ஆதார் உடன் வங்கிக்கணக்குகளை இணைக்க உத்தரவிடவில்லை: ரிசர்வ் வங்கி பல்டி.!

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அதற்கான கடைசி தேதி 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

ஆதார் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இந்தியா வந்துவிட்டது, மேலும் அனைத்து அலுவலகங்களிலும் ஆதார் அட்டை தான் முதலில் தேவைப்படுகிறது, மேலும் சிலிண்டர் மானியங்கள் முதல் முதியோர் ஓய்வூதியம் வரை அனைத்திற்க்கும் ஆதார் அவசியமாக உள்ளது.

ஆதார் உடன் வங்கிக்கணக்குகளை இணைக்க உத்தரவிடவில்லை: ரிசர்வ் வங்கி பல்டி

அரசு சேவைகளுக்கு ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தினாலும், பல அரசு அலுவலகங்களில் இப்போது கூட ஆதார் தேவைப்படுகிறது.

உச்சநீதிமன்றம் ஆதாருக்கு எதிராக தீர்ப்பை வழங்கியிருந்தாலும் இந்த மாத இறுதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது நிச்சயம் செய்தே ஆக வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் நலத்திட்டங்கள்:

அரசின் நலத்திட்டங்கள்:

அரசின் நலத்திட்டங்களைப் பெறுதல் மற்றும் பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டையான ஆதார் கார்டை, மத்திய அரசு வழங்கியிருக்கிறது. ஆதார் அட்டை அனைவருக்கும் அவசியம்தானா? அரசு கட்டாயப்படுத்துவது சரிதானா?' எனப் பல கேள்விகள் எழுந்தாலும், அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

 ஆதார்:

ஆதார்:

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். ஆதாரில் கைரேகை. கண்ணின் விமித்திரை. இவற்றுடன் சேர்த்து பெயர். முகவரி போன்ற அனைத்து தகவலும் இடம்பெற்றுள்ளது.

 அடையாளங்கள்:

அடையாளங்கள்:

ஆதா் அடையாள அட்டையை ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பெற முடியாது. அங்க அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் இருப்பதால் ஆதாரில் கோல்மால் செய்ய முடியாது.

வங்கிக் கணக்கு:

வங்கிக் கணக்கு:

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அதற்கான கடைசி தேதி 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இனைத்துக் கொள்ளலாம்.

 அரசின் மானியங்கள்:

அரசின் மானியங்கள்:

பொதுமக்கள் அரசின் மானியங்களை பெற ஆதாரை கட்டாயப்படுத்த கூடாது என்ன உச்சநீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

யோகேஷ் சாகேல் :

யோகேஷ் சாகேல் :

யோகேஷ் சாகேல் என்பவர் விண்ப்பித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளிவந்த தகவலின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி கூறியது அனைத்து வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயமில்லை என்று தெளிவுபடுத்துகிறது.

2017 ஜூன் 1 :

2017 ஜூன் 1 :

2017 ஜூன் 1 -ம் தேதி வெளிவந்த(GSR 538) அரசு அறிவிப்பில் வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்க கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க உத்தரவு வெளியிடப்படவில்லை
என தெரிவித்தது.

சென்ட்ரல் பேங்க் ;

சென்ட்ரல் பேங்க் ;

வங்கி கணக்குகள் உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைப்பது பற்றி இதுவரை எந்த அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்று சென்ட்ரல் பேங்க் தெரிவித்துள்ளது .

ஆதாரம் : தி லாஜிக்கல் இந்தியன்

Best Mobiles in India

English summary
Never Passed Order To Link Bank Accounts With Aadhaar RBI In RTI Reply; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X