புது PS5 ஸ்லிம் மாடல் அறிமுகம்.. 1TB ஸ்டோரேஜ் உடன் ரெடி.. ஆனால் 1TB முழுசா கிடைக்காது.. ஏன்?
சோனி (Sony) சமீபத்தில் ப்ளேஸ்டேஷன் 5 (PlayStation 5) இன் புதிய ஸ்லிம் எடிஷன் மாடலை அறிவித்தது. இது 1TB SSD உடன் வரும் என்று கூறி நிறுவனம் கேமிங் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தற்போது கிடைக்கும் PS5 மாடலின் விலையில் (PS5 price) புதிய ஸ்லிம் எடிஷன் கூடுதல் ஸ்டோரேஜ்ஜை (PS5 Slim Storage) வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம், எந்த பிளேஸ்டேஷன் மாடல் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்கும் என்ற விபரத்தை பற்றி பார்க்கலாம். புதிய ப்ளேஸ்டேஷன் 5 ஸ்லிம் எடிஷன் (PlayStation 5 Slim Edition) பற்றிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் விபரங்கள் இதோ.

புதிய ப்ளேஸ்டேஷன் 5 ஸ்லிம் எடிஷன் 1TB ஸ்டோரேஜ் (PlayStation 5 Slim 1TB SSD storage) உடன் வெளிவரும் என்று சோனி அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஸ்டோரேஜ் கேம்ஸ்கள் (games) மற்றும் ஆப்ஸ்களுக்கு (apps) மற்றும் அனைத்து திறன்களும் தேவையான முழுமையான ஸ்டோரேஜ் அனுபவத்தை தரும் கேமர்கள் எதிர்பார்க்கக்கூடாது.
காரணம், சமீபத்திய அறிக்கைகளின் படி, புதிய PS5 ஸ்லிம் சாதனம், அதன் கன்சோல் உள்ளடக்கம் மற்றும் கேம்களுக்கு 808GB அளவு கொண்ட ஸ்டோரேஜ்ஜை மட்டுமே வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. என்ன தான் ப்ளேஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் 1TB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டாலும், பயனர்களால் இதில் 808GB ஸ்டோரேஜ் அளவை மட்டுமே உண்மையாக பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட PS5 ஸ்லிம் சிறியதாகவும், இலகுவாகவும் இருப்பது மட்டுமல்லாமல், மேம்படுத்தப்பட்ட ஸ்டோரேஜ் இடத்தையும் வழங்கி தனித்து நிற்கிறது. தெரியத்தவர்களுக்கு, அசல் பிளேஸ்டேஷன் 5 கன்சோல் (PlayStation 5 Console) 825 ஜிபி SSD ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. இப்போது, PS5 Slim எடிஷன் 1TB அளவு கொண்ட ஸ்டோரேஜ் உடன் மேம்பட்டு உயர் தொழில் தரநிலைக்கு மாறுகிறது. இருப்பினும், சிலர் ஸ்டோரேஜ் எண்களால் குழப்பமடைந்துள்ளனர்.
PS5 இன் இயக்க முறைமை மற்றும் உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு சில அளவு ஸ்டோரேஜ் தேவைப்படுகிறது. இதனால் தான், PS5 வாங்கி பயன்படுத்தும் போது ஸ்டோரேஜ் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், தற்போதுள்ள PS5 பேப்பரில் 825GB என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது சரியாக 667GB ஸ்டோரேஜ் இடத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வழங்குகிறது.
இதேபோன்ற கூற்று தான் புதிய PS5 ஸ்லிம் மாடலிலும் பின்பற்றப்படும். சமீபத்திய கசிவுகள் படி, புதிய PS5 ஸ்லிம் கன்சோல்கள் 808ஜிபி பயன்படுத்தக்கூடிய ஸ்டோரேஜ்ஜை கொண்டிருக்கும் என்பதை இது தெளிவாக குறிக்கிறது. தற்போதைய PS5 மாடல்களுடன் ஒப்பிடும்போது புதிய PS5 ஸ்லிம் கூடுதலாக 141GB ஸ்டோரேஜ் இடத்தை வழங்கக்கூடும் என்று இது அறிவுறுத்துகிறது.
கேமர்கள் முழு 1TB ஸ்டோரேஜ் (1TB storage) அளவை பெறமாட்டார்கள் என்பது ஒரு மந்தமான விஷயம் என்றாலும், முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக 141GB ஸ்டோரேஜ் கிடைப்பது நிச்சயமாக ஒரு நன்மை பயக்கும் மேம்பாடு ஆகும். குறிப்பாக டிஸ்க் டிரைவ் கொண்ட பதிப்பிற்கு அதே விலையை நாங்கள் செலுத்துகிறோம். இது கேமர்களுக்கு அவர்களின் விருப்பமான கேம்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களைச் சேமிக்க அதிக இடவசதியை வழங்கும்.
புதிய PS5 ஸ்லிம் மாடல் SSD ஸ்டோரேஜ் கூடுதல் விரிவாக்கத்தை கூட ஆதரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, கேமர்களுக்கு அதிக ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், கன்சோலில் தங்கள் சொந்த NVMe SSD ஐச் சேர்க்கலாம். புதிய PS5 ஸ்லிம் 2023 இன் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு பதிப்புகளில் கிடைக்கும். இது அல்ட்ரா HD ப்ளூ-ரே டிஸ்க் டிரைவ் மற்றும் எதுவும் இல்லாமல் வழக்கம் போல டிஜிட்டல் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








