா நிர்ணயிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இஸ்ரோவின் தலைவர் எஸ்.கிரண் குமார் மற்றும் தொழிலதிபர் மற்றும் பாரதத்தின் ஃபோர்ஜ் நிறுவனத்தின் எம்.டி- திரு. பாபா கல்யாணி உள்ளிட்டோர் இந்தப் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைமுறைக்கானல் ஆலோசகர் குழுவின் உறுப்பினர்கள் என்பது கூடுதல் செய்தி.

Best Mobiles in India

English summary
New 21-member panel to advise PM on science, tech & innovations : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X