யாரு விடுவா? இவ்ளோ கம்மி விலைக்கு 20000mAh பவர் பேங்க் கிடைச்சா.. 22.5W சார்ஜிங் ஸ்பீட் வேற!
எப்போது நோக்கியா மொபைல் போன்கள் புழக்கத்தில் இல்லாமல் போனதோ.. அப்போது தொடங்கி "பேட்டரி லோ" (Battery Low) என்கிற பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லமால் போய் விட்டது. என்னதான் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருந்தாலும் கூட ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சர்ரென்று கரைந்து ஓடுவதை தடுக்கவே முடியவில்லை!
குறிப்பாக ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியாத இடங்களில் அல்லது சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளும் போது.. இரண்டு வகையான எண்ணங்கள் தோன்றும் - "பேசாமல் நோக்கியா 1100 ஒன்று வாங்கி விடலாம்!" என்கிற எண்ணம் எழும். இல்லையென்றால்.. "பாக்கெட்டை கடிக்காத பட்ஜெட் விலையில 20000எம்ஏஎச் கேப்பாசிட்டியோட ஒரு நல்ல பவர் பேங்க் வாங்கணும்" என்று தோன்றும்!

ஒருவேளை உங்களுக்கும் இதே எண்ணம் இருந்தால்.. அதாவது பட்ஜெட் விலையில் ஒரு நல்ல பவர் பேங்க்கை வாங்கு வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு இருந்தால்.. 22.5W வரையிலான சார்ஜிங் வேகத்துடன் இந்திய நிறுவனமான போட் (Boat) அறிமுகம் செய்துள்ள இந்த 2 புதிய பவர் பேங்குகளும் உங்களுக்கானது தான்!
போட் எனர்ஜிஷ்ரூம் பிபி300 (Energyshroom PB300) மற்றும் போட் எனர்ஜிஷ்ரூம் பிபி400 (Energyshroom PB400) என்கிற மாடல் பெயர்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 புதிய பவர் பேங்குகளின் கேப்பாசிட்டி என்ன? விலை நிர்ணயம் என்ன? இவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
எனர்ஜிஷ்ரூம் பிபி300 பவர் பேங்கின் முக்கிய அம்சங்கள்: 10000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் இந்த பவர் பேங்க் ஆனது 22.5W வரையிலான சார்ஜிங் வேகம் மற்றும் உலகளாவிய இணக்கத்தன்மையுடன் (Universal Compatibility) வருகிறது. இந்த பவர் பேங்க் 12-அடுக்கு ஸ்மார்ட் ஐசி பாதுகாப்புடன் (12-layer smart IC protection) வருகிறது.
அதாவது இந்த பவர் பேங்கில் பேட்டரி ஓவர்சார்ஜ், ஓவர்-டிஸ்சார்ஜ், ஷார்ட் சர்க்யூட்டுகள் மற்றும் பலவற்றிற்கு எதிரான பாதுகாப்புகள் உள்ளது. எனர்ஜிஷ்ரூம் பிபி300 மாடலில் இரண்டு யூஎஸ்பி-ஏ அவுட்புட் போர்ட்கள், ஒரு டைப்-சி டூ-வே போர்ட் மற்றும் ஒரு மைக்ரோ-யூஎஸ்பி இன்புட் போர்ட் உள்ளன. அதாவது இது ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களுக்கு இடமளிக்கும். கடைசியாக இந்த பவர் பேங்க் 255 கிராம் எடையும் 16 மிமீ அகலத்தையும் கொண்டுள்ளது.
எனர்ஜிஷ்ரூம் பிபி400 பவர் பேங்கின் முக்கிய அம்சங்கள்: 20,000எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரியுடன் வரும் போர்ட்டபிள் பவர் பேங்க் ஆனது எனர்ஜிஷ்ரூம் பிபி300 மாடலை போலவே 12-லேயர் ஸ்மார்ட் ஐசி பாதுகாப்பு, 22.5W வரையிலான சார்ஜிங் வேகம் மற்றும் உலகளாவிய இணக்கத்தன்மை ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதன் எடை 449 கிராம் ஆகும்.
இந்த பவர் பேங்க்கிலும் இரண்டு யூஎஸ்பி-ஏ அவுட்புட் போர்ட்கள், ஒரு டைப்-சி டூ-வே போர்ட் மற்றும் ஒரு மைக்ரோ-யூஎஸ்பி இன்புட் போர்ட் உள்ளன. மேலும் இந்த பவர் பேங்கில் டூ-வே சார்ஜிங் அம்சமும் (Two-way charging feature) உள்ளது. இதன் கீழ் நீங்கள் மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்யும் நேரத்தில் பவர் பேங்கையும் சார்ஜ் செய்ய முடியும்.
போட் எனர்ஜிஷ்ரூம் பிபி300 பவர் பேங்க்கின் விலை: இது ஒரு 10000எம்ஏஎச் பவர் பேங்க் ஆகும். இது ரூ.1199 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. கார்பன் பிளாக் மற்றும் ஸ்டீல் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் இணையதளத்தின் (Boat Website) வழியாக வாங்க கிடைக்கிறது.
போட் எனர்ஜிஷ்ரூம் பிபி400 பவர் பேங்க்கின் விலை: இது ஒரு 20000எம்ஏஎச் பவர் பேங்க் ஆகும். இது ரூ.1699 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. எனர்ஜிஷ்ரூம் பிபி400 மாடலை போலவே இதுவும், கார்பன் பிளாக் மற்றும் ஸ்டீல் ப்ளூ கலர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் பிளிப்கார்ட் மற்றும் போட்-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








