Asus அசத்தல்.. 14-இன்ச், 16-இன்ச்.. AMD Ryzen AI 7 350 ப்ராசஸர்.. 2 புதிய ExpertBook P3 லேப்டாப்கள் அறிமுகம்!
கம்ப்யுடெக்ஸ் 2025 (Computex 2025) நிகழ்வில் ஆசஸ் (Asus) நிறுவனம், அதன் எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸின் (ExpertBook P3 Series) கீழ் 2 புதிய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸில் 14-இன்ச் மற்றும் 16-இன்ச் டிஸ்பிளேக்கள் கொண்ட 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
ஆசஸ் எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸ்-ன் முக்கிய அம்சங்கள்: ஆசஸ் நிறுவனத்தின் இந்த புதிய எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸ் ஆனது ஏஎம்டி ரைஸன் ஏஐ 7 350 ப்ராசஸர் (AMD Ryzen AI 7 350 Processor) பொருத்தப்பட்டுள்ளது. இது 32ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 2 மாடல்களும் வின்டோஸ் ஹலோ (Windows Hello) வழியாக பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஆதரவுடன் 1080பி கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்கள் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டில் 65W இல் சார்ஜ் செய்யக்கூடிய 70Wh லித்தியம் பாலிமர் பேட்டரியை கொண்டுள்ளன.
ஆசஸ் எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸ்-ன் விரிவானஅம்சங்கள்:
- ஆக்டா கோர் ஏஎம்டி ரைஸன் ஏஐ 7 350 ப்ராசஸர்
- 40 டெரா ஆப்ஷன்ஸ் பெர் செக்கண்ட் (TOPS)
- ஏஎம்டி ரேடியோன் (AMD Radeon) கிராபிக்ஸ்
- ஏஎம்டி ரைஸன் ஏஐ என்பியு (AMD Ryzen AI NPU)
- 32GB வரை DDR5 RAM (இதை 64GB ஆக மேம்படுத்தலாம்)
- PM3406CKA மாடலில் 14-இன்ச் WQXGA (2,560×1,600 பிக்சல்ஸ்) LED பேக்லிட் டிஸ்பிளே உள்ளது.
- 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 86% sRGB கலர் கேமட் கவரேஜ்
- PM3606CKA மாடலில் மேற்கண்ட அதே அம்சங்களுடன் பெரிய 16-இன்ச் WQXGA (2,560×1,600 பிக்சல்ஸ்) டிஸ்பிளே உள்ளது.
- 1டிபி SSD
- இரண்டு USB 3.2 ஜென் 1 Type-A போர்ட்கள்
- இரண்டு USB 3.2 ஜென் 2 Type-C போர்ட்கள்
- ஒரு HDMI 2.1 TMDS போர்ட்
- ஒரு Gigabit Ethernet போர்ட்
- ஒரு 3.5mm காம்போ ஆடியோ ஜாக்
- வைஃபை 7
- ப்ளூடூத் 5.4
- 70Wh லித்தியம் பாலிமர் பேட்டரி
- USB Type-C போர்ட்களில் ஒன்றின் மூலம் 65W சார்ஜிங்கை ஆதரிக்கிறது
- 14-இன்ச் மாடல் 312.7×227.1×18மிமீ மற்றும் 1.36 கிலோ எடையை கொண்டுள்ளது
- 16-இன்ச் மாடல் 358.4×253.5×18மிமீ மற்றும் 1.79 கிலோ எடையை கொண்டுள்ளது
ஆசஸ் எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸ்-ன் விலை விவரங்கள்: ஆசஸ் நிறுவனம் அதன் எக்ஸ்பெர்ட்புக் பி3 சீரீஸ்-ன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 14-இன்ச் மற்றும் 16-இன்ச் லேப்டாப் மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் மற்றும் விற்பனை குறித்த விவரங்களை இன்னும் வெளியிடப்படவில்லை; அதுகுறித்த தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.
முன்னதாக ஆசஸ் நிறுவனம் அதன் எக்ஸ்பர்ட்புக் பி சீரீஸின் கீழ் 3 புதிய லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது . அவைகள் - ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1 (Asus ExpertBook P1), ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி3 (Asus ExpertBook P3) மற்றும் ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி5 (Asus ExpertBook P5) மாடல்கள் ஆகும்.
ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1, எக்ஸ்பர்ட்புக் பி3 மற்றும் எக்ஸ்பர்ட்புக் பி5 லேப்டாப் மாடல்களின் விலை (Asus ExpertBook P1, ExpertBook P3 and ExpertBook P45 Price in India) விவரங்கள்: ஆசஸ் எக்ஸ்பர்ட்புக் பி1, பி3 மற்றும் பி5 ஆகியவைகள் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். இவைகள் முறையே ரூ.39,990, ரூ.64,990 மற்றும் ரூ.94,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








